இந்தியாவின் முதல் பெண் ராணுவ அமைச்சர் யார் ?

கன்னியாகுமரியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திட்டங்களை துவங்கி வைத்த பின்பு இந்தியாவின் முதல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் இருந்து வந்துள்ளார் எனக் கூறினார்.

இதேபோன்று பாகிஸ்தான் சென்று மீண்டு வந்த விங் கம்மண்டேர் அபிநந்தன் தமிழகத்தில் இருந்து வந்தவர் என்றும், இதற்காக பெருமைப்படுவதாகவும் பிரதமர் கூறி இருந்தார். பிரதமர் மோடியின் இந்த கருத்து, பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்வீட்ட்டர் பக்கதிலும் வெளியாகி இருந்தது.

பிரதமர் மோடி நிர்மலா சீதாராமன் அவர்கள் தான் இந்தியாவின் முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் என்று கூறியது தவறான தகவல் என்று காங்கிரஸ் தன் ட்வீட்டர் கருத்து தெரிவித்து இருந்தது.

அதில், இந்தியாவின் முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் மறைந்த இந்திரா காந்தி ஆவார். நீங்கள் படித்த அரசியல் அறிவியல் பட்டத்தில் அது தொடர்பான பிரிவை படிக்க மறந்து விட்டீர்களா ? என பதிவிட்டு இருந்தனர்.

இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்திரா காந்தி ஆவார். அவர் 1975, 1980-1982 என இருமுறை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

இந்தியாவின் முதல் ராணுவ அமைச்சர் இந்திரா காந்தி என்பதை அறியாமல் நிர்மலா சீதாராமன் என கூறிவிட்டார் பிரதமர் மோடி.

Ministry of Defence

Brush Up Your History, Indira Gandhi India’s First Woman Defence Minister: Congress To PM Modi

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம்.
Donation pls, என்றவுடன் ஆகா காசு கேட்கிறார்களே என்றெல்லாம் நினைக்க வேண்டாம் . எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை நிதி உதவியாக செய்யலாம். உங்களின் (மக்களின்) பத்திரிகையாக இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா/ உதவியாக தரலாம்.

Donate with

Please complete the required fields.
Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close