கலப்பு திருமணத்தை ஊக்கப்படுத்த வேண்டும்.. வைரலாகும் எல்.முருகனின் பழைய வீடியோ!

திமுகவின் தேர்தல் அறிக்கையில் சாதி மறுத்து கலப்பு திருமணம் செய்யும் மணமக்களில் ஒருவர் ஆதி திராவிடர் அல்லது மலைவாழ் மக்கள் பிரிவை சேர்ந்தவராக இருந்தால் உதவித்தொகையாக 60,000 ரூபாய் மற்றும் தாலிக்கு 1 பவுன் தங்கம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement

மேலும் படிக்க :  திமுக வாக்குறுதி நாடகக் காதலுக்கு அல்ல, கலப்பு திருமணத்திற்கு !

இத்தகைய அறிவிப்பு, உயர் சமூகத்தைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்வதற்கு பணம் வழங்குவதாக குறிப்பிட்ட சாதி பெயர்களை குறிப்பிட்டு தவறானப் பதிவுகள் சமூக வலைதளங்களில், சில செய்தி ஊடகத்திலும் பரப்பப்பட்டது.

இதற்கிடையில், கலப்பு திருமணம் செய்வதை ஊக்கப்படுத்த வேண்டும் என தமிழக பாஜகவின் தலைவர் எல்.முருகன் பேசிய பழைய வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

2018-ம் ஆண்டு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக இருந்த எல்.முருகன் பாஜக பிரமுகர் இல்ல திருமணத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

” நாட்டிலேயே ஹரியானா மாநிலத்தில் அதிக அளவில் கலப்பு திருமணங்களை பெற்றோர்களே முன்வந்து நடத்துகிறார்கள். ஹரியானா அரசாங்கம் 2.5 லட்சத்தை ஊக்கத் தொகையாக வழங்குகிறார்கள். ஆனால், தமிழகத்தில் 50,000 மட்டுமே வழங்கிறார்கள், அதை அதிகரிக்க வேண்டும். கலப்பு திருமணத்தை ஊக்கப்படுத்த வேண்டும். ஒன்னிரண்டு கலப்பு திருமணங்களில் பிரச்சனைகள் எழுகிறது. அந்த பிரச்சனைகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் ” எனக் கேட்டு கொண்டார்.

Advertisement

தமிழகத்தில் சாதி மறுப்பு கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத் தொகையை ரூ50,000ல் இருந்து அதிகரிக்க வேண்டும் என எல்.முருகன் 2018ல் பேசி இருக்கிறார். திமுக வாக்குறுதியில் கலப்பு திருமணத்திற்கு ஊக்கத் தொகையை ரூ60,000 ஆகவும், தாலிக்கு 1 பவுன் தங்கம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், சாதி மறுப்பு திருமணங்களில், மணமக்களில் ஒருவர் பட்டியலினத்தவராக இருந்தால் 3 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மத்திய அரசின் தரப்பில் சாதி மறுத்து கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு அம்பேத்கர் பெயரில் நிதியுதவி அளிக்கும் திட்டமும்  செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Links : 

Fund For Intercaste Marriages Should be Increased – Murugan

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button