தற்காத்து கொள்ள உதவும் IPC பிரிவு 100 பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

பொள்ளாச்சி விவகாரம் தமிழகம் முழுவதும் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் எதிர் தாக்குதல் செய்ய இந்திய சட்டம் IPC Section 100 அனுமதிப்பதாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆபத்தான நிலையில் ஒரு நபர் தன்னை தற்காத்துக் கொள்ள எதிர் தாக்குதல் புரியும் உரிமையை வழங்குகிறது.

அதன்படி “ IPC Section 100 ” என்ற பிரிவின் கீழ், உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில், கடத்தல், ஆசிட் தாக்குதல் அல்லது ஆசிட் தாக்குதல் முயற்சியின் போது, பாலியல் வன்புணர்வு போன்ற ஆபத்தான நிலையில் எதிர் தாக்குதல் சட்டப்படி அனுமதிக்கப்படுகிறது. இது போன்ற உயிர்க்கு ஆபத்தான தாக்குதலின் போது எதிராளிக்கு மரணம் ஏற்பட்டாலோ, உடற்காயங்கள் ஏற்பட்டாலோ அது சட்டப்படி குற்றமாகாது. இந்த உரிமையை பெண்கள் மட்டுமல்லாமல் இந்திய குடிமகன் அனைவருக்குமானது என இந்திய அரசியலமைப்பு சட்டம் வரையறுக்கிறது.

தற்போதைய சமூகம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையாக மாறி வருவதை பெற்றோர்களும், பெண்களுமே புரிந்து கொள்ள வேண்டும். என் சுதந்திரம் என பேசுபவர்கள் குறைந்தபட்சம் உங்களின் பாதுகாப்பை உறுதிச் செய்துக் கொள்ளுங்கள்.

சட்டம் அறிந்து கொள்ளுங்கள் ! உங்களுக்கான பாதுகாப்பை நீங்களே உருவாக்கி கொள்ளுங்கள் !

Please complete the required fields.
Back to top button