ஜார்கண்டில் பணிப்பெண்ணை பல ஆண்டுகளாக கொடுமைப்படுத்திய பாஜக நிர்வாகி.. வைரலாகும் வீடியோ !

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் சீமா பத்ரா என்பவர் தனது வீட்டில் வேலை செய்த சுனிதா என்ற பணிப் பெண்ணை அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியதாக அப்பெண் பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
रांची में रिटायर्ड IAS महेश्वर पात्रा की पत्नी भाजपा नेता सीमा पात्रा ने आदिवासी महिला सुनीता खाखा को 8 साल तक अपने घर में कैद कर सूरज भी नहीं देखने दिया। सुनीता से जीभ से फर्श साफ करवाया। पेशाब चटाया। रॉड से दांत तोड़ डाले। गर्म तबे से चेहरा जला डाला। शर्मनाक। #ArrestSeemaPatra pic.twitter.com/oTdJXMINJ1
— Hansraj Meena (@HansrajMeena) August 30, 2022
29 வயதான சுனிதா என்ற பெண் மருத்துவமனை படுக்கையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பேசும் வீடியோவில் அப்பெண்ணிற்கு பற்கள் பல காணவில்லை, அந்தப் பெண்ணால் சரியாக உட்காரக் கூட முடியவில்லை. அப்பெண்ணின் உடலில் உள்ள காயம் பலமுறை மீண்டும் தாக்கப்பட்ட சம்பவங்களாக இருக்கக்கூடும் என்று உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சீமா பாத்ரா பாஜகவின் மகளிர் பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்தார். அவரது கணவர் மகேஷ்வர் பத்ரா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி.
சுனிதா ஜார்கண்டில் உள்ள கும்லாவைச் சேர்ந்தவர். அப்பெண் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சீமா பத்ராவிடம் பணியில் சேர்ந்துள்ளார். சீமா பாத்ராவின் வீட்டில் அடுத்த ஆறு ஆண்டுகளில் பல கஷ்டங்களை அனுபவித்து உள்ளதாகவும், சீமா பத்ராவால் கொடூரமான முறையில் சித்ரவதைக்கு ஆளானதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
தன்னுடைய பற்கள் அடித்து உடைக்கப்பட்டதாகவும், தன்னை தரையிலிருந்து சிறுநீரை நாவினால் சுத்தம் செய்யும்படி வேலை செய்ய வைத்தார் என வீடியோவில் பேசியுள்ளதாக என்டிடிவி செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
சுனிதாவின் நிலையைக் குறித்து சீமா பத்ராவின் மகன் ஆயுஷ்மான் தான் தனது நண்பரின் உதவியுடன் காவல்துறையினரிடம் புகார் அளித்து சுனிதாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தற்போது சுனிதா ராஞ்சியில் உள்ள RIMSல் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாதிகப்பட்ட பெண் சுனிதா பேசிய வீடியோ வைரலாக பரவியதை அடுத்து, ஜார்கண்ட் மாநில பாஜகதலைவர் தீபக் பிரகாஷ், சீமா பத்ராவை இன்று இடைநீக்கம் செய்துள்ளார். மேலும் இவ்விவகாரத்தில் சீமா பத்ரா மீது எழுந்துள்ள குற்றசாட்டு காரணமாக அவரை மீது நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்து உள்ளார்.
மேலும், சீமா பத்ராவை கைது செய்ய வேண்டும், சம்பவம் குறித்து முறையாக விசாரணை நடைபெற வேண்டும் என சமூக வலைதளங்களில் இருந்து பல்வேறு கண்டன குரல்கள் எழுந்து வருகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.