ஜெ சாப்பிட்ட இட்லி விலை என்ன?

அப்பல்லோ மருத்துவமனையில் உணவுச் செலவு என வெளியான தகவல் பெரும் பரபரப்பை தந்தது ஒரு இட்லி இவ்வளவா? அப்பல்லோ நல்லா போட்டான் பில் என்று ஏகப்பட்ட மீம் கிண்டல் என சமூகவலைதளம் கலைகட்டியது.

Advertisement

உண்மையில் அப்படி இட்லி விலையா கோடியில்! முன்னாள் முதல்வர் ஜெ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது அவரது தோழி மற்றும் பலர் அங்கேயே தங்க வைக்கப்பட்டனர். அவர் தங்கிய மொத்த Floorஉம் காலி செய்யப்பட்டது . அவர் பாதுகாப்புக்கு இருந்த நபர்கள், காவலர்கள், ஓபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் , அதிகாரிகள் என தற்காலிக தலைமைச் செயலகமாக செயல்பட்டது அப்பல்லோ. அது தவிர செய்தி சேகரிப்பதற்கான சென்ற செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் என பலரும் அப்பல்லோவில் இருந்தனர். இவர்கள் அனைவருக்கும் அங்கேயே உணவு தரப்பட்டது.

சில பத்திரிகையாளர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது ,ஆம். நமக்கு உணவு , டீ , காபி வரை கவனித்தது உண்மை என்றனர்..

மேலும் அப்பல்லோ தரப்பு இதைப்பற்றி சில ஆங்கில ஊடகத்தில் விளக்கம் தந்துள்ளது.
அதில் செலவுகளின் Split up கொடுத்துள்ளனர். அதன் படி 1.17 கோடி 70 நாட்கள் இத்தனை பேருக்கு உணவுச் செலவு என அறிய முடியும். ஊடகத்தினரே நூற்றுக்கணக்கில் இருந்தது உண்மையே . அத்தனை அமைச்சர், சட்ட மன்ற உறுப்பினர்கள் இருக்கும் இடத்தில் பாதுகாப்புக்கான காவலர்கள் எண்ணிக்கையும் அதிகம்!.

அதனால் இட்லி காமெடி போதும் பாஸ்.. நம்ம தான் அவசரபட்டுட்டோம்

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Advertisement

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button