இம்ரான் கானை சந்திக்கும் பொழுது வேட்டி அணிந்த ஜின்பிங்| ஃபோட்டோஷாப் புகைப்படம் !

சீனத் தலைவர் ஜின்பிங் இந்தியாவிற்கு வருகை தந்த பொழுது அவருடனான முதல் நாள் சந்திப்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வேட்டி , சட்டையில் வலம் வந்தார். அப்புகைப்படங்கள் வைரலாக்கப்பட்டது.
இந்நிலையில், சீனத் தலைவர் ஜின்பிங் இந்திய வருகைக்கு பிறகு பாகிஸ்தான் நாட்டின் தலைவர் இம்ரான் கானை சந்திக்கும் பொழுது வேட்டி மற்றும் ஜிப்பாவில் இருப்பது போன்று புகைப்படத்தை ட்விட்டர் , முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் காண நேரிட்டது.
Series Of Events…….. pic.twitter.com/zepfEh3yqX
— Krishna (@Atheist_Krishna) October 11, 2019
ஹைதராபாத் நகரைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியான சந்திப்புகள் என்ற தலைப்பில் மோடி-ஜின்பிங் மற்றும் இம்ரான்கான்-ஜின்பிங் புகைப்படங்கள் இரண்டையும் அக்டோபர் 11-ம் தேதி பதிவிட்டு இருந்தார். அதில், இம்ரான் கான் உடன் இருக்கும் புகைப்படத்தில் ஜின்பிங் வேட்டி அணிந்து இருப்பது போன்று பதிவாகி இருக்கிறது.
கிருஷ்ணா தன் ட்விட்டர் கணக்கில் நகைச்சுவைக்காக போட்டோஷாப் செய்வதாக குறிப்பிட்டு இருக்கிறார். அவர் பதிவிட்ட புகைப்படத்தை ரிவர்ஜ் இமேஜ் சேர்ச் செய்து பார்க்கையில், 2018 நவம்பர் மாதம் இம்ரான் கான் சீனா சென்றிந்த போது இருநாட்டு தலைவர்களும் சந்தித்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை காணலாம். அதையே ஃபோட்டோஷாப் செய்து இருக்கிறார்.
இதை அறியாமல், கேரளாவைச் சேர்ந்த veloor ramesh என்ற முகநூல் கணக்கில் அக்டோபர் 12-ம் தேதி சீனத் தலைவரின் புகைப்படத்துடன் கருத்து பதிவிட்டப்பட்டது . சீனத் தலைவர் ஜின்பிங் இந்தியாவில் இருந்தது அக்டோபர் 11 மற்றும் 12-ம் தேதி, அதன் பிறகு நேபாளம் சென்றதாக கூறப்படுகிறது.
நையாண்டிக்காக ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட சீனத் தலைவர் ஜின்பிங் புகைப்படத்தை உண்மை என நினைத்தும் பகிரத் தொடங்கி உள்ளனர். இனி வைரல் ஆவதற்கு முன்பாக மக்கள் ஃபோட்டோஷாப் என தெரிந்து கொள்வது வேண்டி உள்ளது . எனவே, கண்டா பிரதமரை போன்று சீனத் தலைவரையும் கன்டெண்ட் ஆக்காமல் இருந்தால் நல்லது.
மதிப்பீடு : ஃபோட்டோஷாப்
Links :
China’s Xi Jinping to visit India on 11-12 October for second informal summit
Imran Khan gets no cash on 3rd day of China visit
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.