கோட்சே, மத வெறுப்பு என ஜேஎன்யூ புதிய து.வேந்தரின் வைரலாகும் பழைய ட்வீட்கள் !

டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக சாந்திஸ்ரீ பண்டிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தை துணை வேந்தராக பணியாற்றி வரும் சாந்திஸ்ரீ பண்டிட் ஜேஎன்யூ-வின் முன்னாள் மாணவர். முதல் முறையாக ஜேஎன்யு-வில் பெண் துணைவேந்த்ர நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய துணை வேந்தராக சாந்திஸ்ரீ பண்டிட் நியமிக்கப்பட்ட பிறகு கடந்த சில ஆண்டுகளாக அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்துக்களின் படங்கள் சமூக வலைதளங்களில் புயலை கிளப்பி உள்ளது.
வலதுசாரி ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட அவர் நேரடியாக, விவசாயிகள் போராட்டங்களை விமர்சித்து இருக்கிறார். மேலும், சிஏஏ-விற்கு எதிரான சாஹீன் பாக் போராட்டக்காரர்களை ” சட்டவிரோத ஜிகாதிகள் ” என அழைத்தது மற்றும் போராட்டம் நடத்துவதற்கு பணம் பெறுவதாகக் கூறியது போன்றவை அவரின் சில சர்ச்சைக்குரிய பதிவுகளுக்கு உதாரணம்.
Also a Godse Bhakt.
‘Godse thought action was important and identified the solution…..’ pic.twitter.com/PDAk8lMIh5— Mohammed Zubair (@zoo_bear) February 7, 2022
ஒரு பதிவில், ” கோட்சே உடைய சிந்தனையின் செயல் முக்கியமானது மற்றும் மகாத்மா காந்தியின் படுகொலையில் ஒன்றுபட்ட இந்தியாவிற்கான தீர்வைக் கண்டறிந்தது ” எனப் பதிவிட்டு இருக்கிறார்.
2020-ல் சிஏஏ போராட்டத்தின் போது தமிழ்நாடு ஜிகாதிகளின் மற்றொரு கூடாரமாகி வருவதாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்ததையும் பார்க்க முடிகிறது.
The Modi regime’s new JNU VC has a twitter feed full of unhinged Hindu-supremacist bile against educational institutions founded by Muslims or Christians, & against India’s farmers, plus it’s full of #Covidconspiracy theories. She actively hates JNU. pic.twitter.com/sOgbHdQXt1
— Kavita Krishnan (@kavita_krishnan) February 7, 2022
Introducing the new VC of JNU — clearly a role model of scholarship for its students and faculty. pic.twitter.com/cTpvfte85P
— Yogendra Yadav (@_YogendraYadav) February 7, 2022
இப்படி வலதுசாரி நிலைப்பாட்டுடன் கடந்த காலங்களில் மாணவர்கள், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும், மதவெறுப்பு கருத்துக்களை பதிவிட்ட சாந்திஸ்ரீ பண்டிட் உடைய பழைய ட்வீட்கள் எதிர்ப்புடன் தற்போது வைரலாகி வருகிறது. பழைய ட்வீட் பதிவுகள் கவனம் பெற்று வைரலாகி வருவதால் சாந்திஸ்ரீ பண்டிட் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தையே நீக்கி இருக்கிறார்.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.