This article is from Sep 30, 2018

பாலியல் வன்புணர்வுகளும் அரசியல் வியாபாரங்களும்..!

சமீப காலமாக நாடு முழுவதும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகும் செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகின்றன. நாட்டில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல்ரீதியான கொடுமைகள் தலை தூக்கியுள்ளது என்பதை இந்நிகழ்வுகள் நெஞ்சை உறைய வைக்கிறது. கதுவா, உன்னாவ் சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு எதிராக எழுந்த போராட்டங்களால் பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை வழங்கப்படும் என அவசரச் சட்டம் இயற்றப்பட்டது.

கிழக்கு டெல்லியின் காஜிபூரில் வசித்து வந்த 11 வயது சிறுமி ஏப்ரல் 21-ம் தேதி கடைக்கு சென்றுள்ளார், நீண்ட நேரமாகியும் குழந்தையை காணவில்லை என பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். சிறுமியை பற்றி நடத்திய விசாரணையின் போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த பொழுது 17 வயதுடைய இளைஞன் சிறுமியை அழைத்து சென்றது உறுதி செய்யப்பட்டது. மேலும், சிறுமியின் செல்போனை ட்ராக் செய்ததில் சிறுமி இருக்கும் இடத்தை போலீசார் கண்டுப்பிடித்தனர்.

ஏப்ரல் 22-ம் தேதியன்று இரவு உத்தரப்பிரதேச மாநிலத்தின் சாஹிபாத் போலீஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து காஜியாபாத்தின் மதரஸாவில் பகுதிக்கு விரைந்துள்ளனர். அங்கு பூட்டிக் கிடந்த ஓர் அறையில் 11  வயது சிறுமி இருப்பதை கண்ட போலீசார் சிறுமியை உடனடியாக மீட்டனர். சிறுமியின் குடும்பம் காஜிபூரில் வசிப்பதற்கு முன்பாக காஜியாபாத்தின் வசித்துள்ளனர். சிறுமியை கடத்தி சென்ற 17 வயது இளைஞன் ஏற்கனவே சிறுமிக்கு அறிமுகமானவர் என்பது தெரிந்துள்ளது.

சிறுமியை பயமுறுத்தி கடத்தி சென்ற இளைஞன் காஜியாபாத்தின் மதரஸாவில் விட்டு சென்றுள்ளான். மதரஸா எனும் இஸ்லாமியக் கல்வியை பயிற்றுவிக்கும் இடத்தில் அதன் பொறுப்பாளர் மவுலானா இல்லாத நேரத்தில் குழந்தையை அழைத்து சென்றதாகவும், அங்கு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பு தெரிவிக்கின்றன. மேலும், கடத்தப்பட்ட சிறுமியை மறுநாளே உயிரோடு மீட்டுள்ளனர். அவர் அளித்த வாக்குமூலத்தின்படி குற்றவாளியான 17 வயது இளைஞன் மீது pocso act மற்றும் கடத்தல் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளான். வாக்குமூலத்தில் மவுலானா மீது எந்த குற்றச்சாட்டையும் குழந்தை தெரிவிக்கவில்லை. எனினும், மவுலானாவிற்கு தொடர்பிருப்பதாக பெற்றோர் சந்தேகிப்பதால் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர் மற்றும் வழக்கில் தொடர்புடைய சிலரிடமும் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Justice for Geeta என்று ஹாஷ்டக் மூலமாகவும், போராட்டங்கள் மூலமாகவும் குரல் கொடுத்து வரும் பாஜகவினர் வைக்கும் அபத்தனமான கேள்விகள்.

  1. முஸ்லீம் குழந்தை பாலியல் வன்புணர்வு என்றால் போராடும் நீங்கள் ஏன் இந்து குழந்தை என்றால் போராடுவதில்லை.

பதில் : ஒரு குழந்தையின் சாதி, மதம், மொழி தேடி இங்கு யாரும் போராடுவதில்லை. ஜம்மு-காஷ்மீர் சம்பவத்தில் குழந்தை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டு இருந்தார். அந்த குற்றவாளிக்கு ஆதரவாக இரண்டு பாஜக அமைச்சர்கள் போய் நின்றனர் கைதை எதிர்த்து. நீதி மறுக்கப்பட்டது. ஆதலால் நீதி வேண்டி நாடே கொதித்தது. உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ பாலியல் வன்புணர்வு செய்ததாக வழக்கு, அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை போலீஸ் கஸ்டடியில் மரணம் அடைந்து இருந்தார். கோர்ட்டில் அந்த எம்.எல்.ஏக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என உ.பி அரசாங்கம் கையை விரித்தது (அந்த பெண் முஸ்லீம் அல்ல நினைவூட்டலுக்கு மட்டும்). அதற்காக எதிர்ப்பு தெரிவித்தோம்.

நாங்கள் குற்றவாளியை குற்றவாளியாக மட்டும் பார்க்கிறோம். நீங்கள் அவரை இந்துவாக, உங்கள் கட்சியின் நபராக பார்க்கிறீர்கள். அவர்களை காப்பாற்ற முயற்சி செய்கிறீர்கள் ஏன் ? பச்சை குழந்தை என்ற உணர்வு கூட இல்லாமல் பாலியல் வன்புணர்வு நடக்கவில்லை என்ற புரளியை பரப்புகிறீர்கள். அதற்கெல்லாம் ஆதாரத்தோடு பொய் என பதில் தந்திருந்தோம்.

  1. ஏன் இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சீற்றம்( Selective Outrage ) வருகிறது ?

இந்த Selective Outrage பொதுமக்களுக்கு வரவில்லை உங்களுக்கு தான் வந்துள்ளது. உத்தரப்பிரதேச சம்பவத்திற்கு போராடாமல், காஷ்மீர் சம்பவத்திற்கு போராடாமல் இரண்டிற்கும் முட்டுக் கொடுத்து வந்த நீங்கள் , குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வழக்கில் நீதி கேட்டு போராடுகிறீர்கள். மவுலானாவின் தொடர்பு இருந்திருந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும், நடவடிக்கை வேண்டும். அதற்கான குரல் எழுப்பியே ஆக வேண்டும். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிதான், டெல்லி காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என தெரியுமா ? மவுலானா இதில் சம்பந்தப்பட்டு உள்ளார் என்றால் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து பாஜக எம்.பிக்களே போராடுவதின் உள்நோக்கம் என்ன ? உங்கள் ஆட்சியே நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீங்களே போராடுகிறீர்களா ?.

ஒரு குழந்தை மரணத்தை கொச்சைப்படுத்தவும், இன்னொரு குழந்தையின் பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்கிறேன் என்ற போர்வையில் துல்லியமாக மதரீதியான வெறுப்புணர்வை விதைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளீர்கள். ஒரு குழந்தை அனுபவித்த கொடுமையை வைத்து கூட இப்படி சுயலாபம் தேடலாமா ? எல்லா மதத்திலும் தவறானவன் இருப்பான். மதத்தைப் பரப்புகிறேன் என்ற போர்வையில் படுக்கைக்கு அழைக்கும் பாதகனும் இருப்பான். எவனாயினும் கடும் தண்டனைக்கு உட்பட வேண்டியவன். குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிரான இக்குற்றத்தை எதிர்க்க வேண்டிய எல்லா வழிவகையிலும் சிந்திக்க வேண்டிய நேரம் இது.

Updated: 

சிறுமி கடத்தல் வன்புணர்வு சம்பவத்தில் மவுலானாவுக்கு தொடர்பு இருப்பதாக சிறுமியின் பெற்றோர் குற்றம்சுமத்தி, கைது செய்யுமாறு கூறி வந்த நிலையில்  டெல்லி குற்றப் பிரிவு போலீசார் மதரஸா மவுலானாவை கைது செய்துள்ளனர்.

11 year old raped allegedly by teen, held captive at madrasa near delhi 

Delhi police visit madrasa where 10 years old was raped

delhi teen held for raping minor girl at madrasa  

Please complete the required fields.
Back to top button
loader