” கூட்டணி வதந்தியை நம்ப வேண்டாம் ” – கமல் ட்விட்.

நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக உடன் கூட்டணி அமைக்கும் என நீண்ட நாட்களாக செய்திகள் பரவி வந்தது. இது தொடர்பான கேள்விகளும் அவ்வபோது கமல்ஹாசன் அவர்களிடம் கேட்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நாளை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அவர்களின் சிலை நிறுவும் நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் வர உள்ளதால் கூட்டணிக் குறித்த ஆலோசனைகள் இடம்பெறும் என பேசப்படுகிறது.
நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்ள இருப்பதால் திமுக, காங்கிரஸ் உடனான கூட்டணி நிச்சயம் இருக்கும் என செய்திகள் வெளியாகின.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கமல் ட்விட் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
” மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் நான் அரசியலுக்கு வந்த காரணத்தை நாம் உணர்த்துவோம். அது குறுகிய ஆதாயங்களுக்கு அல்ல. வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம் ” என பதிவிட்டு உள்ளார்.
கமலின் ட்விட் நாளை காங்கிரஸ், திமுக உடன் மக்கள் நீதி மய்யம் இணையும் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளியே !