கங்கனாவின் இரு ட்வீட்களை “வெறுப்பு பேச்சு விதிமீறல்” என நீக்கிய ட்விட்டர் !

பாலிவுட் நடிகையான கங்கனா டெல்லியில் நடைபெற்று வரும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அமெரிக்க பாப் பாடகி ரிஹானா விவசாயிகள் போராட்டம் குறித்து வெளியிட்ட ட்வீட் பதிவை பகிர்ந்தும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

Advertisement

இந்நிலையில், ” எங்கள் வரம்பு அமலாக்க விருப்பங்களுக்கு ஏற்ப ட்விட்டர் விதிகளை மீறும் ட்வீட்களில் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம் ” எனக் குறிப்பிட்டு கங்கனா பதிவிட்ட இரு ட்வீட்களை ட்விட்டர் தளம் நீக்கி உள்ளது.

Advertisement

 

பிப்ரவரி 3-ம் தேதி சிரோமணி அகாலிதளம் கட்சியின் முன்னாள் தலைவர் மஞ்சித் சிங் ஜி.கே, விவசாயிகளுக்கு எதிராக அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக பாலிவுட் நடிகையின் கணக்கை நீக்குமாறு ட்விட்டருக்கு சட்டரீதியான நோட்டீஸ் அனுப்பியதாக டைம்ஸ்நவ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

நீக்கப்பட்ட ட்விட்களில் ஒன்று என ரோஹித் சர்மா பதிவை பகிர்ந்து வெளியிட்ட பதிவின் ஸ்க்ரீன்ஷார்டை NDTV செய்தி வெளியிட்டு இருக்கிறது.

சர்வதேச பாப் பாடகி ரிஹானாவை தாக்கி ட்வீட் வெளியிட்ட பிறகு டெல்லி விவசாய போராட்டம் பல ட்வீட்களை கங்கனா தொடர்ச்சியாக வெளியிட்டு வந்துள்ளார். அதில், இரு ட்வீட்கள் ட்விட்டர் விதிகளை மீறியதாக கூறி நீக்கப்பட்டு உள்ளது.

Links : 

Kangana Ranaut’s two tweets on farmers’ protest removed by Twitter for ‘violating rules’

Twitter takes down Kangana Ranaut’s tweets on farmers’ protest over violations

kangana-ranauts-tweets-deleted-again-twitter-says-rules-violated

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button