கர்நாடகாவில் மாட்டு சாணம் திருட்டு !

மாடு காணாமல் போன செய்திகள் பற்றி பார்த்தும் இருப்போம், படித்தும்  இருப்போம். ஆனால், வித்தியாசமாக மாட்டு சாணம் காணாமல் போன சம்பவத்தை அறிந்து இருப்போமா ? அதிலும், காணாமல் போன மாட்டு சாணத்தின் மதிப்பு 1.25 லட்சம் என்று சொன்னால் நம்ப முடியுமா ?

கர்நாடகாவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த காணாமல் போன பொருளே மாட்டு சாணம் தான். மாட்டு சாணம் காணாமல் போனதாக புகார் அளித்தது விலங்கு வேளாண்மை துறை.

கர்நாடகாவின் பிரூர் மாவட்டத்தில் சேமித்து வைக்கப்பட்ட 35 முதல் 40 ட்ராக்டர் அளவிலான மாட்டு சாணம் திருடப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு, 1.25 லட்சம் என்கிறார்கள். மாட்டின் சாணத்தில் நன்மைகள் பல உள்ளன. விவசாயத்திலும், தோட்டக்கலையிலும் அவற்றின் பயன்பாடு அதிகம் என்பதால் விவசாயிகள் மத்தியில் மாட்டு சாணத்தின் தேவை அதிகமா இருக்கிறது.

பிரூர் மாவட்டத்தில் யாகதி போலீஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியான பசூர் அம்ரித்மஹால் காவல் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்ட 35 முதல் 40 ட்ராக்டர் அளவிலான மாட்டு சாணம் திருடப்பட்டு உள்ளதாக விலங்கு வேளாண்மை துறையின் சார்பில் புகார் அளிக்கப்பட்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.

விலங்கு வேளாண்மை துறையின் பசூர் அம்ரித்மஹால் காவல் சேமிப்பு கிடங்கில் இருந்து 1.25 லட்சம் மதிப்புள்ள மாட்டு சாணத்தை திருடி தனியார் இடம் ஒன்றிற்கு மாற்றியுள்ளனர்.

“ மாட்டு சாணம் திருட்டின் வழக்கு விசாரணையில் தொடர்புடையதாகக் கூறி விலங்கு வேளாண்மை துறையின் சூபர்வைசர் கைது செய்யப்பட்டுள்ளார் “

அதேபோல், மாட்டு சாணம் சேமித்து வைக்கப்பட்ட தனியார் நிலத்தின் உரிமையாளரின் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும், திருடப்பட்ட மாட்டு சாணம் திரும்ப சேமிப்பு கிடங்கிற்கு மாற்றப்படும் எனக் கூறியுள்ளனர்.

இயற்கை விவசாய முறையில் விவசாய நிலத்திற்கு மாடுகளின் சாணமும், கோமியமும் உரமாகப் பயன்படுகிறது. கர்நாடகா விவசாயத்தில் மாட்டு சாணத்தின் மீதான தேவையின் அதிகரிப்பே இத்திருட்டு சம்பவத்திற்கு காரணமாகியுள்ளது.

Karnataka: Cow dung worth Rs 1.25 lakh stolen, govt employee held 

Please complete the required fields.
Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close