This article is from Nov 03, 2018

கர்நாடகா அமைச்சர் வீரர்களுக்கு பரிசுகளை தூக்கி வீசினாரா & அளித்த விளக்கம்.

கர்நாடகாவின் உத்தர் கன்னடா மாவட்டத்தில் ஹலியால் அருகே கார்வர் பகுதியில் அக்டோபர் 31-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில அளவிலான மற்றும் தேசிய அளவிலான தடகள வீரர்கள் இடம்பெற்றனர். இதில், கர்நாடகா மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே கலந்துக் கொண்டார்.

நிகழ்ச்சி முடியும் நேரத்தில் அமைச்சர் அவசரமாக செல்ல வேண்டும் என்பதால் விளையாட்டு வீரர்களை மேடைக்கு அழைத்து பரிசுக் கொடுக்காமல் மேடையில் இருந்து பரிசுகளை தூக்கி வீசி உள்ளார் அமைச்சர். பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட விளையாட்டு சார்ந்த பொருட்களை அமைச்சர் தூக்கி வீச மேடைக்கு கீழே ஒருவர் பின் ஒருவராக விளையாட்டு வீரர்கள் பிடித்தது ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வருவாய் அமைச்சரான ஆர்.வி.தேஷ்பாண்டே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அமைச்சரின் செயலுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ராத்தோர் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால் கர்வத்துடன் இருக்கிறார்கள் என பதிவுகள் வெளியாகியது.

கண்டங்கள் எழுந்த உடன் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார் ஆர்.வி.தேஷ்பாண்டே. அதில், நல்ல எண்ணத்தில், நல்ல மனநிலையில், அவர்கள் அனைவரும் என் குடும்பத்தை சார்ந்தவர்கள் என நினைத்தே திறமையான விளையாட்டு வீரர்களுக்கு பரிசு வழங்கியதாகக் கூறினார். அனைவரையும் சமமாக கருதுவதாகக் கூறியுள்ளார்.

“ சில பத்திரிகை நண்பர்கள் நடந்த நிகழ்வை தவறாகப் புரிந்துக் கொண்டுள்ளனர் மற்றும் எடுக்கப்பட்ட வீடியோவில் விளையாடிய காட்சியை மட்டும் திரும்ப திரும்ப காண்பிப்பதாகத் தெரிவித்துள்ளார் “.

என்னுடைய நல்ல எண்ணத்தையும், அக்கறையும் புரிந்து கொள்வார்கள் என நம்பிக்கை இருக்கிறது “ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் வருவாய் அமைச்சர் தேஷ்பாண்டே.

இதற்கு முன்பாக ஆகஸ்ட் மாதம் கர்நாடகாவில் பொதுப்பணித்துறை அமைச்சரும், முதல்வர் குமாரசாமியின் சகோதரரான ஆர்.டி.ரேவேன்னா மக்களுக்கு நிவாரண உதவி அளிக்க சென்ற இடத்தில் பிஸ்கெட் பாக்கெட்களைத் தூக்கி வீசினார். அவரின் செயல் இணையம், ஊடகம் என அதிகளவில் வைரலாகி கண்டனத்துக்குள்ளாகியது.

அதன் பின் கர்நாடகா முதல்வர் குமாரசாமி, “ நிவாரணம் வழங்கிய பகுதியில் நகர்ந்து செல்ல முடியாத அளவிற்கு கூட்டம் இருந்தக் காரணத்தினால் ரேவேன்னா அவ்வாறு அளித்ததாக விளக்கம் அளித்தார் “ என்பது குறிப்பிடத்தக்கது.

அதைப் பற்றி படிக்க :  ஹெலிகாப்டரில் பேப்பர் படிக்கும் குமாரசாமி ? பிஸ்கட்டை தூக்கி வீசும் அவரது சகோதரர்..!

RVDeshpande twitter 

Karnataka minister RV Deshpande flings kits at sportspersons, faces flak

Watch: Karnataka Minister, In A ‘Hurry’, Throws Kits At Sportspersons

Please complete the required fields.




Back to top button
loader