This article is from Aug 11, 2019

மக்களை காப்பாற்ற பரிசலில் செல்லும் பாஜக எம்எல்ஏ | காமெடியான வைரல் வீடியோ !

கர்நாடகா, கேரளா மாநிலங்களில் பருவமழை பொழிந்து நீர்நிலைகள் நிரம்பியதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்ற கர்நாடக மாநிலத்தின் பிஜேபி எம்எல்ஏ பரிசலில் நின்று கொண்டு படகை இயக்கும் 39 நொடிகள் கொண்ட வீடியோ காட்சிகள் கேளிக்கையாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் இருப்பது ஹொன்னாலி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ரேணுகாச்சாரியா.

முட்டிகால் அளவு கூட இல்லாத நீர் தேங்கிய இடத்தில் பரிசலில் எம்எல்ஏ நின்று கொண்டு கையில் துடுப்பை வைத்து இருபுறம் அசைக்க படகு சிறிது கூட நகரவில்லை. ஆகையால், அருகில் உடன் இருப்பவர்களே அந்த பரிசலை நகர்த்திக் கொண்டு செல்கின்றனர். அந்த பரிசலை இருசக்கர வாகனங்களும் கூட எளிதாய் கடந்து செல்கிறது.

எம்எல்ஏ பரிசலில் நின்று கொண்டு இயக்க முற்பட்டும் நகரவில்லை. உடன் இருப்பவர்களே பரிசலை இழுத்துக் கொண்டு வருகின்றனர் என்பது தெளிவாய் தெரிகிறது. அங்கு வந்த மக்களும் எம்எல்ஏ உடன் செல்பி, வீடியோ எடுத்துக் கொண்டு இருப்பதை வைரலான வீடியோவில் பார்க்க முடிகிறது.

வெள்ளம் பாதித்த நேரத்தில் அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மக்களுக்கு உதவுவது போன்று எம்எல்ஏ போட்டோ ஷூட்டிங் எடுத்துக் கொள்கிறார் என பலதரப்பை சேர்ந்த மக்களும் விமர்சனம் செய்து வருகின்றனர். ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கர்நாடக பாஜக எம்எல்ஏ-வின் பரிசல் வீடியோ வைரலாகி வருகிறது.

பாஜக எம்எல்ஏ ரேணுகாச்சாரியா அங்குள்ள வெள்ளம் பாதித்த பகுதியில் மக்களை நேரில் சந்தித்து, உணவு வழங்குவது உள்ளிட்ட நிவாரண பணிகளை மேற்கொள்ளும் புகைப்படங்களும் ட்விட்டரில் பகிரப்பட்டு உள்ளது. ஆனால், எதற்காக பரிசலில் துடுப்பு போட்டார் என்பது தான் தெரியவில்லை.

Proof : 

BJP MLA tries to rescue people by rowing boat in flood-affected Karnataka’s Honnali

BJP MLA Renukacharya oars makeshift boat in shallow waters, gets trolled

Please complete the required fields.




Back to top button
loader