அம்மாவை துடைப்பத்தால் அடித்த 17 வயது மகன் !

பெங்களூரில் 17 வயது மகன் தன் தாயை துடைப்பத்தால் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி அவரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்டித்து அனுப்பி உள்ளனர்.

பிள்ளையின் எதிர்காலம் எப்படி அமையும், நன்றாக படித்தால் தானே முன்னேறுவான் என்ற வார்த்தைகளைக் கூறாத பெற்றோரை காண முடியாது. எதிர்காலம் பற்றி கவலை இல்லை, படிப்பில் கவனமில்லாத தன் மகன் ஜீவன் பற்றி பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கூறியதற்காக தன் தாயை துடைப்பத்தால் அடித்துள்ளான் அந்த மகன். வீடியோவில், ஒரு அடி அடித்து விட்டு இதுபோன்று தொடர்ந்து செய்துக் கொண்டு இருந்தால் திரும்பவும் அடிப்பேன் என மிரட்டிக் கூறி இருப்பான்.

இணையத்தில் வைரல் ஆகிய இந்த வீடியோவை எடுத்தது அவரின் சகோதரி ஆவார். இணையத்தில் வைரல் ஆகியதால் JP நகர் போலீசார் தாமாக முன்வந்து டிசம்பர் 8-ம் தேதி SUO MOTU வழக்கு பதிவு செய்தது. மகன் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் என போலீஸ் கூறியதற்கு புகார் அளிக்க முடியாது என்றுள்ளார் அந்த தாய்.

 

 

போலீஸ் இதனை கையில் எடுக்கும் முன்னரே தன் தாயிடம் இதுபோன்று எதிர்காலத்தில் நடந்து கொள்ளமாட்டேன் என மன்னிப்புக் கோரியுள்ளார். ஆகையால், அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி உள்ளனர்.

“ தன்னைப் பற்றி அக்கம் பக்கத்து வீடுகளில் தவறாகப் பேசிக்கொண்டு இருந்ததால் வருத்தம் அடைந்துள்ளான். மறுபடியும், பக்கத்து வீடுகளில் என் மகன் சரியாக படிக்கவில்லை, எதிர்காலம் பற்றிய கவலை இல்லை என்று தவறாக பேசியதால் அடித்துள்ளான் “ என போலீஸ் தரப்பில் கூறியுள்ளனர்.

வீடியோவில் தன் தாயை அடிக்கும் பொழுது அதனை வீடியோ எடுத்த அவரின் சகோதரி, “ உனக்கு எங்களைப் பற்றி கவலை இல்லை,  என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும் “ என கூறியுள்ளார். இதையடுத்து, இணையத்தில் தாயை மகன் அடித்த வீடியோவை பதிவிட்டு உள்ளார்.

தன் மகனுக்கு படிப்பில் கவனமில்லை, எதிர்காலத்தை நினைத்து பயமில்லை என ஒவ்வொரு பெற்றோரும் கூறுவதுண்டு. இதனை தன் மகனிடம் அந்த தாய் புரிய வைத்து இருக்க வேண்டும். அந்த மகனும் இவ்வாறு பேசாதீர்கள் எனக் கூறி இருக்க வேண்டும். எதுவாகினும், தன் எதிர்காலத்தை மட்டுமே நினைத்து வந்த தாயை துடைப்பதால் அடித்தது கண்டிக்கத்தக்கது.

தமிழ் ஊடகம் ஒன்றின் இணைய செய்தியில் காதல் விவகாரத்தால் தன் தாயை 17 வயது மகன் அடித்து உள்ளான் என ஒரு புதுக் கதையை உருவாகி உள்ளனர்.அந்த நிறுவனத்தின் கன்னட செய்தியில் அந்த பையன்  சிகரெட் பிடிப்பது, தன் காதலியுடன் இருக்கும் புகைப்படங்களையும் இணைத்து செய்தி வெளியிட்டுள்ளனர். மேலும் , காதலியின் வீட்டில் சென்று தவறாக பேசியதால் இவ்வாறு நடந்துக் கொண்டதாக செய்தியில் வெளியாகிறது. பொறுப்பற்ற பிள்ளையைப் பற்றி அக்கம் பக்கத்தில் குறைக் கூறியதால் இவ்வாறு செய்துள்ளான் அவன்.

“ இன்றைய பிள்ளைகள் அறிவுரைகளை ஏற்க மறுக்கின்றனர், விளைவுகளை கண்ணில் கண்ட பிறகே தவறை உணர்கின்றனர் என்பது வேதனை “

Video of 17-year-old beating mom with broom goes viral in Bengaluru

bad son beats mother

Please complete the required fields.




Back to top button