காசி விஸ்வநாத் கோயில் – ஞான்வாபி மசூதி விவகாரம் நடந்தது , நடப்பது என்ன ?

அயோத்தியா – பாபர் மசூதி தீர்ப்பிற்கு பிறகு கவனத்தில் இருந்த காசி விஸ்வநாத் கோயில் மற்றும் ஞான்வாபி மசூதி வளாகம் தொடர்பான வழக்கை விசாரிக்க உத்தர பிரதேசத்தின் வாரணாசி நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, ஞான்வாபி மசூதி குறித்த சர்ச்சை கருத்துக்கள் சமூக வலைதளங்களில் எழுந்த வண்ணமே இருந்தன.
கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி காசி விஸ்வநாத் கோயிலுக்கு அருகிலுள்ள ஞான்வாபி மசூதி வளாகம் அந்த இடத்தில் திணித்துக் கட்டப்பட்டுள்ளதா அல்லது ஒன்றுடன் ஒன்று சேர்ந்து அமைக்கப்பட்டுள்ளதா அல்லது கட்டமைப்பு மாற்றங்கள் எதேனும் நிகழ்ந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
BREAKING: In the Kashi dispute, court allows ASI survey of Gyanvapi mosque adjacent to Kashi Vishwanath Temple
Court of Civil judge Senior Division, Varanasi Civil Court passed the order
— Bar & Bench (@barandbench) April 8, 2021
கடந்த டிசம்பர் 2019 ஆம் ஆண்டு கோயிலின் சுயம்பு ஜோதிர்லிங்க பகவான் விஸ்வேஸ்வர் சார்பாக வழக்கறிஞர் வி.எஸ்.ரஸ்தோகி என்பவரால் தாக்கல் செய்த மனுவின் பதிலாக அமைந்துள்ள இந்த உத்தரவானது மற்றும் ஒரு பாபர் மசூதி இடிப்பு மாதிரியான அதிர்வுகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
அஞ்சுமன் இன்டெசாமியா மஸ்ஜித் (ஏஐஎம்) என்று அழைக்கப்படும் ஞான்வாபி மசூதி மேலாண்மைக் குழு இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஆய்விருக்கு 5 பேர் கொண்ட தொல்லியல் துறை நிபுணர்களை அமைக்குமாறும், அந்த குழுவில் குறைந்தது இரண்டு பேராவது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு ‘ கேட்டுக் கொண்டுள்ளது.’
வழக்கின் பின்னணி :
இந்த சர்ச்சை தொடர்பான முதல் மனு 1991 இல் தாக்கல் செய்யப்பட்டது. காசி விஸ்வநாத் கோயிலின் அறக்கட்டளை தாக்கல் செய்யப்பட்ட அந்த வழக்கு, ‘சுமார் 2,050 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஜா விக்ரமாதித்யாவால் ஒரு கோயில் கட்டப்பட்டதாகவும், பின்னர் அது முகலாய பேரரசர் அவுரங்கசீப்பால் 1669 இல் இடிக்கப்பட்டு அந்த இடிபாடுகளைப் பயன்படுத்தி மசூதி கட்டப்பட்டதாகவும்’ குற்றம்சாட்டியது.
மேலும், சுமார் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, இந்தூரின் ராணி அஹில்யா ஹோல்கர் என்பவரால் 1780 இல் மசூதிக்கு அடுத்ததாக தற்போது உள்ள காசி விஸ்வநாத் கோவில் கட்டப்பட்டது எனக் குற்றம் சாட்டியது.
இதனை எதிர்க்கும் வகையில் 1998 ஆம் ஆண்டு அஞ்சுமன் இன்டெசாமியா மஸ்ஜித் (ஏஐஎம்) அமைப்பு அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடி, ‘ வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தால் தடைசெய்யப்பட்டதால் இந்த சர்ச்சைக் குறித்து தீர்ப்பளிக்க முடியாது என்று வாதிட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான நடவடிக்கைகளை அலகாபாத் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
இதை தொடர்ந்து சுமார் 22 வருடம் கழித்து 2019ல் வழக்கறிஞரான ரஸ்தோகி, ஞான்வாபி பற்றிய ஆய்வை ஏ.எஸ்.ஐ தொடங்கக் கோரி மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தார். இதனை எதிர்த்தும் ஜனவரி 2020ல், ஏஐஎம் தனது ஆட்சேபனையைத் தாக்கல் செய்தது.
தற்போது வாரணாசி நீதிமன்றம் அளித்த தீர்ப்பானது பிப்ரவரி 2020ல், ‘ கடந்த ஆறு மாதங்களாக உயர் நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பான ஸ்டேவை நீட்டிக்காததால் விசாரணையை மீண்டும் தொடங்குவதற்கான ‘ வேண்டுகோளுடன் வழக்கறிஞர்ர் ரஸ்தோகி வாரணாசி கீழமை நீதிமன்றத்தை அணுகியதன் விளைவாகும்.
ஆனால் வாரணாசி சிவில் நீதிமன்றம் வழங்கிய இந்த உத்தரவானது வழிபாட்டுத் தலச் சட்டத்தின் (PWA) விதிகளை மீறுவதாக அமைந்துள்ளது. 1991ல் காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட இச்சட்டம் எந்தவொரு வழிபாட்டுத் தலத்தையும் ஒரு மதத்தில் இருந்து வேறொரு மதத்துக்கோ அல்லது ஒரே மதத்தின் உள்ள வேறு பிரிவுக்கோ மாற்றுவதை தடை செய்தது. பாபரி மஸ்ஜித்-ராம் ஜன்மபூமி பிரச்சினை ஏற்கனவே வழக்கில் இருந்ததால் அதற்கு மட்டும் இச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
PWA சட்டம் குறித்தான கேள்விகளுக்கு, “இந்த வழக்கில் வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் பொருந்தாது என்றும், ஓரளவு இடிக்கப்பட்ட கோவிலின் மீது மசூதி கட்டப்பட்டதாகவும், கோவிலின் பல பகுதிகள் இன்றும் உள்ளன ” என்று வாதிட்டது வழக்கறிஞர் வி.எஸ்.ரஸ்தோகியின் மனு.
யார் என்ன சொன்னார்கள் :
இந்து மத அமைப்பான அகில் பாரதிய அகார பரிஷத் ராம் ஜன்மபூமி வழியே வாரணாசி மற்றும் மதுராவில் “இந்து கோவில்களை விடுவிப்பதற்கான” பிரச்சாரத்தைத் தொடங்குவது பற்றி கடந்த 2020 செப்டம்பரிலேயே பேசியது.
வாரணாசி நீதிமன்ற உத்தரவு தொடர்பாக அஞ்சுமா இன்டெஜாமியா மசாஜித்தின் இணைச் செயலாளர் மற்றும் மஸ்ஜித்தின் பராமரிப்பாளரான சயீத் யாசின் தி இந்து நாளிதழில் அளித்த பேட்டியில், ” பாப்ரி மஸ்ஜித் வழக்குக்குப் பிறகு, அமைதி நிலவும் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் நீதிமன்றங்களும் அதிகாரத்தில் இருப்பவர்களும் அதை விரும்பவில்லை என்பது போல் தெரிகிறது.” என வருத்தம் தெரிவித்தார்.
Link :
varanasi-court-allows-asi-to-survey-kashi-vishwanath-temple-gyanvapi-mosque-complex
varanasi-court-orders-asi-survey-of-gyanvapi-mosque-adjacent-to-kashi-vishwanath-temple
kashi-vishwanath-gyanvapi-mosque-varanasi-civil-court
Decoding the Kashi Vishwanath-Gyanvapi dispute, and why Varanasi court has ordered ASI survey