This article is from Nov 16, 2019

நமது செய்தி போலி என ஸ்பான்சர் பதிவு போடும் பக்கத்தின் உண்மை முகம் !

துரைக்கு வந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கரை முத்துராமலிங்கத் தேவர் வரவேற்ற புகைப்படம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருவரும் இருக்கும் புகைப்படம் என இரு புகைப்படங்கள் தேவர் ஜெயந்தி தினத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மற்றும் ஆதரவாளர்கள் மூலம் அதிகம் பகிரப்பட்டு இருந்தன.

மேலும் படிக்க : கோல்வால்கரை வணங்குவது முத்துராமலிங்கத் தேவரா ?| ஹெச்.ராஜா பதிவு.

அவ்வாறு பகிரப்பட்ட  புகைப்படங்கள் தவறானவை என்பதை ஆதாரத்துடன் யூடர்ன் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். இதையடுத்து, குருஜி கோல்வால்கர் மற்றும் முத்துராமலிங்கத்தேவர் சந்திப்பு நிகழ்ந்தது குறித்து தமிழக பாஜக கட்சியின் எஸ்.ஜி.சூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், இருவரின் சந்திப்பு குறித்து 1956-ல் தியாக பூமி என்ற பத்திரிகையில் வெளியாகியதாக பதிவிட்டு இருந்தனர்.

Kathir news archived link 

இதேபோன்று, கதிர் என்ற இணையதளத்தில் தேவர் , குருஜி சந்திப்பு குறித்து யூடர்ன் போலிச் செய்திகளை வெளியிட்டதாக ஒரு செய்தியை வெளியிட்டனர். அதிலும், எஸ்.ஜி. சூர்யா வெளியிட்ட தியாக பூமி பத்திரிகையை மேற்கொள்காட்டி இருந்தனர். அந்த செய்தியின் லிங்கை கதிர் நியூஸ் உடைய முகநூல் பக்கத்தில் ஸ்பான்சர் செய்து பதிவிட்டு இருக்கிறார்கள் என்பதை காண முடிந்தது.

அந்த கதிர் நியூஸ் எனும் முகநூல் பக்கத்தின் விவரங்கள் குறித்து தேடிய பொழுது முதலில் நகைச்சுவை பக்கமாக தொடங்கப்பட்டு , நடுவில் பிஜேபி உடைய பக்கமாக காண்பித்துக் கொண்டு , இப்பொழுது கதிர் என வேறு பெயரில் இயங்கி வருவதை காண முடிந்தது. கதிர் நியூஸ் உடைய முகநூல் பக்கத்திற்கு சென்று ” Page Transparency ” இல் உள் நுழைந்து பார்த்தால் பக்கத்தின் வரலாறு முழுவதும் இடம்பெற்று இருக்கும். நீங்களும் சென்று பார்க்கலாம்.

தேவர் குறித்த நமது செய்திக்கு மறு செய்தி வெளியிட்ட பதிவை ஸ்பான்சர் செய்து வெளியிட்டு உள்ளனர். அந்த முகநூல் பக்கத்தின் Page history கீழே ” Go to  Ad library ” என்ற option இருக்கும். அதில் சென்று பார்த்தால் ஸ்பான்சர் செய்து பதிவை வெளியிட்டவரின் விவரங்களை காணலாம் . இதுவே இவர்களின் உண்மை முகம்.

தேவர் மற்றும் கோல்வால்கர் சந்திப்பு குறித்த விவகாரத்தில் வைரல் செய்யப்பட்ட புகைப்படங்களை தவறானவை என உறுதியாக கூறி இருந்தோம். அது 100% தவறான புகைப்படங்களே. அதற்கான ஆதாரங்களையும் நாம் வெளியிட்டு இருந்தோம்.

ஆனாலும், தேவர் மற்றும் கோல்வால்கர் சந்திப்பு நிகழ்ந்தற்கு ஆதாரமாக தியாக பூமி என்ற பத்திரிகையின் செய்தி என ஒரு பக்கத்தை காண்பிக்கின்றன. அந்த புத்தகத்தில் தியாக பூமி என்ற பெயர் இடம்பெறவில்லை. மேலும், அதில் இருவரின் புகைப்படங்களும் இல்லை.

அடுத்து, அவர்கள் கூறும் குறிப்பிட்ட வருடத்தில் வெளியான தியாக பூமி பத்திரிகை குறித்து நாம் தேடினோம். அதில், ரோஜா முத்தையா என்ற நூலகத்தில் இரண்டு பிரதிகள் நமக்கு கிடைத்துள்ளன. ஆனால், அந்த குறிப்பிட்ட பிரதி மட்டும் கிடைக்கவில்லை. அந்த பத்திரிகையை தேடிக்கொண்டு இருக்கிறோம் என எங்களின் முந்தைய கட்டுரையில் அப்டேட் செய்து இருந்தோம்.

எங்களுக்கு கிடைத்த வலுவான ஆதாரத்தின் அடிப்படையிலேயே தேவர் மற்றும் கோல்வால்கர் இருக்கும் புகைப்படங்கள் என பகிர்ந்தவற்றை போலியானவை என நிரூபித்து இருந்தோம். இருவரின் சந்திப்பு குறித்து வெளியானதாக கூறப்படும் ” தியாக பூமி ” பத்திரிகையின் பிரதி கிடைக்கும் பட்சத்தில் அதை நிச்சயம் வெளியிடுவோம் என்பதை மீண்டும் தெரிவித்து கொள்கிறோம்.

ஆனால், அவர்கள் காண்பித்த பக்கம் தியாக பூமி என்பதற்கான எந்தவொரு சுவடும் இல்லை. அந்த பக்கத்தில் பத்திரிகையின் பெயருமில்லை, தேதியும் இல்லை. ஆக, அதை ஆதாரம் என்று சொல்வது பெரிய அபத்தம். பழைய பிரதிகளை சேமித்து வைக்கும் ரோஜா முத்தையா நூலகத்திலேயே கிடைக்கவும் இல்லை. இப்படியான அபூர்வமான பத்திரிகையின் பக்கம் எப்படி கிடைத்தது, இருபெரும் தலைவர்கள் சந்தித்த நிகழ்வு எனில் ஏன் போலியான புகைப்படத்தை காண்பிக்க வேண்டும்.

உண்மையான புகைப்படம் கிடைக்கவில்லையா அல்லது முன்னணி பத்திரிகை ஏதும் செய்தி வெளியிடவில்லையா என்ற கேள்விகளும் நீள்கிறது. போலி என்று சொன்னால் அதற்கு ஒரு போலிச் செய்தியை தயார் செய்வதை விடுத்து உண்மையான செய்தியை ஆதாரத்துடன் கொடுத்தால் வெளியிடத் தயாராக இருக்கும் எங்களைப் பற்றி பேசி என்ன ஆகப் போகிறது. ஆதாரத்துடன் வாருங்கள்.

Please complete the required fields.




Back to top button
loader