கேரளாவில் பாவமன்னிப்பு கேட்கச் சென்ற பெண்ணை பலாத்காரம் செய்த பாதிரியார்கள்..!

கேரளாவின் மலங்கரை ஆர்தோடக்ஸ் கிறிஸ்துவ சபையின் கீழ் இயங்கி வரும் சர்ச்சின் பாதிரியார்கள் ஐவர் மீது மே 7-ம் புகார் கடிதம் ஒன்று வந்துள்ளது. பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பாதிரியார்களே பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார்.

Advertisement

ஆனிக்காடு பகுதியைச் சேர்ந்த ஜான்சன் என்பவர் துபாயில் பணிப்புரிந்து வருவதால் அவரின் மனைவியும், இரு குழந்தைகளும் கேரளாவில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், துபாயில் இருந்த ஜான்சனுக்கு தன் மனைவி கிரெடிட்கார்டு மூலம் அதிக தொகை செலவு செய்த செய்தி செல்போனுக்கு மெசேஜ் ஆக வந்ததை அடுத்து விசாரித்ததில் அதிர்ச்சி அடைந்துள்ளார். திருமணத்திற்கு முன்பாகவே ஜான்சன் மனைவி அவரின் உறவினரும், பாதிரியாரான ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை தன் கணவனிடம் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார். இரண்டு குழந்தைகளை பெற்ற பிறகு அதன் தாக்கம் மனதில் உறுத்தலாக இருந்து வந்துள்ளது. ஆகையால், சர்ச்சில் பாவமன்னிப்பு கேட்க சென்றுள்ளார் ஜான்சனின் மனைவி. சர்ச்சில் பாவமன்னிப்பு என்பது நம்மை அறிந்தும், அறியாமலும் செய்த தவறுகளை இறைவனுக்கு தொண்டு செய்யும் பாதிரியாரிடம் கூறி மன்னிப்பு கேட்பதாகும். இதனால் மனதில் இருக்கும் சுமை தீரும் என்பது அவர்களின் நம்பிக்கை.

ஆனால், பாவமன்னிப்பு அளிக்க வேண்டிய பாதிரியாரே மன்னிக்க முடியாத பாவத்தை செய்துள்ளார். கடந்த கால சம்பவத்தை வெளியில் கூற கூடாது என்றால் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று மிரட்டப்பட்டுள்ளார் ஜான்சனின் மனைவி. அதன்பின், அவரை ஹோட்டலில் வைத்து பலாத்காரம் செய்து அதை வீடியோ, புகைப்படம் எடுத்துள்ளார் அந்த பாதிரியார். அதுமட்டுமின்றி ஜான்சனின் மனைவி பற்றி சர்ச்சில் உள்ள மற்ற பாதிரியார்களிடமும் பகிர்ந்து உள்ளார்.

இதையடுத்து, ” மற்ற பாதிரியார்களும் ஜான்சன் மனைவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதை அறிந்த ஜான்சன் கத்தோலிக்க சபை பிஷப்பிடம் மனைவி சொன்ன தகவலின்படி 8 பேர் மீது புகார் தெரிவித்தார். மேலும், ஜான்சன் மனைவியை தொடர்ந்து பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல் பணமும் பறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் “.

ஆர்தோடக்ஸ் கிறிஸ்துவ சர்ச்சில் நாடு முழுவதிலும் இருந்து வந்த 30-க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் உள்ளனர். புகார் தெரிவிக்கப்பட்ட பாதிரியார்களில் 4 பேர் கேரளாவையும், ஒருவர் டெல்லியையும் சேர்ந்தவர். இந்த புகார் தொடர்பாக 5 பாதிரியார்களையும் விடுப்பில் செல்லுமாறு சர்ச் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் கேரளப் பெண் பாதிரியார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட செய்தி வைரலாகி கோப அலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ஜான்சன் மற்றொருவருடன் தனது மனைவிக்கு நடந்த கொடுமைகள் பற்றி பேசும் ஆடியோ பதிவு வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

இச்சம்பவம் குறித்து சர்ச் சபை விசாரணை நடத்தி வருகிறது. ஜூலை மாதத்தின் இறுதியில் விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்வதாகவும், காவல்துறையில் புகார் தெரிவிக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். பெண் பாதிக்கப்பட்ட சம்பவம் உண்மையா என்று எங்களுக்கு தெரியவில்லை. முழுமையான விசாரணைக்கு பிறகே புகார் உண்மையா அல்லது பொய்யா என்று கூற இயலும். விசாரணை முடிந்த பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றியும் கூற முடியும் என சர்ச்சின் செய்தித்தொடர்பாளர் பி.சி.எலியாஸ் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டு உண்மை என அறிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சர்ச்சின் செயலாளர் பிஜி ஓம்மேன் தெரிவித்துள்ளார். சர்ச்சின் வேண்டுகோளுக்கு இணங்க காவல்துறையில் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை. எனினும், சமூக வலைத்தளங்களில் இச்சம்பவத்திற்கு கண்டனங்கள் தொடர்ந்து எழுகிறது. மறுபுறம் சர்ச் தரப்பில் பாதிரியார்களை காப்பாற்றும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இறை வாழ்கையில் ஈடுபடுவதாகக் கூறி சுகபோக வாழ்வை அனுபவித்துக் கொண்டு பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யும் மதகுருக்கள் இங்கு அதிகளவில் உள்ளனர். இறைவனுக்கு தொண்டு செய்கிறோம் என மதத்தின் பெயரைப் கவசமாக அணிந்து கொடூரமான செயல்கள் அனைத்தையும் செய்து வருகிறார்கள். பாவமன்னிப்பு அளிக்க வேண்டியவர்கள் பாவத்தை செய்கிறார்கள். தவறு இழைப்பது யாராக இருந்தாலும், எந்த மதத்தை சேர்ந்தவராக இருப்பினும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

 

5 kerala priests Accused of ” sex abuse” , blackmailing, suspended  

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button