பெட்ரோல், டீசல் வரி ஜிஎஸ்டி-க்குள் இருப்பதாக தவறாகக் கூறிய அமைச்சர் கே.என்.நேரு !

தமிழ்நாட்டில் சொத்துவரி உயர்வு குறித்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, ” பெட்ரோல், டீசல் வரி விதிப்பு ஜிஎஸ்டி-க்குள் இருப்பதாகவும், வரி விதிப்பு எல்லாம் ஒன்றிய அரசிடம் இருப்பதாகவும் ” என தவறான தகவல் ஒன்றை பேசி இருக்கிறார்.

10ரூபாய் விற்ற பெட்ரோல் 100ரூபாய் விற்கிறது, அதை எதிர்ப்பு ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி போரட்டம் பண்ணவில்லை. டீசல் விலை உயர்ந்து இருக்கிறது, சமையல் எரிவாயுவிலை உயர்ந்து இருக்கிறது போராட்டம் பண்ணவில்லை. அதை எதிர்த்து போராட்டம் பண்ண வேண்டியதுதானே.

நிரூபர் ஒருவர் பெட்ரோல், டீசல் மீது மாநில வரி அதிகமாக இருப்பதாக கேட்ட கேள்விக்கு, ” பெட்ரோல், டீசலா.. அதுலா அந்த காலம். இப்போ ஜிஎஸ்டி வந்து அவங்க எடுத்துட்டு போய்ட்டாங்க. நாங்க இருந்த காலத்தில் வரி போட்டது மாநில அரசு. தெரிஞ்சுட்டு கேளுங்க. இப்போ ஜிஎஸ்டி சென்ட்ரல் கவர்மெண்ட் ” எனப் பேசி இருக்கிறார்.

மேலும் படிக்க : அடுத்த பொய் செய்தி: சமையல் எரிவாயு விலை உயர்விற்கு மாநில வரி காரணமாம் !

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட வாகன எரிபொருள் மீது ஒன்றிய வரி மற்றும் மாநில வரி விதிக்கப்படுகிறது என அறிவோம். சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மட்டுமே சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) விதிக்கப்படுகிறது. தற்போது வரை பெட்ரோல், டீசல் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவில்லை.

ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீது ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரி மட்டுமே 50ரூபாய்க்கு மேல் உள்ளது. பெட்ரோல் மீது தமிழ்நாடு அரசு வரியாக 20 ரூபாய்க்கு மேல் வரி விதிக்கிறது. இப்படி எரிபொருள் மீதான ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வரிகள் குறைக்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகிறது. ஆனால், பெட்ரோல், டீசல் மீது ஜிஎஸ்டி வரி விதிப்பதாக தவறான தகவலை அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார்.

Please complete the required fields.




Back to top button
loader