பார்க்கிங் பகுதியில் தானாக நகர்ந்து செல்லும் ஏணி | ஆவியா? அறிவியலா?

Infosys Mcity Confessions என்ற முகநூல் பக்கத்தில், சென்னையில் DLF-யின் பார்க்கிங் பகுதியில் ஏணி ஒன்று தானாக நகர்ந்து செல்லும் காட்சியைக் கொண்ட கீழ்காணும் 0.29 நொடிகள் கொண்ட வீடியோ பதிவாகி இருக்கிறது.

Advertisement

Facebook link | archived link

ஆச்சரியமான ஒன்றாக பதவிடப்பட்ட இவ்வீடியோ 40 ஆயிரம் பார்வைகளையும், நூற்றுக்கணக்கான ஷேர்களையும் பெற்று வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஃபாலோயர் தரப்பிலும் கேட்கப்பட்டு உள்ளது.

இந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில், ஆவி இருப்பதாக கிண்டல் செய்து பலரும் தங்களின் கமெண்ட்களை பதிவிட்டு இருக்கிறார்கள். ஒரு சிலர், அந்த ஏணியின் கால் பகுதி சமமாக இல்லாமல் இருப்பதாலும், ஏணி நகர்ந்து செல்லும் பகுதி சாய்ந்த இடமாக இருப்பதால் நகர்வதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

Video link

Advertisement

இருபக்கம் ஏறும் வகையில் இருக்கும் ஏணிகள் தானாக நகர்ந்து செல்வதாக வீடியோக்கள் பகிரப்படுவது முதல் முறையல்ல. 2018-ல் கேரளாவில் ஏணி தானாக நகர்ந்து செல்லும் வீடியோ பரவியது குறித்து டெய்லி மெயில் தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தனர்.

Twitter link | archived link 

இதேபோல், 2017-ல் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையப் பகுதியின் கட்டுமானப் பணி நடைபெற்ற இடத்தில் ஏணி தானாக நகர்ந்து செல்லும் வீடியோவுடன் ஆவி என வைரலாகியது. இதற்கு பின்னால் இருப்பது சாதாரண அறிவியல்தான்.

” மேற்காணும்  வீடியோக்களில் ஏணி நகர்ந்து செல்லும் பகுதி சமமான தரை பகுதியாக இல்லாமல், சாய்வைக் கொண்டதாக இருப்பதை காணலாம். யாராவது ஏணியை தட்டி இருந்தால் அது குலுங்கத் தொடங்கும். சாய்வின் மூலம் இயங்கும் ஈர்ப்பு விசையே போதுமானது என்பதால் ஏணி குலுங்கிக் கொண்டே இருக்கிறது. ஏணியின் மீது இருக்கும் குலுங்கல் ஆனது ஏணி கீழே விழும் அளவிற்கு அதிகமாக இல்லை. ஏணியின் அமைப்பும் மற்றும் ஸ்ப்ரிங் அதனை கீழ்நோக்கி  இழக்கும் வலிமையுடன் சமமாக இருக்கின்றன “.

இதுவே சாய்வான பகுதியில் இருபக்கம் ஏறும் அமைப்பை கொண்ட ஏணிகள் நகர்ந்து செல்வதற்கான காரணம். இதுபோன்ற வீடியோ பல நாடுகளில் எடுக்கப்பட்டு இணையத்தில் வைரல் செய்யப்படுகின்றன. சென்னையில் ஏணி நகர்ந்து செல்வதாக பதிவான வீடியோ கிண்டலுக்கும், நகைச்சுவையாக பகிர்ந்து இருந்தாலும், சிலர் அதனை ஆச்சரியமாகவும், ஆவியாகவும் பார்க்கின்றனர்.

Proof links : 

It’s a step ladder! Equipment appears to walk by itself in India

The truth behind spooky ‘possessed’ ladder that netizens claim is at Changi Airport

Youturn கடந்த மூன்றாண்டுகளாக உண்மைகண்டறிதல் பணியை செய்கிறது. இதற்கு உங்கள் துணையும் அவசியமாகிறது. அதற்கு நீங்கள் உறுப்பினர் சேர்க்கை மூலம் அதை சாத்தியமாக்கலாம். உறுப்பினர்களுக்கு சில சலுகையும் சிறப்புத்திட்டமும் உண்டு. சேர்ந்து எங்கள் பணியை நம் பணியாக மாற்றி மக்களின் ஊடகமாய் நாம் இருக்க வழி செய்யுங்கள்

Subscribe to Membership

Ask YouTurn

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker