உ.பியில் விவசாயிகள் மீது கார் ஏற்றி படுகொலை செய்தது திட்டமிட்ட சதி : சிறப்பு விசாரணை குழு !

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் அலட்சியத்தால்/விபத்தால் நிகழ்ந்த மரணம் அல்ல, திட்டமிட்ட சதி என்று சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

Advertisement

அக்டோபர் 3-ம் தேதி, ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இறந்த விவசாயிகளின் குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவில் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ராவை முக்கிய குற்றவாளியாகக் குறிப்பிட்டனர். ஆனால், புகார்கள் மற்றும் கண்டனங்கள் எழுந்தும் அமைச்சரின் மகன் கைது செய்யப்படாமல் நேரம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், விசாரணையில் உத்தரப் பிரதேச அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை என உச்ச நீதிமன்றம் கூறிய ஒரு நாளுக்கு பிறகு அக்டோபர் 9-ம் தேதி ஒன்றிய இணை அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டார்.

உள்ளூர் போலீஸ் விசாரணையை தவறாக கையாளக்கூடும் என்ற எண்ணத்தில் உத்தரப் பிரதேசத்தை சேராத 3 ஐபிஎஸ் அதிகாரிகளை சிறப்பு புலனாய்வு குழுவில் இடம்பெறச் செய்தது உச்ச நீதிமன்றம். இந்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை விரைந்து முடிக்குமாறு கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், ” லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தை விசாரிக்கும் உத்தரப் பிரதேச காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு, சம்பவத்தின் போது அங்கிருந்தவர்களைக் கொல்ல திட்டமிட்ட சதி இருந்ததாக லக்கிம்பூர் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

மேலும், ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்பட குற்றம்சாட்டப்பட்டவர்களின் மீது வேகமாக வாகனம் ஓட்டியதாக பதியப்பட்ட குற்றச்சாட்டுகளை மாற்றியமைக்க வேண்டும், கொலை முயற்சி உள்ளிட்டவை சேர்க்க வேண்டும் என கடிதம் மூலம் நீதிமன்றத்தில் எஸ்.டி.ஐ தெரிவித்து உள்ளதாக ” லைவ்லா இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

links :

Lakhimpur Kheri Violence Result Of Premeditated Plan; Act Done With An Intention To Kill: Police SIT Tells UP Court

lakhimpur-kheri-case-farmers-killing-in-up-planned-conspiracy-says-probe-team-sit

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button