புல்லை உண்ணும் சிங்கம் | அதிசய நிகழ்வு அல்ல !

காட்டில் வேட்டையாடி மாமிசத்தை உண்ணும் சிங்கம் புல்லை சாப்பிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிக் கொண்டே இருக்கிறது..

2019 ஆகஸ்ட் 29-ம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட செய்திகளில் சிங்கம் புல்லை உண்ணும் வீடியோவும் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள காம்பா வனப் பகுதியில் பசுமையான புல்லை உண்ணும் காட்சி பதிவாகி இருக்கிறது.

Advertisement

சிங்கம் புல்லை உண்ணும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஆனால் , சிங்கம் புல்லை உண்பது இயல்பான விசயம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சில விலங்குகள் வயிற்றில் செரிமானப் பிரச்சனைகள் இருக்கும் பொழுது புல்லை உண்பது வழக்கம். செரிமானம் ஆகாமல் இருக்கும் உணவை வாந்தி எடுக்க புல்லை உண்ணும் என வன அதிகாரி சந்தீப் குமார் கூறியதாக செய்தியில் வெளியாகி உள்ளது.

சிங்கம் புல்லை உண்ணும் வீடியோவை சில ஆச்சரியமாக பார்க்கின்றனர், சிலர் இது சாதாரண நிகழ்வே என சமூக வலைதளங்களில் பகிர்வதை காண முடிகிறது.

Advertisement

Link : 

Video of a ‘grass-eating’ lion excites social media

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Support with

Ask YouTurn

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close