This article is from Dec 27, 2018

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் !

You Turn முகநூல் பக்கத்தில் இதுவரை நடந்த கருத்துக்கணிப்பு பற்றி பெரிதுப்படுத்தி பார்த்தது இல்லை. இதுவரை நடந்த கருத்துக்கணிப்புகள் Followers உடன் இருக்கும் தொடர்பை மேம்படுத்தவே மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அவற்றில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் இரவு நேரத்திலேயே நடத்தப்பட்டு இருக்கும். அதன் முடிவுகளைப் பற்றியோ, வெற்றி அல்லது தோல்வி பற்றியோ, கட்டுரையோ அல்லது சிறிய மீம் கூட Youturn பதிவிட்டது இல்லை.

ஆனால், தற்போது நடந்த மோடி அவர்களின் ஆட்சிக்  கருத்துக்கணிப்பு பற்றியும், தமிழகத்தில் தாமரை மலர்வது குறித்தும் இக்கட்டுரையை எழுதுகிறோம்.

சமீபத்தில் பதிவிட்ட கருத்துக்கணிப்பு : 

கேள்வி : மோடி அவர்களின் ஆட்சி

பதில்கள் : 1. பிரமாதம் 2. சுத்த மோசம்

இக்கருத்துக்கணிப்பில் 10 ஆயிரம் ஓட்டுகள் விழுந்தன. இதில், சுத்த மோசம் என்பதற்கு 58 சதவீத வாக்குகளும், பிரமாதம் என்பதற்கு 42 சதவீத வாக்குகளும் முடிவாக அமைந்தது.

கருத்துக்கணிப்பின் தொடக்கத்தில் சுத்த மோசம் என்ற பதில் 91 சதவீதமாகவும், பிரமாதம் 9 சதவீதமாகவும் இருந்து வந்தது. நேரம் ஆக ஆக கருத்துக்கணிப்பின் பாதை தலைகீழாக மாறியதை காண முடிந்தது. 9 சதவீதம் இருந்த போது கமெண்டில் யார்டா அந்த 9 சதவீதம் என கிண்டல் செய்து கொண்டு இருந்தனர்.

திடீரென வழக்கத்திற்கு மாறாக சரசரவென்று ஓட்டு எண்ணிக்கை அதிகம் ஆனது.. பகிர்வும் அதிகம் ஆனது.. அதில், கமென்ட் செய்தவர்கள் கேட்ட விசித்திரமான கேள்விகள் நம்மை ஆச்சரியப்படுத்தியது. அதில், சில

மேலே உள்ள ஸ்க்ரீன்சார்ட்களை பாருங்கள். முதலில் நாம் மோடி அவர்களையோ அல்லது பாஜகவையோ விமர்சித்து எந்த கருத்தும் வெளியிடவில்லை. யாருக்கும் தெரியாமல் இதை நடத்தி விட்டோம் என்பது பெரும் நகைச்சுவை. நமது பக்கத்தில் வெளிப்படையாக கேட்கப்பட்ட கேள்விதான் அது. கொடுக்கப்பட்ட Option-களே தவறு என்ற கேள்வியும் அபத்தமாக இருக்கிறது. முதலில் இரண்டு Option, அதில் ஒன்று ஆதரவாகவும், இன்னொன்று எதிராகவும் இருக்கும். அதிலும், பிரமாதம் என்கிற சொல்லையே முதலில் குறிப்பிட்டு இருந்தோம்.

நாம் வெளியிட்ட கேள்வி நேரம் சரியில்லை, option சரியில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை நம் மீது வைக்கும் பொழுது ஆடத் தெரியாதவள் தெருக் கோணல் என்பாளாம் அவ்வாறான கதையாகத் தான் இருக்கிறது.

இதுக்கு அடுத்தக்கட்டமாக பலரும் நம்மை வசைப்பாடத் துவங்கினர்.

அதில், குறிப்பாக நம்மை கிறிஸ்தவர் ஆக்குவதிலும், முஸ்லீம் ஆக்குவதிலும் கவனமாக இருந்ததை கவனிக்க முடிந்தது. மதமாற்றமே வேண்டாம் என்பவர்கள் நம்மை ஏன் பல மதங்களுக்கு மாற்றினர். இப்படி, பலவாறாக ட்ராவல் செய்து கடைசியில் 42% ஆக முடிந்தது.

சரி, இந்த 42%-ல் வாக்களித்தவர்கள் அவர்களின் கட்சியை சேர்ந்தவர்கள் தானா என ஆராய்ந்தோம். அப்படி செய்த போது, இந்த 42%-ஐ கொண்டு வர கடினமாக homework செய்துள்ளனர் என தெரிந்தது.

சரி, கட்சி பக்கங்களுக்கு எல்லாம் அனுப்பி இருக்கிறார்கள், அவர்கள் ஆட்கள் வாக்களித்து வெற்றிப் பெற்றால் கூட சரிதான் என்று இருந்தோம். ஆனால், வாக்கு அளித்த பல ஐடிகள் FAKE IDகள். உங்கள் பார்வைக்கு.

இதை டென்ஷன் ஆகி எமோஷன் ஆக வேண்டிய விசயமே இல்லை. மிக எதார்த்தமாக நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பு. அதை வைத்து கடுமையான பரப்புரை ஏதும் செய்யப்போவதில்லை. அந்த எளிய விசயத்தை கூட புரிந்துக் கொள்ளாமல் விடிய விடிய கண் விழித்து fake id-களை வைத்து ஓட்டுப் போட்டு, எங்களை கெட்டக் கெட்ட வார்த்தையில் திட்டி, புலம்போ புலம்போ என புலம்பி, அதிலும் 16 சதவீதத்தில் அவர்களை தோற்கடித்து யாருமே கவனிக்காமல் போயிருக்க வேண்டிய கருத்துக்கணிப்பை பலரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று ஒரு பெரிய Hype-ஐ ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

சரி, தலைப்பிற்கு வருவோம்…

இதே போன்று துண்டு பீடி, மும்தாஜ், கேடி பில்லா ரிட்டன், நாரதர் போன்றோர் வாக்களித்தால் தமிழகத்தில் தாமரை மலர்வது உறுதி. ஆனால், உலகத்திலேயே fake எது என்று சொல்லும் தளத்திற்கே வந்து fake id-களை வைத்து வாக்களித்து அத்தோடு விடாமல் கமென்ட்களில் வம்பு இழுத்து. எங்கள் அப்பன் குதிர்க்குள் இல்லை என காட்டிக் கொடுத்து. போதாததற்கு சந்தோசம் அடைந்து இதுபோன்ற மீம்களையும் பதிவிடுகிறார்கள்.

சும்மா போய் கொண்டு இருந்த சனியனை பனியனுக்குள் போட்டுக் கொண்ட கதையாக எந்த விமர்சனமும் செய்யாமல் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் வீணாக வம்பு இழுத்து தங்களை தாங்களே தரம் தாழ்த்தி IT WING தங்களை வளர்ப்பதற்கு பதிலாக அவர்களாலே அழிவுறும் நிலையை நோக்கிச் செல்கிறது.

நாங்களே Fake id-களிலும், புரளிகளிலும் பலமானவர்கள் என்று ஆதாரத்தோடு மாட்டிக் கொள்ளும் அறிவுடன் இயங்கும் IT WING எதற்கு ?

ஸ்மார்ட் ஆக விட்டு இருக்க வேண்டிய விசயத்தை இப்படி இழுத்து வைத்துக் கொண்ட ஆட்களை மாற்றி எங்களை போன்ற நல்ல DATA engineer-களை வைத்து தகவல் தொழில்நுட்ப பிரிவை நடத்த வேண்டுகிறோம்.

எங்களை வாழ வைத்துக் கொண்டு இருக்கும் அனைத்து fake id-களுக்கும் நாங்கள் சொல்லிக் கொள்வது என்னவென்றால் வாழ வைத்த தெய்வங்களை கலாய்த்தோம் என்ற அவப்பெயரை எங்களுக்கு தர வேண்டாம். நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை.

ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறோம் இவர்களை நம்பினால் தேரை இழுத்து தெருவில் விட்டு விடுவார்கள். உடனடியாக தக்க நடவடிக்கை எடுங்கள்.

தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது என சந்தோசப்பட வேண்டாம் படத்தில் இருப்பது அல்லி !

Please complete the required fields.




Back to top button
loader