காங்கிரஸ் ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.1,250 வரை உயர்ந்ததா ?

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வே அனல் பறக்கும் விவாதங்களா ஊடகத்திலும், சமூக வலைதளத்திலும் அமைந்துள்ளது. விலை உயர்விற்கு எதிராக பொதுமக்கள், எதிர் கட்சியினர் கேள்வி எழுப்புவது போன்று, ஆளும் கட்சியினரும், அவர்களின் ஆதரவாளர்களும் முந்தைய அரசை குற்றம்சாட்டி பேசியும், பதிவிட்டும் வருகிறார்கள்.

Advertisement

Facebook link | Archive link

இந்நிலையில், முந்தைய காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து விலகுவதற்கு முன்பாக கேஸ் சிலிண்டர் விலை ரூ.1250 வரை உயர்ந்ததாகவும், அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை ஏன் எனக் கேள்விக் கேட்டு பகிர்ந்து வருகிறார்கள். 2014-ம் ஆண்டு ஜனவரியில் ரூ.1,252க்கு வாங்கப்பட்ட சிலிண்டர் பில் ஒன்றையும் பகிர்ந்து வருகிறார்கள்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ.1,250 வரை உயர்ந்தது உண்மையே. 2013 டிசம்பர் மாதம் தொடங்கி 2014 மார்ச் மாதம் வரை ரூ1,000-க்கு மேல் மானியம் இல்லாத சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் உடைய இணையதளத்தில், “Previous Price of Nonsubsidised 14Kg IndaneGas ” எனும் பிரிவில் 2013 டிசம்பர் முதல் தற்போது வரை உள்ள விலை நிலவரம் இடம்பெற்று இருக்கிறது.

Advertisement

” 2012-ம் ஆண்டில் வீடுகளுக்கு மானியத்துடன் 6 சிலிண்டர் என இருந்த எண்ணிக்கை 2013 ஜனவரியில் 9 ஆக உயர்ந்தது. அந்த எண்ணிக்கைக்கு மேல் தேவைப்படும் என்றால் சந்தையில் விற்பனை செய்யப்படும்(மானியம் இல்லாமல்) விலைக்கு எத்தனை சிலிண்டர்கள் வேண்டும் என்றாலும் வாங்கி கொள்ளலாம்.

மானியத்துடன், டெல்லியில் 14.2கி சிலிண்டர் விலை 414 ரூபாய். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கேஸ் சிலிண்டர்களை மானியத்துடன் விற்பனை செய்வதால் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனத்திற்கு சிலிண்டருக்கு 762.70 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. தேவை அதிகரித்த காரணத்தினால் சர்வதேச எல்பிஜி விலை உயர்ந்ததாக ” 2014 ஜனவரியில் எகனாமிக் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு வந்த பாஜகவின் ஆட்சியில் 2018 நவம்பர் மாதத்தில் மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ.970 வரை உயர்ந்தது. இவ்விரு தருணங்களிலும், அரசு மானியம் பெறும் பயனர்களுக்கு மானியத் தொகையை அதிகரித்து இருந்தது.
.
ஒவ்வொரு முறையும் கேஸ் சிலிண்டர் விலை உயரும் போது மானியத் தொகையும் சேர்த்து உயர்த்தப்படும். அதேபோல், விலை குறையும் போது மானியத் தொகை குறைக்கப்படும். ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில் கேஸ் சிலிண்டர் விலை மாற்றப்படும். ஒவ்வொரு மாநிலத்தின் வரிகளுக்கு ஏற்ப விலையில் மாற்றம் ஏற்படும்.
.
2021 பிப்ரவரி தொடக்கத்தில் மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ.735 ஆக இருந்தது. பின்பு சில நாட்களில் மீண்டும் 50ரூ விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டில் இருந்து பயனர்களுக்கு மானியத் தொகையானது சொற்பமாக செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த மாத நிலவரப்படி, மானியத்துடன் கூடிய சிலிண்டர்களை பெறும் பயனர்களுக்கு ரூ.25 வரை மட்டுமே மானியத் தொகை செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
.

2014 ஜனவரியில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ.1250 வரை உயர்ந்தது உண்மையே. அதே நேரத்தில், பயனாளர்களுக்கு மானியத் தொகையும் உயர்த்தப்பட்டு ரூ.414க்கு சிலிண்டர் வழங்கப்பட்டது. சமூக வலைதளத்தில் பகிரப்படும் பில் மானியம் இல்லாத சிலிண்டர் உடையது.

2018-ல் பாஜக ஆட்சியிலும் மானியம் இல்லாத சிலிண்டர் விலை 970 ரூபாய் வரை உயர்ந்து இருக்கிறது. கடந்த மாதம் ரூ.710க்கு விற்கப்பட்ட மானியம் இல்லாத சிலிண்டருக்கு ரூ.25 மட்டுமே மானியத் தொகை வழங்கப்பட்டு இருக்கிறது.

Links : 

Previous Price of Nonsubsidised 14Kg IndaneGas

price-of-non-subsidised-lpg-hiked-by-rs-220-to-rs-1241-per-cylinder

LPG refill price hiked by up to ₹149, steepest since January 2014

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button