சர்ச்சைகளுக்கு மதன் கௌரியின் பதில் !

பிரபல Youtuber ஆன மதன் கௌரி பற்றி சர்ச்சையும், பிரைவசி புகைப்படங்களும் முகநூல் பக்கங்களில் பதிவிடப்படுகிறது. Schumy vanna kaviyangal என்ற முகநூல் பக்கத்தில் பதிவிட்டனர்.

சர்ச்சைக்குரிய செய்திகள் பற்றி மதன் கௌரியிடமே youturn நேரடியாக கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு அவர் அளித்த பதில்களும் விவரமாக இக்கட்டுரையில் எழுதுகிறோம்.

Advertisement

கேள்வி : உங்களைப் பற்றி பரவும் செய்தி பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

மதன் பதில் : ரொம்ப வருத்தமாக இருக்கிறது. இதுமாதிரி பிற பிரபலமானவர்களுக்கு நடப்பது பற்றி பார்த்து வளர்ந்தவன். அந்த பக்கத்தில் இருந்து பார்க்கும் பொழுது பொழுதுபோக்காக இருந்தது. இந்த பக்கம் இருந்து பார்க்கும் பொழுது தனிப்பட்ட முறையில் வருத்தமாக இருக்கிறது.

கேள்வி : உங்கள் பற்றி நிறைய விசயங்கள் பதிவிடுகிறார்கள். அது உண்மையா பொய்யா ?

மதன் பதில் : நானும் மனுஷன் தான். என்னோட பிரைவசி என்ற விஷயம் இல்லாமல் போய்விட்டது. என் பிரைவசியை பிரைவசியாக இருக்க விட்டுட்டால் நல்லா இருக்கும். அதேமாதிரி, யாராச்சும் வருத்தப்பட்டு இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். ப்ரைவேட் ஆக இருக்க வேண்டிய விசயங்களை பப்ளிக் ஆக மாற்றுவது என்னை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பது எனக்கு தான் தெரியும்.

Advertisement

கேள்வி : நீங்கள் self control, masturbate பண்ணக் கூடாது என பேசுகிறீர்கள் ? அப்படி இருப்பவர் பிரைவேட் வாழ்க்கையில் பெண்களிடம் பேசுவதற்கு தயங்காமல் இருக்கிறார். ஆக சொல்வதோடு சரி செயலில் இல்லை என்ற கேள்வி எழுகிறது. அதைப் பற்றி ?

மதன் பதில் : வீடியோவில் பேசும் பொழுது masturbate பண்ணக் கூடாது என்று சொல்லி இருக்கேன். இறுதியில் அதிகமாக சென்றால் தான் பிரச்சனை என்றும் கூறி இருப்பேன். என் வீடியோவிலேயே முரண்பாடாக தான் இருக்கும். எனக்கு தெரிந்த தகவலை சொல்கிறேன். இதனால் நான் சொல்வதை அப்படியே வேத வாக்காக ஏற்றுக் கொள்ள வேண்டும் என நான் சொல்ல வரவில்லை.

கேள்வி : உங்களை பின்பற்றுபவர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள் ? வீடியோவில் முரண்பாடு இருக்கும் என சொல்கிறீர்கள் ? உங்களை பின்பற்றும் 15 லட்சம் பேரும் நீங்கள் கூறினால் சரி என நினைப்பவர்கள் தானே ?

மதன் பதில் : 15 லட்சம் பெறும் என்னை நம்புகிறார்கள் என நினைக்கவில்லை. அப்படி நினைத்தால், இது தப்பு என சொல்பவர்கள் கூட அந்த 15 லட்சம் பேரில் தான் இருக்கிறார்கள். பார்ப்பவர்களுக்கு தெரியும் எது சரி எது தவறு என்று. இந்த உலகத்தில் எதுவும் 100% உண்மை எனவும், 100% பொய்யும் என நான் நினைக்கவில்லை. இன்று நாம் நம்பும் விஷயம் நாளைக்கு இல்லாமல் போகலாம். நான் கூறுவதை verified news ஆக பார்க்க வேண்டாம் என்று என்னை பின்பற்றுபவர்களிடமே பலமுறை கூறி இருப்பேன்.

கேள்வி : மதன் சொன்னால் சரி ? மதன் சொன்னால் கேட்போம் ? மதன் பற்றி தவறாக வந்தால் பொய்யாக தான் இருக்கும் என உங்களை பின்பற்றுவர்கள் நினைக்கிறார்கள். இந்த சர்ச்சையிலும் கூட பொய்யாக தான் இருக்கும் என நினைக்கிறார்கள் அல்லவா ?

பதில் : அவர்களிடம் நான் சொல்கிற ஒரே விசயம் “ நானும் மனுஷன் தான் “. 25 வயது ஆகிற சாதாரண பையன் மட்டுமே.

கேள்வி : ஒருதரப்பு மக்கள் உங்களை எதிர்க்கிறார்கள் ? திட்டுகிறார்கள். அவர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள் ?

மதன் பதில் : நான் முதலிலேயே சொன்னது தான் “ நானும் மனுஷன் தான் “.நான் ஆராய்ச்சி செய்து சொல்வதில்லை, புத்தகங்களை படித்து வாசிக்கிறேன். அவர்கள் கூறுவதை தான் நானும் கூறுகிறேன்.

கேள்வி : நீங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அதைச் சார்ந்து பேசுகிறீர்கள் என்கிறார்களே ?

மதன் பதில் : தனிப்பட்ட முறையில் சைவ உணவு பழக்கம் உடையவர். அவர்கள் என்னை பிராமணர் என்று நினைத்துக் கொள்கிறார்கள் ஆனால், நான் பிராமணர் வகுப்பை சேர்ந்தவர் இல்லை.. நான் அனைத்து மதத்தையும் சமமாக பார்ப்பவன்.

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Subscribe with

Ask YouTurn

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close