சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கான பரிந்துரையில் பாஜகவின் முன்னாள் தேசிய மகளிரணி செயலாளர் பெயர் !

ச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் சார்பில் 2023 ஜனவரி 17ம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள ஐந்து வழக்கறிஞர்கள் மற்றும் மூன்று நீதித்துறை அதிகாரிகளை நீதிபதிகளாக உயர்த்த பரிந்துரைத்து உள்ளதாக லைவ்லா செய்தி இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

நீதிபதி பணிக்கு பரிந்துரைக்கப்பட்ட 5 வழக்கறிஞர்களில் வேங்கடச்சாரி லட்சுமிநாராயணன், லேக்ஷ்மன சந்திர விக்டோரியா கௌரி, பிள்ளைபாக்கம் பாஹுகுடும்பி பாலாஜி, ராமசாமி நீலகண்டன் மற்றும் கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன.

Twitter link 

இதில், வழக்கறிஞர் லேக்ஷ்மன சந்திர விக்டோரியா கௌரி எனும் விக்டோரியா கௌரி பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி செயலாளராக இருந்தவர். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கறிஞராகவும் இருந்துள்ளார்.

2020ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு ஒன்றிய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக விக்டோரியா கௌரி நியமனம் செய்யப்பட்டார். மதுரை சட்டக்கல்லூரியில் பயின்ற இவர் 25 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார். ஒன்றிய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்படுவதற்கு முன்பாக பாஜகவின் தேசிய மகளிரணி செயலாளராகவும், சென்னை காமராஜர் துறைமுகத்தின் தனி இயக்குநராகவும் பொறுப்பில் இருந்துள்ளார்.

Twitter link 

Facebook link 

உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியங்களில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும் என்றும், நீதிபதிகளின் நியமன விசயத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகளை சேர்க்க அரசியல் சாசன நடைமுறையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சமீபத்தில் கடிதம் எழுதி இருந்தார்.

உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியங்களில் அரசின் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும் என ஆளும் பாஜக அரசு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், பாஜகவின் தேசிய மகளிரணியின் பொதுச்செயலாளராக இருந்த ஒருவரை நீதிபதியாக நியமிக்க ச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்து இருப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

links : 

SC Collegium Recommends Names Of Five Advocates And Three Judicial Officers As Judges Of Madras High Court

Supreme Court Collegium Recommends Elevation of 5 Advocates to Madras HC

bjp-ex-national-women-wing-general-secretary-gowri-appointed-assistant-solicitor-general

Please complete the required fields.




Sanmuga Raja

Sanmuga Raja working as Senior Sub-Editor at YouTurn since May 2017. He holds a Bachelor’s degree in Engineering. His role is to analyze and obtain valid proof for social media and other viral hoaxes, then write articles based on the evidence. In obtaining the proof for claims, he also interviews people to verify the facts.
Back to top button
loader