நாசாவிற்கு அறிவியல் சுற்றுலா செல்லும் மதுரை மாணவி !

2019-ம் ஆண்டிற்கான தேசிய அளவிலான அறிவியல் போட்டியானது Go4guru என்ற கல்வி சுற்றுலா நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்டது. இந்த நிறுவனமானது 2011-ம் ஆண்டில் இருந்து கல்வி சார்ந்த சுற்றுலாவை ஏற்படுத்தி வருகிறது. இந்த அமைப்பின் மூலம் 4,000 இந்திய மாணவர்கள் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் நாடுகளில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையங்களுக்கு அழைத்து செல்ல முயற்சி வருகின்றனர்.

இந்நிலையில், 2019-ல் நடைபெற்ற ” National Space Science Contest 2019 ” போட்டியில் மதுரையைச் சேர்ந்த 10 வகுப்பு மாணவி ஜே.தான்யா தஸ்னம் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மூன்று பேரில் ஒருவர் ஆந்திரப் பிரதேசம் மாநிலம், மற்றொவர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

Advertisement

மதுரை மகாத்மா மாண்டிசரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் தான்யா தஸ்னம் அறிவியல் போட்டியில் வெற்றி பெற்றதால் தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு(நாசா) அறிவியல் சுற்றுலா செல்ல உள்ளார்.

இது குறித்து go4guru நிறுவனத்தின் சிஇஓ கயாம்பூ ராமலிங்கம் கூறுகையில், ” 9 நாட்கள் நாசாவை பார்வையிட ஐக்கிய அமெரிக்காவிற்கு மாணவர்கள் செல்ல உள்ளனர். அங்கு மாணவர்கள் சர்வதேச அளவில் பங்கு பெறும் போட்டியாளர்களுடன் எழுத்து தேர்வை எதிர்கொள்வர். அதில் வெற்றி பெறும் 5 வெற்றியாளர்களுக்கு புளோரிடா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் படிக்க 10,000 அமெரிக்க டாலர்கள் கல்வி உதவித்தொகையாக அளிக்கப்படும் ” எனத் தெரிவித்து உள்ளார்.

மாணவி தான்யா தஸ்னம் உடைய தந்தை ஜாபர் உசேன் மதுரையில் அழகர் கோவில் அருகே டீக்கடை நடந்தி வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக இணையதளத்தில் நாசாவிற்கு செல்ல தேர்வு எழுதினார், அந்த தேர்வில் அப்துல்கலாம் பற்றிய கட்டுரையை தான் தன் மகள் எழுதியதாகவும் கூறியுள்ளார்.

Advertisement

நாசா விண்வெளி வீரர் டான் ஜான்சன் கையில் மாணவி தான்யா வெற்றி சான்றிதழை பெற்று உள்ளார். அக்டோபர் 4-ம் தேதி வரையில் தமிழ்நாட்டில் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் டான் ஜான்சன் உரையாற்ற உள்ளார்.

தற்பொழுது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அப்துல்கலாம் அவர்கள் படிப்படியாக முன்னேறியது போன்று நானும் முன்னேறுவேன் என மாணவி தான்யா தெரிவித்து இருக்கிறார். வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் மாணவி தான்யா அமெரிக்க பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக செய்திகளில் வெளியாகி உள்ளது.

Link : 

Madurai girl bags educational tour to NASA

3 Indian students to visit NASA for a week on winning space science contest

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close