நெற்றியில் உள்ள குங்குமத்தை கார்கே துடைத்தால் இந்துமத வெறுப்பு.. இதையே அமித்ஷா, பாஜக முதல்வர்கள் செய்தால் ?

ர்நாடகா மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பரபரப்பு தொடங்கி விட்டது. தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளுக்கு இடையே வார்த்தை மோதல், விமர்சனங்கள் மட்டுமின்றி போலிச் செய்திகளும் மாறி மாறி பரப்பப்படுவதை பார்த்து வருகிறோம்.

இதற்கிடையில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களின் சந்திப்பின் போது தனது உதவியாளரின் மூலம் நெற்றியில் உள்ள குங்குமத்தை துடைக்கும் வீடியோ காட்சியை காங்கிரசின் இந்துமத வெறுப்பு எனக் கூறி பாஜகவினர் பரப்பி வருகின்றனர்.

காங்கிரஸ் இந்துக்களை வெறுப்பதாகவும், நீங்கள் பாஜகவை வெறுக்கிறீர்கள் சரி எதற்காக திலகத்தை வெறுக்கிறீர்கள் என தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த அமர் பிரசாத் உள்பட அக்கட்சி நிர்வாகிகள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை பார்க்க முடிந்தது.

Twitter link | Archive link

பொதுவாக, எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் நெற்றியில் உள்ள திலகத்தை துடைக்கும் போது அவர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள், இந்துக்களின் நம்பிக்கையை புண்படுத்துகிறார்கள், வாக்குக்காக இந்துக்களிடம் நடிப்பதாக என்றெல்லாம் பாஜகவினர் குற்றம் சுமத்துவது புதிதல்ல.

ஆனால், பாஜகவைச் சேர்ந்த முன்னணி தலைவர்களே நெற்றியில் இருந்த குங்குமத்தை துடைத்து விட்டு செல்லும் போது இந்த கூக்குரல்கள் கேட்பதில்லை.

2023ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி பாஜகவைச் சேர்ந்த கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை ஹுப்ளி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், தனது கைக்குட்டையால் நெற்றியில் உள்ள குங்குமத்தை துடைக்கும் காட்சிகள் கன்னட செய்தி சேனலில் வெளியாகி இருப்பதை பார்க்கலாம்.

2018ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த தற்போதைய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சத்தீஸ்கர் மாநிலத்தின் டோங்கர்கர் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற மா பம்லேஷ்வரி தேவி கோவிலில் வழிபாடு செய்த பிறகு அடல் விகாஸ் யாத்ரா கூட்டத்தில் உரையாற்றினார்.

Facebook link 

பொதுக்கூட்ட மேடையில் அமர்ந்து இருக்கையில் அமித்ஷா தன் நெற்றியில் உள்ள குங்குமத்தை துடைத்து எடுக்கும் காட்சிகள் நியூஸ் 18 இந்தி சேனலில் பதிவாகி இருப்பதை காணலாம்.

இதற்கு அடுத்து இதே வீடியோவில் 7.50 வது நிமிடத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தின் அப்போதைய முதல்வர் ராமன் சிங் தனது நெற்றியில் உள்ள குங்குமத்தை துடைக்கும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன.

இன்று மல்லிகார்ஜுன கார்கே செய்த செயலையே இதற்கு முன்பாக அமித்ஷாவும், பாஜகவின் இரு முதல்வர்களும் செய்து இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. இதுவும் இந்துக்களை அவமதிக்கும் செயலா ?

மேலும் படிக்க : கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி என பிபிசி கருத்துக் கணிப்பு வெளியிட்டதாகப் பரப்பப்படும் போலிச் செய்தி !

மேலும் படிக்க : கர்நாடகாவில் அடித்து நொறுக்கப்பட்ட பாஜக பிரச்சார பேருந்து எனப் பரப்பப்படும் தெலுங்கானா வீடியோ!

கர்நாடகா தேர்தல் களத்தில் போலிச் செய்திகளையும், மதம் சார்ந்த விவகாரத்தையும் அரசியல் கட்சியினர் கையில் எடுத்துள்ளனர். மதம், போலிச் செய்திகளின் மூலம் வாக்காளர்கள் மத்தியில் பிளவை உருவாக்கி தேர்தலில் வாக்கு அறுவடை செய்ய முயல்கின்றனர் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

Link : 

Amit Shah reached Dongargarh meeting place, will start Atal Vikas Yatra

CM Bommai wiped the saffron on his forehead CM Bommai | Hubli Airport |

Please complete the required fields.




Sanmuga Raja

Sanmuga Raja working as Senior Sub-Editor at YouTurn since May 2017. He holds a Bachelor’s degree in Engineering. His role is to analyze and obtain valid proof for social media and other viral hoaxes, then write articles based on the evidence. In obtaining the proof for claims, he also interviews people to verify the facts.
Back to top button