This article is from Jan 29, 2020

Man vs wild ஷூட்டிங்கில் நடிகர் ரஜினிகாந்திற்கு அடிபட்டதா வதந்தி| வெறும் முள் தாங்க !

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் சாகச நிகழ்ச்சியான ” மேன் வெர்சஸ் வைல்ட் ” இல் பேர்கிரில்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளும் தொடரின் ஷூட்டிங் கர்நாடகா மாநிலத்தின் மைசூர் பந்திப்பூர் வனப் பகுதியில் நடைபெற்றது.

கடந்த ஆண்டில் ” மேன் வெர்சஸ் வைல்ட் ” நிகழ்ச்சியில் சிறப்பு தொடராக இந்திய பிரதமர் கலந்து கொண்டது பெரிய அளவில் பேசப்பட்டது. இதையடுத்து, திரைத்துறையைச் சார்ந்த நடிகர் ரஜினிகாந்த் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியின் சிறப்பு தொடரின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டதாக வெளியான செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. மேலும் கிண்டல் மீம்ஸ் பதிவுகளும் பதிவாகின.

இந்நிலையில், மேன் வெர்சஸ் வைல்ட் ஷூட்டிங் நடைபெறும் பொழுது நடிகர் ரஜினிகாந்திற்கு அடிபட்ட காரணத்தினால் ஷூட்டிங் கைவிடப்பட்டதாக மீம்ஸ் பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வந்தது.

ஆனால் ஷூட்டிங் முடிந்த பிறகு நள்ளிரவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த பொழுது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் ரஜினிகாந்த், ” மேன் வெர்சஸ் வைல்ட் ஷூட்டிங்கை முடித்து விட்டு வருகிறேன். ஷூட்டிங்கில் அடிபட்டதாக கூறுகிறார்கள், அப்படியெல்லாம் இல்லை. அங்கு நிறைய முள்கள் இருந்ததால் குத்தி உள்ளது. வேறு எதுவும் இல்லை ” எனக் கூறி இருந்தார்.

மறுபுறம், நடிகர் ரஜினிகாந்த் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஊடகங்களில் பெரிதும் பேசப்படுவதாக சமூக வலைதளங்களில் பல எதிர்மறையான கருத்துக்களும்  எழுகிறது.

Links : 

‘Some Scratches… I’m Alright’: Rajinikanth On ‘Man vs Wild’ Shoot

Please complete the required fields.




Back to top button
loader