அரசு இணையத்தில் மநு நீதி! அதில் மோசமான பல வரிகள் !

சமீபத்தில் திருமாவளவன் மநுநீதி மீது தொடுத்த சர்ச்சையை தொடர்ந்து ஒரு மிக முக்கியமான கேள்வி ஒன்று மீண்டும் மீண்டும் பலரால் கேட்கப்பட்டு வருகிறது. அந்த கேள்வி, “ஏன் இவர்கள் ஹிந்து மதம் தொடர்பான நம்பிக்கைகளை மட்டுமே விமர்சித்து வருகிறார்கள், இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மதங்களை விமர்சனம் செய்ய மறுக்கிறார்கள்?”.
அந்த கேள்விக்கான தேடலை தொடர்ந்து மநு நல்லதா, கெட்டதா எனும் தலைப்பில் யூடர்ன் ஆசிரியர் திரு.ஐயன் கார்த்திகேயன் வெளியிட்ட காணொளியில் கூறப்பட்ட ஆதாரத் தொகுப்புகளையே இந்த கட்டுரையில் காண உள்ளோம் .
மநு மீதான சர்ச்சை தொடர்கையில் ஒருசாரார் அது வெள்ளைக்காரர்களால் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டது என்றும், மறுசாரார் அது புரிதல் இல்லா காரணத்தால் மக்கள் தவறாக காண்கிறார்கள் என்றும், அது இப்பொழுது யாராலும் கடைபிடிக்கப் படுவதில்லை என்றும் கூறி வருகின்றனர். ஆனால் இந்திய அரசின் கலாச்சாரத் துறையின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் “மநு சம்கித்த” என்ற தலைப்பில் இன்றும் அதை பொதுவெளியில் வைத்து உள்ளனர்.
மநு கூறும் பெண் உரிமை:
1. பெண்களை எப்பொழுதும் கட்டுப்பாட்டிலேயே வைக்க வேண்டும். இரவோ பகலோ 24 மணி நேரமும் அவர்கள் சொல்வதை செய்துகொண்டே இருக்குமாறு ஆண்கள் கட்டளை இட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று மநு கூறுகிறது.
2. பெண்களை தொடர்ந்து தந்தையோ, கணவரோ, மகனோ பாதுகாத்து கொண்டே இருக்கவேண்டும், பெண்கள் சுதந்திரத்திற்கு தகுதி அற்றவர்கள் என்று மநு கூறுகிறது.
3. ஒரு பெண் மது அருந்தினாலோ, மோசமான ஆட்களோடு பழகினாலோ, நேரம் இன்றி தூங்கினாலோ, பிறர் வீட்டில் தங்கினாலோ, கணவனை விட்டு நீங்கினாலோ அவர்களின் புனிதம் கேட்டு விடும் என்று மநு கூறுகிறது.
4. பெண்கள் ஒரு ஆணின் அழகு என்பதை காணாமல் மோகத்தின் காரணாமாக, எப்பொழுதும் ஒரு ஆணுடன் உடல்ரீதியான உறவு வைத்து கொள்வதிலேயே ஏக்கமாகவும் குறிக்கோளாகவும் இருப்பார்கள் என்று மநு கூறுகிறது.
5. ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை இல்லையென்றால் அவள் வேறு ஒரு ஆணுடனோ, அல்லது கணவனின் சகோதரனுடனோ உறவு வைத்துக்கொண்டு ஆண் பிள்ளை பெறலாம் என்று மநு கூறுகிறது.
6. ஒரு விதவை ஆண் குழந்தை பெறவேண்டும் என்ற நிலையில் அவளுடன் உறவு கொள்ள உள்ள ஆண், நடு இரவில் அமைதியாக உடல் முழுவது வெண்ணை/நெய் தடவிக் கொண்டு வர வேண்டும் என்று மநு கூறுகிறது. இந்த நிகழ்வு ஒரு ஆண் குழந்தை பெரும் வரையே நடக்க வேண்டும் மீண்டும் நிகழக்கூடாது என்றும் மநு கூறுகிறது.
7. 5 மற்றும் 6 ஆம் எண்ணில் கூறப்பட்ட விஷயங்கள் பிற சாதி பெண்களுக்கு மட்டுமே, பிராமணப் பெண்களுக்கு பொருந்தாது மீறினால் அவர்களுக்கு மறுஜென்மம் கிடையாது என்று மநு கூறுகிறது. மேலும் கைம்பெண்களின் மறுமணம் என்பதே சாஸ்திரத்தில் இல்லை என்றும் மநு கூறுகிறது.
8. ஒரு பெண் திருமணம் வயதை அடையம் முன்பே சுயசாதியில் அழகான ஆண் ஒருவனை திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று ம நுகூறுகிறது.
9. பிராமணப் பெண்களை தவிர்த்து பிற சாதி பெண்கள் திருமண நிகழ்வுகளில் மது அருந்தினால் அது தண்டனைக்கு உரியது என்று மநு கூறுகிறது.
10. கண் பார்வையற்றவராக, மாற்று திறனாளியாக, உடல் உறுப்பு ஏதேனும் இல்லாது இருப்பவராக அல்லது சமூகத்தால் முட்டாள் என்று கூறப்படுவருக்கு சொத்தில் எந்த பகுதியும் கொடுக்கக்கூடாது, மாறாக அவர்களுக்கு உதவ மட்டும் செய்யலாம் என்று மநு கூறுகிறது.
11. 30 வயது உடைய ஆண் 12 வயது உடைய பெண்ணையும், 24 வயது உடைய ஆண் 8 வயது உடைய பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று மநு கூறுகிறது.
12. ஷத்ரியர்கள் பிராமணர்களுக்கு எதிராக ஏதேனும் செய்தாய் அவர்களுக்கு எந்த தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று மநு கூறுகிறது
13. பிராமணர்கள் எந்த தவறை செய்தாலும் அவர்கள் உயர்வாகவே கருதப்பட வேண்டும் என்று மநு கூறுகிறது.
14. பிராமணர்கள் மரண தண்டனைக்கு நிகரான தவறையே செய்தாலும் அவர்களின் முடியை மட்டுமே எடுக்க வேண்டும், ஆனால் பிற சாதியினர் அத்தவறைச் செய்தால் மரண தண்டனை கொடுக்கலாம் என்று மநு கூறுகிறது.
15. ஒரு அரசன் பிராமணரைக் கொல்வதையோ, தண்டனை தருவதையோப் பற்றி நினைத்து பார்க்க கூடாது, அவர்கள் எவ்வளவு மோசமான செயலை செய்தாலும் அவர்களை ஊரை விட்டு ஒதுக்க வேண்டுமே தவிர வேறு ஏதும் செய்ய கூடாது என மநு கூறுகிறது.
Proof Link :
https://indianculture.gov.in/manu-samhita