உ.பியுடன் போட்டியில் தமிழகம்!? மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் மரணத்தில்…

இந்தியாவில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் இன்றளவும் தொடர்கிறது. இப்பணியில் ஈடுபடும் போது ஏற்படும் உயிரிழப்புகள் பற்றி பெரிதும் பேசப்படாமலும் இருந்து வருகிறது. இந்தியா போன்ற பெரும் மக்கள் தொகை நாட்டில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுபடுவோர்களை கணக்கெடுப்பு செய்யும் பணிகள்  நடைபெறுவதுண்டு.

Advertisement

2021 பிப்ரவரி மாதம் ராஜ்ய சபாவில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், ” கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் சாக்கடைகள் மற்றும் கழிவுத் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது 340 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், இந்த 340 மரணங்களில் 217 பேருக்கு முழு இழப்பீடும் ,47 பேருக்கு பகுதியளவு இழப்பீடும் வழங்கப்பட்டு உள்ளதாக ” தரவுகளை பகிர்ந்து இருந்தார்.

மேலும் அமைச்சர் வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி 66,692 பேர் மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 37,379 பேரும், மகாராஷ்டிராவில் 7,378 பேரும், உத்தரகாண்டில் 6,170 பேரும், அசாம் மாநிலத்தில் 4,295 பேரும் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக தி ஹிந்துவில் வெளியாகி இருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும் போது 340 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் உத்தரப் பிரதேச மாநிலம் 52 இறப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக, 43 இறப்புகளுடன் தமிழ்நாடு உள்ளதாக தரவுகளில் கூறப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் 75 சதவீத மரணங்கள் உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நிகழ்ந்து உள்ளது.

நாடு முழுவதிலும் மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களை அடையாளம் காண கணக்கெடுப்புகள் நடைபெறுவதுண்டு. இவற்றில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதியில் தொழிலாளர்கள் தனித்தனியாக கணக்கெடுக்கச் செய்கிறார்கள். இப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் தாங்களாகவே முன் வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும் ஏன் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சஃபாய் கர்மாசாரிஸ் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம்(NSKFDC) , ” மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கடன் வழங்கும் “ஸ்வச்சதா உதாமி யோஜனா” எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அபாயகரமான பணியில் ஈடுபடுவர்களுக்கு 5 லட்சம் வரையிலான இயந்திரமாக்கப்பட்ட உபகரணங்களுக்கு 50% மானியமும் வழங்குவதாக ” மத்திய அமைச்சகம் பதில் அளித்து உள்ளது.

Advertisement

இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் மனித கழிவுகளை அகற்றும் பணியில் தொழிலாளர்களின் எண்ணிக்கை விடுப்பட்டும், கணக்கெடுப்பில் பதிவாகாமல் இருக்க வாய்ப்புகள் அதிகம். மனித கழிவுகளை அகற்றும் பணிக்கு மனிதர்களுக்கு பதிலாக இயந்திரங்களை பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் இங்கு இருக்கிறது.

Links :

over-66000-manual-scavengers-identified-across-country

43 manual scavengers died in TN in last 5 years: Min

Ministry of Social Justice and Empowerment Survey of Manual Scavengers in Statutory Towns

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button