மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் இறப்புகள் பதிவாகவில்லை – அமைச்சரின் பதிலால் அதிர்ச்சி !

இந்தியாவில் மனிதக் கழிவுகளையே மனிதர்களை கொண்டு அகற்றும் நிலை குறித்தும், அந்த பணியின் போது ஏற்படும் உயிரிழப்புகள் பற்றியும் பெரிதும் பேசப்படாமலேயே இருந்து வருகிறது. அந்நிலை ஒழிக்கப்பட வேண்டும் என பல்வேறு குரல்கள் எழுப்பப்படுவதுண்டு.

Advertisement

இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறித்து காங்கிரஸ் எம்.பி மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் எல்.ஹனுமந்தய்யா ஆகியோர் ஜூலை 27-ம் தேதி ராஜ்யசபாவில் எழுப்பிய கேள்விக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, ” மனிதக் கழிவுகளை அகற்றுவதன் காரணமாக இறப்புகள் நிகழ்ந்ததாக பதிவாகவில்லை ” என பதில் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் இறந்ததாக பதிவாகவில்லை எனக் கூறுவது முற்றிலும் அர்த்தமற்ற பதிலே. அதற்கு காரணம், கடந்த முறை பிப்ரவரியில் ராஜ்யசபாவில் இதே சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, கடந்த 5 ஆண்டுகளில் 340 தொழிலாளர்ள் இப்பணியில் ஈடுபடும் போது இறந்ததாக எண்ணிக்கையை வெளியிட்டு இருந்தார்.

பிப்ரவரியில் வெளியிட்ட தகவலின் படி, ” கடந்த 5 ஆண்டுகளில் மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும் போது 340 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் உத்தரப் பிரதேச மாநிலம் 52 இறப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக, 43 இறப்புகளுடன் தமிழ்நாடு உள்ளதாக தரவுகளில் கூறப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் 75 சதவீத மரணங்கள் உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நிகழ்ந்து உள்ளது ” என நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
2021 ஜூலை 28-ம் தேதி அமைச்சர் வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவில் 66,692 பேர் மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 37,379 பேரும், மகாராஷ்டிராவில் 7,378 பேரும், உத்தரகாண்டில் 6,170 பேரும், அசாம் மாநிலத்தில் 4,295 பேரும் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
.
இது தொடர்பாக, ஆர்வலர் பெஸ்வாடா வில்சன் அமைச்சரின் பதிலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இந்த காலக்கட்டத்தில் மனிதக் கழிவுகளை அகற்றுகையில் குறைந்தது 472 பேர் உயிரிழந்து இருப்பார்கள், இந்த பதிலுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறி இருக்கிறார்.
.
கடந்த முறை மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களின் இறப்பு எண்ணிக்கையை வெளியிட்ட அமைச்சர் அத்வாலே இம்முறை அவ்வாறான இறப்புகள் பதிவாகவில்லை எனக் கூறியது கண்டனத்தையும் பெற்றுள்ளது.
Link : 

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Advertisement

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button