மாரிதாஸ் பரப்பிய வதந்திகள், பொய்களின் தொகுப்பு !

யூடியூபர் மாரிதாஸ் காஷ்மீருடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டும், முப்படை தளபதி மற்றும் ராணுவத்தினரின் மரணம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டு பின்னர் நீக்கினார். இந்த விவகாரத்தில் மாரிதாசை போலீசார் கைது செய்தனர். எனினும், இந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றம் வழக்கை ரத்து செய்தது.
அதேநேரத்தில், நியூஸ் 18 விவகாரத்தில் மோசடி மெயில் தொடர்பாக மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். கொரோனா பரவலுக்கு இஸ்லாமியர்களே காரணம் என மாரிதாஸ் அவதூறு கருத்துக்களைப் பரப்பியதாக கடந்த ஆண்டில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட மற்றொரு புகார் தொடர்பாக கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும், தூத்துக்குடியைச் சேர்ந்த திமுக மாணவர் அணி நிர்வாகி உமாரி சங்கர் அளித்த புகாரும் மாரிதாஸ் மீது பதியப்பட்டுள்ளது.
நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என மாரிதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதுதொடர்பாக, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்ற மனுவின் மீதான விசாரணையை டிசம்பர் 20-ம் தேதிக்கு நீதிபதி சுவாமிநாதன் ஒத்திவைத்துள்ளார்.
மாரிதாஸ் தனது யூடியூப் சேனல் மூலம் எண்ணற்ற அவதூறுகள், வதந்திகள் மற்றும் பொய்களை பரப்பி இருக்கிறார். மாரிதாஸ் பரப்பிய வதந்திகள் மற்றும் பொய்களின் தொகுப்பே இக்கட்டுரை.
நியூஸ் 18 மோசடி மெயில் :
தடுப்பூசி செலுத்துவதில் பாகுபாடு ?:
2021 ஜூன் மாதம் தமிழக அரசு தடுப்பூசி செல்லுவதில் பாகுபாடு காட்டுவதாகவும், சென்னைக்கு அதிகமாகவும் பிற மாவட்டங்களுக்கு குறைவாகவும் தடுப்பூசி வழங்கப்பட்டு இருப்பதாக மாரிதாஸ் வீடியோ வெளியிட்டார். மக்கள் தொகை, பாதிப்பு அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது என ஆதாரங்களுடன் வீடியோ வெளியிட்டு இருந்தோம்.
மாரிதாஸின் துணை பக்கங்கள் :
மாரிதாஸ் எம், மாரிதாஸ் , மாரிதாஸ் காணொளிகள் எனும் பெயர்களில் சில முகநூல் பக்கங்கள் மாரிதாஸின் கருத்துக்கள், பதிவுகள், வீடியோக்கள், கட்சி மற்றும் மதத்திற்கு எதிராக அவதூறு பதிவுகள். வதந்திகளை பதிவிடுவதற்காகவே செயல்பட்டு வருகிறது.
- வயதான விவசாயி தாக்கப்படவில்லையா ?| உண்மைத்தன்மை எனப் பரப்பப்படும் பொய் பிரச்சாரம்!
- விவசாயிகள் போராட்டத்தில் வைரலாகும் கார் மதிப்பு ரூ.2 கோடியா ?
- யூடர்ன் கறுப்பர் கூட்டத்திற்கு ஆதரவு கேட்டதாக வதந்தியை பரப்பும் மாரிதாஸின் துணை பக்கங்கள்.
- முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் நியமனத்தை தவறாக சித்தரிக்கும் மாரிதாஸ் ரசிக பக்கம் !
- எம்.பி திருமாவளவன் காலிஸ்தான் ஜிந்தாபாத் என முழங்கியதாக வதந்தி பரப்பும் பாஜகவினர் !
மாரிதாஸ் பெயரில் இயங்கும் சில முகநூல் பக்கங்கள் வதந்திகள் பலவற்றை பரப்ப ஐ.டி விங் போன்று செயல்பட்டு வருகிறது. தன்னுடைய அதிகாரப்பூர்வ பக்கங்களை தவிர்த்து மற்ற பக்கங்களில் வெளியாகும் கருத்திற்கு தாம் பொறுப்பில்லை என மாரிதாஸ் பதிவிட்டு இருந்தார். ஆனால், இந்த பக்கங்களுக்கு எதிராக அவர் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. தற்போதும் அவை மாரிதாஸிற்கு ஆதரவாக இயங்கி வருகின்றன.
மாரிதாஸ் தன்னுடைய வீடியோக்கள் பலவற்றில் பொய்களையும், உண்மைக்கு புறம்பான தகவல்களை திட்டமிட்டு பரப்பி இருக்கிறார். தமிழகத்தில் வதந்தி, பொய்களை அடிப்படையாகக் கொண்டு வீடியோக்களை வெளியிட்டு மக்களிடையே மத பிளவை உண்டாக்க மாரிதாஸ் முயற்சித்து வருவது வெளிக்கொணரப்பட்டு இருக்கிறது.