This article is from Nov 20, 2019

“மீரா மிதுன்” தமிழகத்தின் ஊழல் தடுப்பு அதிகாரியாக நியமனமா ?

பிக் பாஸ் ” நிகழ்ச்சியின் மூலம் வெளி உலகிற்கு தெரிய வந்த மீரா மிதுன் சர்ச்சைக்கு பெயர் போனவர். அவர் கூறும் குற்றச்சாட்டுகள், பதிவுகள் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகி, அவருக்கு எதிராகவே திரும்பி விடுகிறது.

இந்நிலையில், நவம்பர் 14-ம் தேதி மீரா மிதுன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் , ” தமிழகத்தின் சென்னைக்கான ஊழல் தடுப்பு பிரிவின் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், தன்னிடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது, உங்களை கண்காணிக்கிறேன். இனி ஓடவும் முடியாது , ஒழியவும் முடியாது ” என நியமிக்கப்பட்ட கடிதம் மற்றும் ஐ.டி கார்டு என இரு புகைப்படத்தை அதற்கு ஆதாரமாக பதிவிட்டு இருந்தார்.


Twitter link | archived link

மீரா மீதும் தனது சமூக வலைதள பக்கங்களில் இப்படி பகிர்ந்த உடனே , இவர் ஊழல் தடுப்பு இயக்குநரா மற்றும் இதெல்லாம் நம்ப முடியவில்லை என்றும் பலர் கமெண்ட் செய்து வந்தனர். ஏனெனில், மீரான் மிதுன் பதிவிட்ட ஆதாரங்களில் Government of india என இடம்பெற்றதால் , மத்திய அரசின் பணி எப்படி கிடைத்தது , அதற்கு வாய்ப்பில்லை என்றனர். ஆனால், சிலரோ இது மத்திய மற்றும் மாநில அரசின் ஊழல் தடுப்பு பிரிவுகளின் லோகோ வேறு, மீரா மிதுன் வெளியிட்ட ஆதாரத்தில் இருக்கும் லோகோ வேறு எனக் குறிப்பிட்டு இருந்தனர்.

மீரா மிதுன் வெளியிட்ட ” Anti corruption Communion ” பற்றிய உண்மை என்ன, ஆராய்ந்து கூறுமாறு நம்மிடமும் கேட்கப்பட்டது. எனினும், ஆதாரங்கள் அடிப்படையில் கூற வேண்டும் என்பதால் தற்பொழுது அதைப் பற்றி விரிவாக எழுதுகிறோம்.


Twitter link | archived link  

மீரா மிதுனின் ட்விட்டர் பதிவில் கமெண்ட் செய்த ஒருவர் ” கடிதத்தில் Volunteer Basis ” எனக் குறிப்பிட்டு இருக்கிறது பாருங்கள் எனக் குறிப்பிட்டு இருந்தார். அந்த கடிதத்தில் இரண்டாவது வரியில் அப்படிதான் குறிப்பிடப்பட்டு இருக்கிறது .

Twitter link | archived link 

தமிழகத்தின் ஊழல் தடுப்பு பிரிவின் இயக்குநராக நியமிக்கப்பட்டு இருப்பதாக கூறும் “Anti Corruption Commission ” மத்திய அரசோ அல்லது மாநில அரசு உடையதோ அல்ல. அது ஒரு ” தன்னார்வ விசாரணை ஏஜென்சி ” . NGO அமைப்பான Anti Corruption Commission உடைய ட்விட்டர் பக்கத்தில் அவ்வாறே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இரண்டிலும் ஒரே லோகோ இருப்பதை பார்க்கலாம்.

அரசு சாரா தன்னார்வ நிறுவனத்தின் பதிவு எண் 1372 / 2018 கொண்டு தன்னார்வ அமைப்புகளின் விவரங்களில் தேடிய பொழுது ” Anti Corruption Commission ” என்ற NGO அமைப்பு மகாராஷ்டிராவில் கடந்த 2018-ல் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் நமக்கு கிடைத்தன .

இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஊழல் தடுப்புத்துறை ” நடுவண் கண்காணிப்பு ஆணையம்  மற்றும் தமிழகத்தின் ஊழல் தடுப்புத்துறை ” ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் ”  என அழைக்கப்படுகின்றன .

2018-ல் பதிவு செய்யப்பட்ட Anti Corruption Commission என்ற என்.ஜி.ஓ அமைப்பால் நியமிக்கப்பட்டதாக கூறிக் கொள்ளும் மீரா மிதுன் , அதனை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் , உங்களை கண்காணிப்பதாகவும் பெரிதாக வெளியிட்டு உள்ளார் என்பதே உண்மை.

Please complete the required fields.




Back to top button
loader