பெண்களின் அனுமதியின்றி பரவும் புகைப்படம், வீடியோவை நீக்க மெட்டா அறிமுகம் செய்த புதிய தளம் !

பெண்களின் அந்தரங்கம் மற்றும் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில், சமூக வலைதளங்களில் பழிவாங்கும் எண்ணத்தில் பரப்பி விடும் செயல்களால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இது இன்றளவில் பெரும் பிரச்சனையாகி வருகிறது.

இந்நிலையில், இதை சமாளிக்கும் வகையில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உடைய தாய் நிறுவனமான மெட்டா இந்தியாவில் StopNCII.org எனும் புதிய தளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டை தளமாகக் கொண்ட ” ரிவெஞ்ச் ஃபோர்ன் ஹெல்ப்லைன் ” உடன் இணைந்து செயல்படுகிறது.

பெண்கள் தங்களின் அந்தரங்கம், தவறாக சித்தரிக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் பகிரப்பட்டு விட்டன அல்லது பகிரப்படலாம் என கவலைப்படுபவர்கள் StopNCII.org தளத்தில் புகார் சமர்ப்பிக்கலாம்.

யாரேனும் தங்கள் அந்தரங்கப் படங்களை வெளியிட்டார்களா அல்லது சமூக வலைதளங்களில் பதிவிட்டார்கள் என நினைத்தால், அந்தப் புகைப்படங்கள் பகிர்வதை முன்கூட்டியே கண்டறிய StopNCII.org மூலம் ஒரு வழக்கை உருவாக்கலாம்.

  1. StopNCII.org தளத்தில் உங்கள் செல்போனில் இருந்து சம்பந்தப்பட்ட அந்தரங்க படம்/வீடியோவை தேர்ந்தெடுக்கவும்.
  2. StopNCII.org, உங்கள் செல்போனில் உள்ள படம்/வீடியோவிற்காக ஹாஷ் என அழைக்கப்படும் டிஜிட்டல் கைரேகையை உருவாக்கும். உங்கள் செல்போனில் இருந்து ஹாஷ் அனுப்பப்படும், உங்கள் படமோ/வீடியோவோ அல்ல, அவை உங்கள் செல்போனிலேயே இருக்கும்.
  3. உங்கள் வழக்கு வெற்றிகரமாக உருவாக்கப்பட்டால், உங்கள் புகாரின் நிலையைச் சரிபார்க்க வழக்கு எண் அளிக்கப்படும்.
  4. இதில் பங்கேற்கும் நிறுவனங்கள் ஹாஷ் உடன் பொருத்தங்களைத் தேடும் மற்றும் அந்த படங்கள் துஷ்பிரயோகக் கொள்கையை மீறும் பட்சத்தில் அவற்றை அகற்றும்.
  5. StopNCII.org-ல் பங்கேற்கும் இணையதளங்களில் டிஜிட்டல் கைரேகை பொருத்தங்களை அவ்வப்போது தேடும்.
  6. எப்போது வேண்டுமானாலும், உங்கள் வழக்கின் நிலையை சரிபார்க்க உங்கள் வழக்கு எண்ணைப் பயன்படுத்தலாம் அல்லது அதை திரும்பவும் பெறலாம்.

அனைத்து தரப்பு பெண்களும் அணுகக்கூடிய வகையில் ” பெண்களின் பாதுகாப்பு மையம்” என்பதை 11 இந்திய மொழிகளில் அறிமுகப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது StopNCII.org ஆனது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களுக்கு மட்டுமே. இது சில தளங்களோடு முடிவடையக்கூடியது அல்ல, பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் மற்ற தொழில்நுட்ப தளங்களும் குழுவில் வந்து இணைவார்கள் என மெட்டா நம்புகிறது.

Links : 

StopNCII.org

How Facebook parent Meta is looking to stop revenge porn with its new tool

Please complete the required fields.
Back to top button
loader