This article is from Oct 04, 2019

Mi-17 ராணுவ ஹெலிகாப்டரை தாக்கியது இந்திய ஏவுகணையே – IAF தலைவர்.

2019 பிப்ரவரி மாதம் விங் கம்மண்டேர் சித்தார்த் வாஷிஸ்த்,  நினத் மன்தவ்கனே , பங்கஜ் குமார், விக்ராந்த் செஹ்ரவாட் உள்பட 6 வீரர்கள் பயணித்த இந்திய ராணுவ ஹெலிகாப்டர் Mi-17 புட்கம் (Budgam) பகுதியில் விபத்துக்குள்ளாகியதில் அனைவரும் இறந்தனர்.

இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக பிப்ரவரி 27, 2019-ல் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டு இருந்தது. மேலும், விபத்துக்கு காரணம் பாகிஸ்தான் ராணுவம் தான் என குற்றச்சாட்டுகளும் எழுந்தன. ஆனால், இதனை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மறுத்து வீடியோ வெளியிட்டு இருந்தனர்.

விரிவாக படிக்க : சித்தார்த் வாஷிஸ்த் உள்பட 6 பேர் மரணம் பற்றி யாரும் பேசவில்லையே ஏன் ?

புட்கம் பகுதியில் Mi-17 ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் தற்பொழுது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்திய ராணுவத்தின் டிஃபென்ஸ் ஏவுகணை தாக்கியே ராணுவ ஹெலிகாப்டர் Mi-17 விபத்துக்குள்ளாக்கியதாக இந்திய விமானப்படைத் தலைவர் ராகேஷ் குமார் பதூரியா தகவல் தெரிவித்து இருக்கிறார்.

இந்திய விமானப்படை தலைவர் மார்ஷல் பதூரியா ஊடகத்திற்கு அளித்த தகவலில், ” நீதிமன்ற விசாரணைகள் முடிவடைந்தன. இது நமது தவறே, நம்முடைய ஏவுகணையே சொந்த நாட்டு ஹெலிகாப்டரை தாக்கி இருக்கிறது. இரு அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம். நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம், இது எங்களின் மிகப்பெரிய தவறு மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாது என உறுதி அளிக்கிறோம் ” எனக் கூறி இருக்கிறார்.

இந்த விபத்தில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த 6 பேர் இறந்தனர். நம்முடைய ஸ்பைடர் ஏர் டிஃபென்ஸ் மிஸ்சில் (SPYDER) தாக்கியே விபத்து நிகழ்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.

பிப்ரவரி 26-ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது விமானப்படை தாக்குதலினால் அதிக அளவில் பாதுகாப்பு எச்சரிக்கை விடுவிக்கப்பட்ட நேரத்தில் தவறுதலாக இந்திய ஏவுகணை Mi-17 ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியுள்ளது. புட்கம் எனும் பகுதியில் அந்த ராணுவ விமானம் வெடித்து 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Link : 

Budgam Mi-17 crash: IAF chief admits big mistake, says our own missile hit chopper

https://web.archive.org/save/https://twitter.com/ANI/status/1180015929205248002?=

Please complete the required fields.




Back to top button
loader