சிறுத்தை சென்ற பாதையில் நடந்து செல்லும் புலம்பெயர்ந்த குடும்பம்| NDTV வெளியிட்ட வீடியோ.

கொரோனா வைரஸ் ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இன்றும் நடந்து கொண்டே தான் இருக்கிறார்கள். அவர்களின் அவலநிலை ஊடகங்களில், சமூக வலைதளங்களில் வீடியோக்களாக, புகைப்படங்களாக வைரலாகி வருகிறது.

Twitter link | archive link 

மே 14-ம் தேதி NDTV செய்தி நிறுவனம் வெளியிட்ட வீடியோவில், சிறுத்தை நடந்து செல்லும் பாதையில் சிறுது நேரத்திற்கு பிறகு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பம் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சிறுத்தை சென்ற 15 நிமிடத்தில் கையில் பிளாஷ்லைட் உடன் 5 பேர் கொண்ட குடும்பம் உடைமைகளை சுமந்து கொண்டு செல்கிறார்கள். அவர்களுக்கு எந்தவித ஆபத்தும் நேரவில்லை.

Advertisement

NDTV தகவலில், ” இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குடும்பம் உத்தரகாண்ட்டில் உள்ள தங்களின் கிராமத்திற்கு திரும்பி செல்கிறார்கள். இரவிலும் அனைவரும் பிளாஷ்லைட் உதவியின் மூலம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறார்கள். இந்த பகுதி முழுவதும் ஜிம் கோர்பேட் தேசிய பூங்கா. இங்கு உள்ள ஹோம்ஸ்டேவிற்கு வெளியே பொருத்தப்பட்ட ட்ரைல் கேமராவில் அக்காட்சி பதிவாகி உள்ளது.

சூரியன் மறைந்த பிறகு மனிதர்கள் யாரும் தன்ஹா பகுதியை சுற்றி எங்கும் செல்வதில்லை. இரவு நேரத்தில் இந்த பாதையை மக்கள் வழக்கமாக பயன்படுத்துவதில்லை, இவர்கள் நீண்ட தொலைவிலான பயணத்திற்கு பிறகு வீட்டிற்கு செல்ல ஆசைப்பட்டு உள்ளனர் என தன்ஹா ஹோம்ஸ்டே உரிமையாளர் சுனந்தோ சென் தெரிவித்ததாக ” வெளியாகி இருக்கிறது.

தங்களின் வீட்டிற்கு நடந்தே செல்லும் புலம்பெயர்ந்த குடும்பம் இரவில் சிறுத்தைகள் செல்லும் பாதையை கடந்து செல்வது எத்தகைய ஆபத்தான சூழ்நிலையில் புலம்பெயர்ந்தவர்கள் பயணித்து வருகிறார்கள் என்பதை காட்டுவதாக சமூக ஊடகங்களில் இவ்வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

Links : 

Migrant Family, Walking Home At Night, Nearly Crosses Paths With Leopard

When the leopard passed in the dark of night just in front of the migrant laborers

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close