ரயிலில் இருந்து உணவு பொட்டலங்களை தூக்கி எறிந்த தொழிலாளர்கள்| காரணம் ?

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவால் பிற மாநிலங்களில் இருந்து வந்து பணிபுரியும் தொழிலாளர்கள் வேலையின்றி, உணவு இன்றி பாதிக்கப்படுவதால் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்தன.
இந்நிலையில், கேரளாவில் இருந்து சொந்த ஊர்களுக்கு ரயிலில் சென்ற தொழிலாளர்களுக்கு அம்மாநில அரசு வழங்கிய உணவு சரியில்லை எனக் கூறி ரயில் நிலையத்தில் தூக்கி வீசுவதாக கீழ்காணும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது. ஆகையால், இந்த சம்பவம் எங்கு நிகழ்ந்தது என ஆராய்ந்து பார்த்தோம் .
மே 3-ம் தேதி NDTV செய்தியில், ” கேரளாவில் இருந்து சுமார் 7000 தொழிலாளர்கள் பீகார், ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் பயணத்திற்கு 3 மாஸ்க், சோப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அவர்களுக்கு 2 பாக்கெட் உணவு பொட்டலங்கள் மற்றும் அடுத்த நாளுக்கு ஐஆர்சிடிசி (ரயில்வே கேட்டரிங்) மூலம் மாநில அரசு வழங்கும் என திருவனந்தபுரம் ஆட்சியர் கோபாலகிருஷ்ணன் கூறியதாக ” வெளியாகி இருக்கிறது.
#VIDEO: Shocking visuals from #Asansol. This is a train with migrant workers that left from Kerala and was headed for Danapur, #Bihar. Was passing by Asansol where they were allegedly given stale food. This is the migrants throwing the food on the platform. @TheQuint #IndiaNews pic.twitter.com/xxYsQBMu36
— Ishadrita Lahiri (@ishadrita) May 6, 2020
மே 6-ம் தேதி Ishadrita என்பவரின் ட்விட்டர் பக்கத்தில் வைரலான வீடியோ உடன், அசன்சோல் பகுதியில் இருந்து அதிர்ச்சியான காட்சி. கேரளாவில் இருந்து ரயிலில் வரும் தொழிலாளர்கள் பீகாரின் தனபூர் செல்கின்றனர். அசன்சோல் பகுதியை கடந்து செல்கையில் பழைய உணவை அளித்ததாக குற்றம்சாட்டி உள்ளனர். அதனால் தொழிலாளர்கள் நடைபாதையில் உணவை தூக்கி வீசியுள்ளனர் ” எனக் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் டைம்ஸ் இந்தியா செய்தியில், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அசன்சோல் பகுதியை கடக்கும் பொழுது ரயிலில் இருந்து தொழிலாளர்கள் உணவு பாக்கெட்கள், தண்ணீர் பாட்டில்களை நடைபாதையில் வீசி போராட்டம் நடத்தி உள்ளதாக வெளியாகி இருக்கிறது.
மே 3-ம் தேதி கேரளாவின் எர்ணாகுளத்தில் இருந்து தொழிலாளர்கள் பீகாருக்கு செல்லும் ரயிலில் புறப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவை கேரளா அரசு வழங்கி இருக்கிறது. மே 4-ம் தேதிக்கான உணவை ரயில்வே கேட்டரிங் மூலம் வழங்க கேரளா அரசு ஏற்பாடு செய்து உள்ளது.
” 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சமைத்த உணவு மற்றும் தண்ணீர் வழங்க அசன்சோலில் ரயில் நிறுத்தப்பட்டதாகவும், அவர்களில் பலர் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவு பழையதாகி விட்டதாக கூறி அதை ரயில் நிலையத்தில் கொட்டி உள்ளனர் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உணவில் துர்நாற்றம் வீசுவதாக புகார் தெரிவித்ததாக ” தி குயின்ட் தளத்தில் வெளியாகி இருக்கிறது.
கேரளாவில் இருந்து பீகாருக்கு சென்ற ரயிலில் தொழிலாளர்கள் ஐஆர்சிடிசி மூலம் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவு பழையதாகியதாக மற்றும் சரியில்லை எனக் கூறி நடைபாதையில் வீசிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Links :
Kerala Gives Food To Migrant Workers, They Pay For Train Ride Home
Migrant Labourers Dump ‘Bad Food’ at Train Station in Bengal
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.