புலம்பெயர்ந்த 15 தொழிலாளர்கள் ரயிலில் சிக்கி மரணம்| உறங்கியவர்களுக்கு நேர்ந்த கதி.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பிற மாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் அவலம் நிகழ்ந்ததை கண்டோம். சில நாட்களுக்கு முன்பாக தொழிலார்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு ரயில்களின் மூலம் அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில், அவுரங்காபாத் பகுதியில் ரயில் பாதையில் உறங்கிக் கொண்டிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சரக்கு ரயிலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜால்னா பகுதியில் உள்ள பெரிய ஸ்டீல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் 20 பேர் 7-ம் தேதி மாலை அங்கிருந்து பூஷாவால் செல்ல புறப்பட்டு உள்ளனர்.  முதலில் சாலை மார்க்கமாக நடந்து வந்தவர்கள் பின்னர் ரயில் பாதையில் நடந்து சென்றுள்ளனர். 36 கி.மீ நடந்து வந்த பிறகு அவுரங்காபாத் நோக்கிய ரயில் பாதையில் உறங்கி உள்ளனர்.

ரயில் பாதையில் உறங்கிய 14 பேர் அதிகாலை 5.30 மணியளவில் வந்த சரக்கு ரயிலில் சிக்கி சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை படுகாயமடைந்த இரண்டு பேரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இருப்பினும், அதில் ஒருவர் இறந்துள்ளார்.

Advertisement

மகாராஷ்டிரா மாநில ரயில் விபத்திற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்து ட்வீட் செய்து உள்ளார்.

கடந்த சில நாட்களாக நாட்டில் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் மரணம் ஒருபுறம் இருக்க ஆந்திராவில் ரசாயன வாயு வெளியேறி மக்கள் இறந்தது, ரயில் ஏறி தொழிலாளர்கள் இறப்பு என மறுபுறம் அதிர்ச்சியை ஏற்படுத்தி செல்கிறது.

Links : 

15 migrant workers run over by goods train in Maharashtra

Maharashtra: Train runs over migrant workers in Aurangabad

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
PHP Code Snippets Powered By : XYZScripts.com
Close
Close