Articles

மத்திய அமைச்சரான பிரதாப் சாரங்கி மீதான குற்றச்சாட்டுகள் உண்மையா ?

மத்தியில் இரண்டாம் முறையாக ஆட்சியில் அமரும் பிஜேபி கட்சியின் புதிய அமைச்சரவையில் ஒரிசா மாநிலத்தின் பாலசோர் தொகுதியில் இருந்து எம்பியான பிரதாப் சந்திர சாரங்கி அங்கம் வகிக்கிறார். சமூக வலைத்தளங்களில் மட்டுமின்றி ஊடகங்களிலும் பிரதாப் சாரங்கி பெரிதாய் பேசப்படுகிறார். பிரதாப் சாரங்கி யார், அவரின் மீதான வழக்குகள், சமூக வலைத்தளங்களில் அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் என்ன என்பதை இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.

Advertisement

யார் இந்த பிரதாப் சாரங்கி :

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 64 வயதான பிரதாப் சந்திர சாரங்கி பாலசோர் தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1999 ஆம் ஆண்டில் தீவிர வலதுச்சாரி அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பிற்கு பிரதாப் சந்திர சாரங்கி தலைவராக பதவி வகித்தார். 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக சாரங்கி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், 1975 ஆம் ஆண்டில் எஃப் கல்லூரில் பி.ஏ பட்டம் பெற்றதாகவும், அவரின் சொத்து மதிப்பு 13,46,236 ரூபாய் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

சாரங்கி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தன் மீது பல பிரிவுகளில் குற்ற 7 வழக்குகள் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார். அவற்றில், குற்றவியல் மிரட்டல் தொடர்பாக (IPC பிரிவு 506) 4 குற்றச்சாட்டுகள், மதம், இனம், மொழி, இடம் உள்ளிட்ட இருவேறு பிரிவினருக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் செயல்பாடுகள் தொடர்பாக (IPC பிரிவு 153-A) 2 குற்றச்சாட்டுகள், பொது ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட நிலத்தில் தீ அல்லது வெடிக்கும் பொருள் மூலம் தீங்கிழைத்தல் தொடர்பாக ( IPC பிரிவு 435) ஒரு குற்றச்சாட்டும், வெறுப்பூட்டும் செயல்கள் மற்றும் கோஷங்கள் தொடர்பாக (IPC பிரிவு 294) 3 குற்றச்சாட்டுகள், தானாகவே காயப்படுத்திக் கொள்ளுதல் தொடர்பாக (IPC பிரிவு 323) 3 குற்றச்சாட்டுகள்.

மேலும், வன்முறை தண்டனை தொடர்பான (IPC பிரிவு-147) 2 குற்றச்சாட்டுகளும், சட்டசபையில் சட்டவிரோத உறுப்பினராக இருத்தல் தொடர்பாக (IPC பிரிவு-143) 1 குற்றச்சாட்டு, அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்காமை தொடர்பாக (IPC பிரிவு-188) ஒரு குற்றச்சாட்டும், பொது சொத்திற்கு சேதம் விளைவித்து சட்டவிரோதமான அனைத்து சட்டமன்ற உறுப்பினருக்கும் மீதான குற்றச்சாட்டு (IPC Section-149) உள்ளிட்ட பல பிரிவிகளில் வழக்குகள் உள்ளன.

வன்முறை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபரை ஏழ்மையான மனிதர் என்பதற்காக பெரிதாய் சித்தரித்து வருகின்றனர்.

கிரஹாம் ஸ்டைன் :

1892-ம் ஆண்டில் baripada-வில் Mayurbhanj Leprosy Home அமைக்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரிசா வந்த ஸ்டைன் அங்குள்ள தொழு நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவைகளை செய்துள்ளார்.

1999-ல் ஜனவரி 2-ம் தேதி கிரஹாம் ஸ்டைன் மற்றும் அவரின் இளைய மகன்களான பிலிப்ஸ், டிமோதி இருவரையும் ஒரிசாவின் மனோகர்பூர் பகுதியில் வேனில் வைத்து ஹிந்து கும்பல் ஒன்று எரித்துக் கொலை செய்தனர். கிரஹாம் ஸ்டைன் பழங்குடி மக்களை மதம் மாற்றம் செய்வதாக எண்ணி கொலை செய்யப்பட்டார். அது மட்டுமின்றி அப்பகுதியில் இருந்த கிறிஸ்தவ தேவாலயத்தை அக்கும்பல் தீக்கிரையாக்கினர்.

ஆனால், 1999-ல் ஜூனில் வெளியான wadhwa Commission இல் ” ஜங்கிள் கேம்ப் ” எனும் கிறிஸ்தவ கூட்டத்தில் ஒன்றில் கூட ஸ்டைன் பங்கேற்கவில்லை என தெரிவித்து இருந்தாக The Telegraph-ல் வெளியிடப்பட்டுள்ளது. மதம் மாற கட்டாயப்படுத்தி வந்ததாக தவறாக நினைத்து ஸ்டைன் மற்றும் அவரது இரு மகன்களையும் வன்முறை கும்பல் எரித்துக் கொன்றுள்ளனர்.

ஸ்டைன் கொலை வழக்கில் பஜ்ரங் தள் :

கலவரத்தை நிகழ்த்தி ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டைன் மற்றும் அவரது இரு மகன்களை கொன்ற கொலை வழக்கின் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு சார்ஜ்சீட் பதிவு செய்து கைது செய்யப்பட்ட 18 பேர் பஜ்ரங் தள் அமைப்பினை சேர்ந்தவர்களாக என விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

2007-ல் ஜனவரியில் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில், ” ஸ்டைன் கொலை வழக்கில் திருப்பு முனையாக சார்ஜ்சீட் பதிவு செய்யப்பட்ட 18 பேரில் ஒருவர் கூட பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர்கள் இல்லை என நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை அதிகாரி தெரிவித்ததாக ” வெளியிட்டு இருந்தனர்.

இதற்கு முன்னால், கிரஹாம் ஸ்டைன் மற்றும் அவரின் இரு மகன்கள் கொலை சம்பவத்திற்கு பஜ்ரங் தள் அமைப்பு காரணம் என குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால், அந்த அமைப்பின் தலைவராக இருந்த பிரதாப் சாரங்கி அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார். மேலும், கொலை சம்பவத்திற்கு கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.

கொலை சம்பவத்தில் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டதாக ஆதாரங்கள் இல்லை வழக்கின் விசாரணையில் தெரிவித்து விட்டனர். தகுந்த ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில் வழக்கில் இருந்து பஜ்ரங் தள் விடுவிக்கப்பட்டது.

குற்றவாளி யார் ?

விசாரணைக்கு பிறகு தாரா சிங் என்பவர் முக்கிய குற்றவாளி என சிபிஐ தெரிவித்தது. ஏற்கனவே, முஸ்லீம் மக்களுக்கு எதிரான பல்வேறு குற்றச் சம்பவங்களுக்கு தாரா சிங் காவல்துறையால் தேடப்பட்ட நபர். இவரைத் தவிர்த்து மொத்தம் 11 பேர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. தாரா சிங் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல என அந்த அமைப்பு தெரிவித்து இருந்தது.

சம்பவம் நடந்து நீண்ட கால வழக்கிற்கு பிறகு 2003-ல் வழக்கின் குற்றவாளியாக தாரா சிங் அறிவிக்கப்பட்டார். எனினும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தாரா சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக கூறி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரை போதுமான சாட்சியம் இல்லை எனக் கூறி விடுதலை செய்தது ஒரிசா உயர் நீதிமன்றம்.

பிரதாப் சாரங்கி :

மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற பிரதாப் சாரங்கி குறித்து சமூக வலைத்தளங்களில் எளிமையான மனிதர் என பாராட்டிக் கொண்டாட தொடங்கிய பிறகு, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டைன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி பிரதாப் சாரங்கி என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.

பதவியேற்ற பிறகு இப்படியொரு குற்றச்சாட்டுகள் எழுந்த உடன் The Telegraph செய்திக்கு தொலைப்பேசி வாயிலாக சாரங்கி அளித்த பேட்டியில், ” இந்த கொலை வழக்கில் எந்தவிதத்திலும் நான் சம்பந்தப்படவில்லை. இது தவறான மற்றும் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு ” என மறுப்பு தெரிவித்து இருந்தார்.

பிரதாப் சாரங்கி பல இடங்களில் பிற மதங்களை தவறாக பேசியுள்ளார். ஒரிசாவை சார்ந்த பத்திரிகையாளரான சந்தீப் சாஹு என்பவர் பலமுறை பிரதாப் சாரங்கியை பேட்டி எடுத்துள்ளார். அதில், உணர்ச்சி மேலோங்க இந்தியாவை மதம் மாற்றும் கிறிஸ்தவ மிஷினரிகளை ” ஈவில் டிசைன் ” என தெரிவித்ததாக கூறியுள்ளார்.

பிரதாப் சாரங்கி தன் மீது சுமத்தப்படும் ஸ்டைன் கொலை வழக்கிற்கு மறுப்பு தெரிவித்தார். எனினும், ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் ஏழ்மையான வாழ்க்கையை வாழ்கிறார், சைக்கிளில் செல்கிறார் என புகழப்படும் பிரதாப் சாரங்கி வன்முறை குற்ற வழக்குகள் கொண்டவர் என்பதையும், அவரின் கடந்த காலத்தை பற்றி பெரிதும் அறியாமல் இவ்வாறு புகழ்பாடுவது எவ்விதத்தில் சரியான ஒன்றாக இருக்கும்.

Proof :

Pratap Sarangi: India social media hero minister’s dubious past

In the age of fake news, flashback to first kill

The Staines case

http://myneta.info/LokSabha2019/candidate.php?candidate_id=9918

Bajrang Dal minister battles Staines controversy

Staines murder accused not Bajrang Dal activists: CBI

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button