உ.பியில் மைனர் பெண்ணைக் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கயவர்கள் !

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மைனர் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததோடு, அதனை செல்போனில் படம் படித்த கொடூரமான சம்பவம் நிகழ்ந்து உள்ளதாக ” Hindu post ” என்ற இணையதளத்தின்(ஆங்கில) செய்தியை யூடர்ன் ஃபாலோயர்கள் சிலர் அனுப்பி, செய்தியின் உண்மைத்தன்மையை அறிந்து கூறுமாறு கேட்டுக் கொண்டனர்.

Advertisement

Hindu post இணையதளத்தில் செப்டம்பர் 23-ம் தேதி வெளியான செய்தியில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் புல் அறுக்க சென்ற 16 வயது பெண்ணை மூன்று முஸ்லீம் இளைஞர்கள் தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததோடு, அதனை படம் பிடித்து உள்ளதாகவும் வெளியிட்டு உள்ளனர்.மேலும், அந்த வீடியோவில் ” வன்புணர்வு செய்ய வந்தவர்களின் அல்லாவின் பெயரால் என்னை விட்டு விடுங்கள் எனக் கூறியும் கயவர்கள் அப்பெண்ணை வன்புணர்வு செய்து உள்ளதாக ” குறிப்பிட்டு உள்ளனர்.

எனினும், அந்த இணையதள செய்தியில் அதுதொடர்பான அளிக்கப்பட்ட breakingtube லிங்க் வேலை செய்யவில்லை. மேலும், செய்தியை பகிர்ந்ததற்காக குஷி சிங் என்பவருக்கு நன்றி தெரிவித்து அவரின் ட்விட்டர் லிங்கை கொடுத்து இருந்தனர். அதில் சென்று பார்க்கையில் புகைப்படத்தை மட்டும் பகிர்ந்து மேற்கூறியது போன்று பதிவிட்டு இருந்தார். மேலும், வீடியோ தன்னிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

கூட்டு பாலியல் வன்புணர்வு : 

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் சராய் அகில் பகுதிக்கு அருகே உள்ள கிராமத்தில் மைனர் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கால்நடைக்கு புல் அறுக்க சென்ற பெண்ணை மொஹமத் நசீம், மொஹமத் சோட்கா, பட்கா ஆகிய மூன்று இளைஞர்கள் சேர்ந்து அருகே இருந்த பகுதிக்கு தூக்கிச் சென்று வன்புணர்வு செய்யும் பொழுது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அதில், இருவர் சகோதரர்கள் எனக் கூறப்படுகிறது.

தனக்கு நிகழ்ந்த கொடூரத்தை பாதிக்கப்பட்ட பெண் மற்றவர்களிடம் கூறிய பிறகு கிராம மக்கள் ஒன்று சேர்த்து பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்யும் பொழுது வீடியோ எடுத்த இளைஞர் மொஹமத் நசீம்(20)-ஐ கடுமையாக தாக்கியுள்ளனர். அந்த வீடியோவும் ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் நிகழ்ந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த பொழுது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் அப்பெண்ணின் குடும்பத்தினரிடம் தவறாக நடந்து கொண்டதாக கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து, காவல் நிலையத்திற்கு எதிராக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் பிறகே, மைனர் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு பதியப்பட்டது விசாரணை துவங்கியுள்ளது. தவறாக நடந்து கொண்ட காவல் நிலைய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக ஏ.என்.ஐ செய்தி தெரிவித்து இருக்கிறது.

மூன்று இளைஞர்களில் ஒருவரை மட்டுமே போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற இரண்டு பேரும் தலைமறைவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். தனிப்படை அமைத்து அவர்களை தேடி வருவதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அப்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், அவருக்கு இழப்பீடு தொகையாக 4.12 லட்சம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக டைம்ஸ் ஆஃப் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நமக்கு கிடைத்த தரவுகளில், உத்தரப் பிரதேசத்தில் மைனர் பெண்ணை மொஹமத் நசீம், மொஹமத் சோட்கா, பட்கா என்ற மூன்று இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததோடு, செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளார். வீடியோ எடுத்த மொஹமத் நசீமை ஊர் மக்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். காவல்துறை அவரை கைது செய்துள்ளது.

மேலும், வீடியோ குறித்த செய்திகள் நமக்கு கிடைக்கவில்லை என்பதால் Hindu post தளத்தில் உள்ள புகைப்படம் மற்றும் வார்த்தைகள் குறித்து உறுதி செய்ய முடியவில்லை. அது குறித்து செய்திகளிலும் குறிப்பிடவில்லை. அதனால், ஆதாரம் இல்லாமல், அல்லா பெயரை சொல்லியும் விடவில்லை என்று சொல்வது உள்நோக்கமாக மத ரீதியான வேறுபாட்டை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

எதுவாயினும், நிகழ்ந்த சம்பவம் அநீதி என அறிந்தால் போதும். ஒரு பெண்ணை தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கயவர்கள் அதனை வீடியோ எடுக்கவும் செய்த அநீதி இங்கு அரங்கேறியுள்ளது உள்ளது என்றால் இதற்கு முன்பு நிகழ்ந்த பாலியல் வன்புணர்வு சம்பவங்கள், தண்டனைகள் சிறிதும் அவர்களுக்கு அச்சத்தை அளிக்கவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

எத்தனை சட்டங்கள் வந்தாலும் பெண் பிள்ளைகளுக்கு நிகழும் கொடுமைகளுக்கு என்று தான் விடிவு காலம் எனத் தெரியவில்லை.

Links : 

UP minor gang-raped by three men, filmed; one accused held

UP Teen Gang-Raped By 3 Men, Who Filmed Act. Accused Thrashed, 2 On Run

Minor girl raped and filmed in UP’s Kaushambi, one arrested

up-minor-raped-by-3-men-in-kaushambi-act-filmed

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button