சிவகார்த்திகேயன் வாரிசு நடிகரா ? தமிழக சினிமா பற்றி ஒன்றும் தெரியாத வடஇந்திய ஊடகம் !

லைவ் மின்ட் எனும் வடஇந்திய செய்தி ஊடகம், இந்தி சினிமா மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்களிலும் சினிமாத்துறையில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் இருப்பதாக ” தென்னிந்திய திரைத்துறையில் நெபோடிசம் பற்றி அதிகம் பேசப்படவில்லை ” எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

Archive link 

நெபோடிசம் எனும் வார்த்தை இந்தி திரைத்துறையை மையப்படுத்தி அதிகம் பேசப்பட்டதை அறிவோம். வாரிசு நடிகரிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் மற்றவர்களின் வாய்ப்புகளோ அல்லது திறமையோ மறுக்கப்படுவதாக இந்தி திரைத்துறையில் இருந்து பலமுறை குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், இந்தி திரைத்துறையில் மட்டும் நெபோடிசம் இல்லை, தென்னிந்திய மாநிலங்களிலும் நெபோடிசம் பிரச்சனை இருப்பதாக லைவ் மின்ட் இணையதளம் கட்டுரை வெளியிட்டது.

அக்கட்டுரையில் முதன்மையாக தெலுங்கு சினிமாவில் உள்ள வாரிசு நடிகர்களின் பெயர்கள் பெரிய அளவில் இடம்பிடித்தன. பின்னர், மலையாளம், கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் உள்ள வாரிசு நடிகர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய சார்ட் வெளியிடப்பட்டு உள்ளது.

அதில், தமிழ் திரைத்துறையில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜாவின் மகன் நடிகர் தனுஷ் பெயர் இடம்பெற்று உள்ளது. ஆனால், தனுஷின் அண்ணன் இயக்குநர் மற்றும் நடிகருமான செல்வராகவன் பெயருக்கு பதிலாக நடிகர் சிவகார்த்திகேயன் பெயரை வெளியிட்டு இருக்கின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் எந்தவொரு பின்புலமும் இன்றி நிகழ்ச்சி தொகுப்பாளர், காமெடியன் எனத் தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் பெரிய நடிகராக உயர்ந்து இருக்கிறார். அவரின் பெயரை நெபோடிசம் எனும் தலைப்பில் வெளியிட்டு இருப்பது அபத்தமான செயல்.

தமிழ் திரைத்துறையில் உள்ளவர்கள் பற்றி ஒன்றும் தெரியாமல் நெபோடிசம் என்ற தலைப்பில் சிவகார்த்திகேயன் பெயரை சேர்ந்தது சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கும், கண்டனத்துக்கும் உள்ளாகி வருகிறது.

Please complete the required fields.




Back to top button
loader