‘இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்’: இந்தியாவில் வலதுசாரிகள் பரப்பிய வதந்திகளின் தொகுப்பு !

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ‘ஹமாஸ் அமைப்பினர்’ கடந்த அக்டோபர் 07 அன்று இஸ்ரேல் மீது நடத்திய பயங்கர தாக்குதலில், சுமார் 1300 மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 260 பேர் ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள். இதையடுத்து, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனம் தரப்பிலிருந்து சுமார் 2300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கிடையில் காசா மருத்துவமனையின் மீது குண்டு வீசப்பட்டதில் 500 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியான செய்தி உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மருத்துவமனையின் மீது நாங்கள் குண்டு வீசவில்லை என இஸ்ரேல் மறுத்து வருகிறது.

இந்நிலையில், இந்திய சமூக ஊடகங்கள் முழுவதும் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் என்ற பெயரில் பல செய்திகள் வைரலாகப் பரவி வருகின்றன. அவற்றின் உண்மை தன்மையை ஆய்வு செய்த நமது யூடர்ன் தரப்பு, இதுவரை தொடர்ச்சியாக பல செய்திகளை வெளியிட்டுள்ளது.

மேலும் பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ததில், பாலஸ்தீனத்திற்கு எதிராகவும்,  இஸ்ரேலுக்கு ஆதரவாகவுமே, பல்வேறு போலி செய்திகளை வலதுசாரிகள் தங்களது சமூக ஊடக பக்கங்களில் பரப்பி வருகின்றனர் என்பதையும் அறிய முடிந்தது.

போரில் காயம் அடைந்தது போல் நடிக்கும் பாலஸ்தீனியர்கள் எனப் பரவும் வீடியோ:

பாலஸ்தீனியர்கள் காயங்கள் ஏற்பட்டது போல சிவப்புநிற சாயங்களை பூசிக் கொண்டு நடிக்கின்றனர் என்று கூறி மக்கள் கூட்டமாக சேர்ந்து மேக்கப் செய்து கொள்வது போன்ற, 26 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. இந்த வீடியோ குறித்து ஆய்வு செய்ததில் இது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பழைய விழிப்புணர்வு வீடியோ என்பதை அறிய முடிந்தது

Twitter Link

மேலும் இந்த வீடியோ பிரெஞ்சு தொண்டு நிறுவனம் ஒன்று மருத்துவர்களுடன் சேர்ந்து காசா ஒப்பனை கலைஞர்களைப் பயன்படுத்தி நிகழ்ச்சி ஒன்றை நடத்தியபோது எடுக்கப்பட்டது. இப்பொய்யான வீடியோவை வலதுசாரி ஆதரவாளர்கள் இந்திய அளவில் பல்வேறு மொழிகளில் பரப்பி உள்ளனர்.

மேலும் படிக்க: பாலஸ்தீனர்கள் போரில் காயம் அடைந்தது போல நாடகம் ஆடுவதாகத் தவறாகப் பரவும் பழைய விழிப்புணர்வு வீடியோ !

இஸ்ரேல்-பாலஸ்தீன போரில் குழந்தையை கொல்வது போல் எடுக்கப்பட்ட போலியான வீடியோ எனப் பரவும் செய்திகள்:

‘Empty Place’ என்ற பாலஸ்தீனிய குறும்படத்தின் காட்சிகளை, குழந்தையை கொல்வது போல் ஹமாஸ் அமைப்பினர் திட்டமிட்டு போலி வீடியோக்கள் எடுப்பதாகக் கூறி வலதுசாரிகள் இந்திய அளவில் தவறாகப் பரப்பி இருந்தனர்.

மேலும் படிக்க: இஸ்ரேல்-பாலஸ்தீன போரில் குழந்தையை கொல்வது போல் போலியான வீடியோ எடுப்பதாகப் பரவும் பழைய குறும்பட வீடியோ !

இஸ்ரேல் பிரதமர் தனது மகனை போர்முனைக்கு அனுப்பியதாகப் பரவும் பழைய புகைப்படம்:

“இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தமது மகனை ஒரு இராணுவ வீரனாக போர்முனைக்கு அனுப்பி இருக்கிறார்! (இஸ்ரேலில் கட்டாயம் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பது சட்டம்!”) என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது. இதனை ஆய்வு செய்ததில் இஸ்ரேல் பிரதமரின் இளைய மகன் அவ்னர் நெதன்யாகு 2014 டிசம்பரில் இராணுவ பயிற்சிக்குச் செல்லும்போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

மேலும் படிக்க: இஸ்ரேல் பிரதமர் தனது மகனை போர்முனைக்கு அனுப்பியதாகப் பரவும் பழைய புகைப்படம் !

பாலஸ்தீன விசயத்தில் இந்திய முஸ்லீம்களை விமர்சித்த கத்தார் அரசர் எனப் பரவிய தவறான செய்திகள்:

இஸ்ரேலுக்கும், காசா பகுதில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் போர் நடைபெற்று வரும் சூழலில், இந்திய முஸ்லீம்களை கத்தார் அரசர் விமர்சித்ததாக கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் இந்திய அளவில் வலதுசாரிகளால் வைரலாகப் பரப்பப்பட்டது.

இதனை ஆய்வு செய்ததில் இது 2017-இல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும், இது அரபு மொழியிலிருந்து தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிந்தது.

மேலும் படிக்க: பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக எரிவாயு விநியோகத்திற்கு தடை, இந்திய முஸ்லீம்களை விமர்சித்த கத்தார் அரசர் எனப் பரவும் பொய்கள்

காசா முஸ்லீம்கள் எகிப்துக்குள் நுழைய எல்லை சுவரைத் தாண்ட முயல்வதாகப் பரவிய போலி செய்திகள்:

காசா மக்கள் எகிப்து நாட்டுக்குள் நுழைய முயற்சி செய்து வருவதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது. இதனை ஆய்வு செய்ததில் 2021, மே மாதத்தின் போது காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனான் மக்கள் போராடியபோது, லெபனான்-இஸ்ரேல் எல்லையில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை அறிய முடிந்தது.

மேலும் படிக்க: காசா முஸ்லீம்கள் எகிப்துக்குள் நுழைய எல்லை சுவரைத் தாண்ட முயல்வதாகப் பரவும் பழைய லெபனான் வீடியோ !

இஸ்ரேலிய கல்லூரி பெண், இந்திய ஜேஎன்யு கல்லூரி ஆணின் புகைப்படம் என இந்து மக்கள் கட்சி பரப்பிய பொய்:

இஸ்ரேல் குறித்து இந்து மக்கள் கட்சியின் பதிவில் உள்ள இஸ்ரேல் கல்லூரி பெண் எனும் புகைப்படம் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தது அல்ல, அது புகைப்பட விற்பனை தளங்களில் விற்கப்படும் புகைப்படம் என்பதையும், ஜே.என்.யு மாணவர் எனும் புகைப்படத்தில் உள்ளவர் கொல்கத்தாவைச் சேர்ந்த பேஷன் ஸ்டைலிஸ்ட் என்றும், அவர் ஜே.என்.யு மாணவர் அல்ல என்பதையும் அறிய முடிந்தது.

மேலும் படிக்க: இஸ்ரேலிய கல்லூரி பெண், இந்திய ஜேஎன்யு கல்லூரி ஆணின் புகைப்படம் என இந்து மக்கள் கட்சி பரப்பும் பொய் !

பாலஸ்தீனியர்கள் இறுதி சடங்கு நடத்துவதைப் போல போலி நாடகம் ஆடுகின்றனர் எனப் பரவும் செய்திகள்:

சிறுவன் ஒருவன் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலுக்கு பலியானதாக கூறி, சில பாலஸ்தீனியர்கள் அவனது உடலை சுமந்து செல்லும் போது, சைரன்கள் ஒலிப்பதைக் கேட்டதும் அவர்கள் அந்த இறந்த சிறுவனின் உடலை போட்டுவிட்டு ஓடுவதைப் போன்றும், அந்த சிறுவனும் பயந்து ஓடுவதைப் போன்றும் காட்டப்பட்டுள்ள வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் அதிகமாகப் பரவியது. ஆனால் இந்த வீடியோ குறித்து ஆய்வு செய்ததில் இது கொரோனா காலத்தின் போது ஜோர்டனில் எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிந்தது.

மேலும் படிக்க: கொரோனா காலங்களில் ஜோர்டானில் எடுத்த போலி இறுதி ஊர்வல வீடியோ இஸ்ரேல்-ஹமாஸ் போருடன் தவறாக பரப்பப்படுகிறது.

ஹமாஸ் அமைப்பினர் பாராகிளைடரில் நுழைந்த போது எடுக்கப்பட்ட வீடியோ எனப் பரவிய பொய் செய்திகள்:

ஹமாஸ் அமைப்பினர் பாராகிளைடரில் இஸ்ரேலுக்குள் நுழையும் போது உயர் அழுத்த மின்கம்பியில் மோதி இறந்ததாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. அதனை ஆய்வு செய்ததில் இது தென்கொரியா நாட்டில் சுற்றுலா பயணி ஒருவர் மின்கம்பியில் மோதிய போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிந்தது.

மேலும் படிக்க: ஹமாஸ் அமைப்பினர் பாராகிளைடரில் இஸ்ரேலுக்குள் நுழையும் போது மின்கம்பியில் சிக்கியதாகப் பரவும் தென்கொரியா வீடியோ!

இந்தியாவில் அதிகரிக்கும் இஸ்லாமிய வெறுப்புப் பதிவுகள் :

2022-ல் ஆஸ்திரேலியாவின் இஸ்லாமிய கவுன்சில் ஆஃப் விக்டோரியா (ICV) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வுடன் செய்திகளை பரப்புவதில், இந்தியா முதலிடத்திலும், அதற்கு அடுத்த இடங்களில் அமெரிக்காவும், பிரிட்டனும் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளனர்.

இஸ்ரேல்-பாலஸ்தீன போர் தொடர்பாக பரவிய செய்திகளை ஆய்வு செய்த போது, இஸ்லாமியர்களின் மீதான வெறுப்புணர்வால் வலதுசாரிகள் அதிக அளவில்  பாலஸ்தீனத்திற்கு எதிராகவும், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் பல்வேறு பொய்கள் மற்றும் தவறான வீடியோக்களை பரப்பி வருகின்றனர் என்பதை தெளிவாக அறிய முடிகிறது.

ஆதாரங்கள்:

https://www.thehindu.com/news/international/israel-palestine-conflict-package/article67399012.ece

IslamicCouncilofVictoria (1)

https://apo.org.au/sites/default/files/resource-files/2022-08/apo-nid318935.pdf

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader