5 ஆண்டில் கட்சி மாறிய 405 எம்எல்ஏக்களில் 182 பேர் சேர்ந்தது பாஜகவில் – ADR அறிக்கை !

கடந்த சில ஆண்டுகளில், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், கோவா, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் கட்சியில் இருந்து எம்எல்ஏக்கள் வெளியேறி வேறொரு கட்சிக்கு மாறுவதை அதிகம் கண்டு வருகிறோம். நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி எம்எல்ஏக்கள் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் வெளியேறியதால் ஆட்சி கலைப்பு ஏற்பட்டது.
கடந்த 2016-2020-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில், இந்திய அளவில் ஒரு கட்சியில் இருந்து வெளியேறிய எம்எல்ஏக்கள் மற்றொரு கட்சிகளில் சேர்ந்து போட்டியிட்ட கட்சிகளின் பட்டியலில் பிரதான கட்சியாக இருப்பது பாரதிய ஜனதா கட்சி என ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் வெளியிட்ட ஆய்வு தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் ஒரு கட்சியில் இருந்து வெளியேறி மற்றொரு கட்சியின் சார்பாக போட்டியிட்ட 443 எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களின் தேர்தல் பிராமண பத்திரங்களை ஆய்வு செய்து வெளியிட்ட தகவலில், மீண்டும் போட்டியிட்ட 405 எம்எல்ஏக்களில் 182 பேர்(44.9%) பாஜகவில் இணைந்து போட்டியிட்டுள்ளனர். இரண்டாம் இடத்தில் உள்ள இந்திய தேசிய காங்கிரசில் 38 பேரும் (9.4%), மூன்றாம் இடத்தில் உள்ள தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் 25 பேரும் (6.2%) இணைந்து உள்ளனர்.
தமிழகத்தைச் பொறுத்தவரையில், திமுகவில் 3 எம்எல்ஏக்களும் மற்றும் அதிமுக கட்சியில் 2 எம்எல்ஏக்களும் கட்சி மாற்றி போட்டியிட்டு உள்ளனர்.
இந்த காலக்கட்டத்தில், கட்சியில் இருந்து விலகி போட்டியிட்ட 405 எம்எல்ஏக்களில் இந்திய தேசிய காங்கிரஸை சேர்ந்த 170 எம்எல்ஏக்கள் (42%) பேர் வேறு கட்சிக்கு மாறியது தெரிய வந்துள்ளது. எனினும், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள்(4.4%) மட்டுமே அக்கட்சியில் இருந்து வேறு கட்சிகளுக்கு மாற்றி இருக்கிறார்கள்.
Analysis of Re-contesting MPs and MLAs Who Changed Parties-Pan-India Since 2016
Full report: https://t.co/52Uev6lUge#assemblyelection2021 #ADRReport #westbengalelections2021 #tamilnaduassemblyelection2021 #AssamElection2021 #PuducherryElections #keralaassemblyelections2021 pic.twitter.com/kqhqdVDqAQ
— ADR India & MyNeta (@adrspeaks) March 12, 2021
கட்சி மாறிய 12 மக்களவை உறுப்பினர்களில் 5 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். மாநிலங்களவையில் இருந்து விலகிய 16 எம்பிக்களில் 7 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். பல கட்சியில் இருந்து விலகிய ராஜ்யசபா எம்பிக்கள் 16-ல் 10 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர்.
இந்திய அளவில் கட்சி மாறும் எம்எல்ஏக்கள் அதிக எண்ணிக்கையில் மற்றொரு சேர்ந்து போட்டியிடும் கட்சியாக 44.9% உடன் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகளுடன் ஒப்பிடக்ககூட முடியாத உச்ச நிலையில் பாஜக இருக்கிறது.
மதிப்பு அடிப்படையில் அரசியல் இல்லாதது, பணம், அதிகாரத்திற்காக ஆசை, வலுவான தொடர்பு மற்றும் நேர்மையான தலைவர்களின் பற்றாக்குறை போன்றவையே எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கட்சி மாறுவதற்கு பின்னால் இருக்கும் மிகவும் நம்பத்தகுந்த காரணங்கள் என ஏடிஆர் தெரிவித்து உள்ளது.
Links :
Analysis of Re-contesting MPs and MLAs Who Changed Parties-Pan-India Since 2016