முதல் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் நிலை என்ன ?

இந்திய நாடாளுமன்ற தேர்தலில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிய நிலையில் அவர்கள் சந்திக்கும் முதல் தேர்தல் இது. முதல் தேர்தலில் மநீம கட்சிக்கு எந்த மாதிரியான ஆதரவு கிடைக்கும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக இருந்தது.
தமிழகத்தில் காஞ்சிபுரம் மற்றும் பெரம்பலூர் தவிர்த்து மொத்தம் 36 தொகுதிகளில் களம் இறங்கிய மக்கள் நீதி மய்யம் பல தொகுதிகளில் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் தளத்தில் அளிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் எந்தெந்த தொகுதியில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது, அவர்கள் பெற்ற மொத்த வாக்குகள், வாக்கு சதவீதம் ஆகியவற்றை தொடர்ந்து காண்போம்.
1. மத்திய சென்னை (92249)
2. வட சென்னை (103167)
3. தென் சென்னை (135465)
4. கோவை (145104)
5. ஈரோடு (47719)
6. நீலகிரி (41169)
7. பொள்ளாச்சி (59693)
8. சேலம் (58662)
9. ஸ்ரீபெரும்புதூர் (135525)
10. திருவள்ளூர் (73731)
11. திருப்பூர் (64657)
சென்னையில் மூன்று தொகுதியிலும் மக்கள் நீதி மய்யம் மூன்றாம் இடத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் 11 தொகுதிகளில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. அதிகபட்சமாக கோவை தொகுதியில் 1,45,104 வாக்குகளையும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 8,590 வாக்குகளையும் பெற்றுள்ளது. 4 தொகுதிகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்கினை பெற்றுள்ளது மக்கள் நீதி மய்யம்.
இக்கட்சி தமிழகத்தில் 36 தொகுதியில் போட்டியிட்டு பெற்ற மொத்த வாக்குகள் 15,75,620. மக்கள் நீதி மய்யம் பெற்ற வாக்கு சதவீதம் 3.63 % ஆகும். கமலின் மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்றத்தில் நாம் தமிழர் கட்சிக்கு இணையான வாக்கினை பெற்றுள்ளனர்.
புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட்ட டாக்டர்.எம்.ஏ.எஸ் சுப்ரமணியன் 38,068 (4.81%) வாக்குகளை பெற்று உள்ளார். புதுச்சேரியில் கமலின் மக்கள் நீதி மய்யம் மூன்றாம் இடத்தை பிடித்து உள்ளது.
(நன்றி : இளையதலைமுறை)
Proof :
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.