குப்பை மூட்டைகளை கடற்கரையிலேயே விட்டு சென்றாக வெளியான செய்தி.. மறுக்கும் பாஜக !

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு பாஜகத் தலைவர் அண்ணாமலை, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக நிர்வாகிகள் இணைந்து சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் குப்பைகளை அகற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், குப்பைகளை அகற்றிய புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட பிறகு அகற்றிய குப்பை மூட்டைகளை அங்கேயே விட்டு சென்றதாக சன் நியூஸ் சேனல் செய்தி வெளியிட்டது.
#NEWSUPDATE | குப்பைகளை அகற்றி, கடற்கரையிலேயே விட்டுச்சென்ற பாஜகவினர்!#SunNews | #BJP | #NarendraModi pic.twitter.com/LfBI7Bfq5V
— Sun News (@sunnewstamil) September 17, 2021
ஆனால், இதற்கு தமிழ்நாடு பாஜகவின் செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தன் ட்விட்டர் பக்கத்தில், ” தவறான செய்தி. குப்பையை அகற்றி முடித்து மூட்டைகளில் குவித்து பின் மாநகராட்சி குப்பை வண்டியை வரவழைத்து கட்சியினரே ஏற்றி அனுப்புவித்தனர். உள்நோக்கத்தோடு பதிவிட்ட இந்த பொய் செய்தியை அகற்றுவீர்களா? வருத்தம் தெரிவிப்பீர்களா? ” எனப் பதிவிட்டு இருக்கிறார்.
தவறான செய்தி. குப்பையை அகற்றி முடித்து மூட்டைகளில் குவித்து பின் மாநகராட்சி குப்பை வண்டியை வரவழைத்து கட்சியினரே ஏற்றி அனுப்புவித்தனர். உள்நோக்கத்தோடு பதிவிட்ட இந்த பொய் செய்தியை அகற்றுவீர்களா? வருத்தம் தெரிவிப்பீர்களா? @GunasekaranMu அவர்களே?@annamalai_k @VinojBJP @Murugan_MoS https://t.co/qNu7xjTfIC pic.twitter.com/PUYkBRjP8f
— Narayanan Thirupathy (@Narayanan3) September 17, 2021
இதேபோல், தமிழ்நாடு பாரதிய ஜனதா இளைஞரணித் தலைவர் வினோஜ் தன் ட்விட்டர் பக்கத்தில், ” கடற்கரையோரத்தில் உள்ள குப்பை சேகரித்த பிறகு அங்கிருந்த மீனவர்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக கேக் வெட்டி கொண்டாடும் சமயத்தில் எப்போதும் பாஜகவை குறை சொல்லும் நோக்கோடு எடுக்கப்பட்ட புகைப்படத்தின் பதிவு இது!அனைத்து பைகளும் எங்கள் நிர்வாகிகளால் மாநகராட்சி வண்டியில் ஏற்றி அனுப்பப்பட்டன ” எனப் பதிவிட்டு இருக்கிறார்.
கடற்கரையோரத்தில் உள்ள குப்பை சேகரித்த பிறகு அங்கிருந்த மீனவர்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக கேக் வெட்டி கொண்டாடும் சமயத்தில் எப்போதும் பாஜகவை குறை சொல்லும் நோக்கோடு எடுக்கப்பட்ட புகைப்படத்தின் பதிவு இது!அனைத்து பைகளும் எங்கள் நிர்வாகிகளால் மாநகராட்சி வண்டியில் ஏற்றி அனுப்பப்பட்டன https://t.co/MHPWwSPgQk pic.twitter.com/M2QSlB3M2P
— Vinoj P Selvam (@VinojBJP) September 17, 2021
ஆனால், ” சன் நியூஸ் செய்தி வெளியிட்டது காலை 9.47 மணிக்கு, குப்பை மூட்டைகளை பாஜகவினர் அகற்றியதாக நாராயணன், வினோஜ் உள்ளிட்டோர் வெளியிட்ட புகைப்படத்தில் இருக்கும் நேரம் 10.12 மணியில் இருந்து என ட்விட்டர் பதிவுகளில் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பாஜகவினர் கடற்கரையை சுத்தம் செய்தது மற்றும் அதன் பிறகு பிரதமர் மோடிக்கு வாழ்த்துக் கூறுவது போல் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை 8.26 மணிக்கு பாஜக தலைவர் அண்ணாமலையின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த ட்விட்டர் பதிவு வெளியான ஒரு மணி நேரத்திற்கு பிறகு சன் நியூஸ் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பாஜக குப்பைகளை விட்டு சென்றதாக பதிவாகி இருக்கிறது. 10 மணிக்கு மேல் குப்பை மூட்டைகளை பாஜகவினர் எடுத்துச் சென்று வண்டியில் போடும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜகவினர் தங்களை பற்றி தவறான தகவல்களை பரப்புவதாக மறுத்து வருகிறது. இன்றைய நாளில், பாஜகவினர் கடற்கரையில் குப்பைகளை அகற்றிய புகைப்படங்கள் ட்விட்டர் தளத்தில் பெரும் விவாதத்தையே உருவாக்கி விட்டது.