மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டமே இல்லை என்ற எம்.பி தேஜஸ்வி சூர்யா.. தரவுகள் கூறுவதென்ன ?

பிப்ரவரி 9-ம் தேதி மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்ற கர்நாடகா பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா பேசுகையில், ” மோடிக்கு முன்பு இரட்டை இலக்கத்தில் பணவீக்கம் இருந்தது. இப்போது ஒற்றை இலக்கத்தில் பணவீக்கம் இருக்கிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி) முன்பு ரூ.110 லட்சம் கோடியாக இருந்தது. மோடிக்கு பிறகு மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.230 லட்சம் கோடியாக உள்ளது. மோடிக்கு முன் இந்தியாவின் ஏற்றுமதி ரூ.2.85 லட்சம் கோடியாக இருந்தது. மோடிக்கு பிறகு ரூ.4.7 லட்சம் கோடியாக உள்ளது.

Advertisement

ஜிடிபி பல மடங்கு அதிகரித்து இருந்தால், அன்னிய நேரடி முதலீடு(FDI) பல மடங்கு அதிகரித்து இருந்தால், யூனிகார்ன்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து இருந்தால், எப்படி வேலையில்லா தலைமுறை இருக்க முடியும் ? காங்கிரஸ் கட்சியும் அதன் பரம்பரைத் தலைவர்களும் தங்களின் அரசியல் வேலைவாய்ப்பின்மையை நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் எனக் குழப்பிக் கொள்கிறார்கள். கடின உழைப்பால் மற்றும் திறமையானவர்களுக்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளன ” எனப் பேசி உள்ளார்.

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் இல்லை என பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா பேசிய அதே நாள் பிப்ரவரி 9-ம் தேதி ராஜ்யசபாவில் உள்துறை இணை அமைச்சர் நித்யானத் ராய் அளித்த பதிலில், ” 2018 மற்றும் 2020-க்கு இடைப்பட்ட காலத்தில் 25,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வேலையின்மை மற்றும் நிதிநெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இதில், 9,140 பேர் வேலையின்மை காரணமாகவும், 16,091 பேர் நிதி நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டதாக ” தெரிவித்து உள்ளார்.

என்சிஆர்பி தரவுகளின் படி, வேலையின்மை காரணமாக 2018, 2019, 2020 என மூன்று ஆண்டுகளில் 9,140 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.

இந்தியாவின் வேலையின்மை விகிதம் 2021 டிசம்பரில் ஏறக்குறைய 8% வரை அதிகரித்து உள்ளதாகவும், இது 2020 மற்றும் 2021ல் 7%க்கும் அதிகமாகவே இருந்தது. இந்தியாவில் 53 மில்லியன் மக்கள் வேலையில்லாமல் உள்ளனர் என இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம்(CMIE) தெரிவித்து இருந்தது.

Advertisement

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டமும், அதனால் ஏற்படும் தற்கொலைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கையில், நாட்டில் வேலையில்லா திண்டாட்டமே இல்லை என பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா பேசியது எந்தவிதத்தில் நியாயம் என கேள்விகள் எழுந்து வருகிறது.

Links : 

L.S. Tejasvi Surya | Discussion on the Union Budget for 2022-2023

india has 53 million unemployed people as of dec 2021 cmie

indians-died-by-suicide-unemployment-bankruptcy-between-2018-2020-government-informs-rajya-sabha

NCRB 2020 Report 

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button