This article is from Jan 17, 2019

மோடி ஆட்சியில் எத்தனை சாதனைகள் ! உண்மை என்ன ?

மதிப்பீடு

2014-க்கும் 2018-க்கு இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் பிரதமர் மோடியின் ஆட்சியில் பெட்ரோல், வீட்டுக் கடன் வட்டி, வரி செலுத்துவோரின் எண்ணிக்கை, விவசாயக்கடன் தொகை, அரிசி கோதுமைக்கான வரி, கிராமத்தில் கழிப்பறை வசதி, மின்சார வசதியில்லாத கிராமங்கள், இந்தியாவில் நிதி பற்றாக்குறை உள்ளிட்டவையில் நிகழ்ந்த மாற்றங்கள் பற்றிக் குறிப்பிட்ட மீம் அதிக வைரலாகி வருகிறது. அதில், உள்ளவற்றை ஒன்றன் பின் ஒன்றாக பார்ப்போம்.

பெட்ரோல் :

முந்தைய காங்கிரஸ் ஆட்சியை விட பிரதமர் மோடி ஆட்சியில் பெட்ரோல் விலை குறைந்து உள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் பெட்ரோல் விலை ஏற்றம் குறித்த செய்தியை அறியாதவர் யாருமில்லை என்பதை மறந்து விட்டனர்.

சென்னையில் 2014 ஏப்ரல் மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 74 ரூபாயாக இருந்து உள்ளது. 2018 ஏப்ரல் 19-ம் தேதி சென்னையில் பெட்ரோல் விலை 76.84 ஆக இருந்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் 2014 மே வரை ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 113 USD ஆக தொடர்ந்து உயர்வைக் கண்டதால் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 12 முறை உயர்ந்தது. ஆனால், மோடி ஆட்சியை ஏற்ற பிறகு 2015 ஜனவரி மாதத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 50 USD ஆக யாரும் எதிர்பார்க்காத வகையில் விலை குறைந்தது. 2019-ல் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 62 USD மட்டுமே. எனினும், இந்தியாவில் பெட்ரோல் விலை குறைந்தபாடில்லை.

கடந்த தேர்தல் தருணத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து பெட்ரோல் விலையை விட தற்போது உள்ள பெட்ரோல் விலை குறைவாக இருப்பதாக குறிப்பிடுகிறார்கள். ஆனால், 2014 மற்றும் 2019-ல் கச்சா எண்ணெயின் விலை பற்றி அறிய வேண்டும். தேர்தல் நேரத்தில் விலை குறைவதை அனைவரும் அறிவர்.

மேலும் படிக்க : இந்தியாவில் பெட்ரோலின் விலை ஏன் அதிகம் தெரியுமா.

வீட்டுக் கடன் வட்டி :

2014-ல் வீட்டுக் கடனுக்கான வட்டி 10.25% ஆக இருந்தது. ஆனால், 2018-ல் 8.75% ஆக குறைந்து உள்ளது எனக் கூறுகின்றனர்.

காங்கிரஸ் ஆட்சியில் வீட்டுக் கடனுக்கான வட்டி அதிகபட்சம் 10%-ல் இருந்துள்ளது. கடனுக்கான வட்டியானது கடன் வாங்கும் திட்டத்தைப் பொருத்தும், வங்கி, கடன் வாங்கும் ஆண் அல்லது பெண் ஆகியோரை பொருத்தும் மாறுபடும். காங்கிரஸ் ஆட்சியிலும் கூட வட்டி விகிதம் குறைந்து மீண்டும் ஏற்றம் கண்டது. காங்கிரஸ் ஆட்சியில் RBI Repo rate-ஐ 25 basic points அளவிற்கு உயர்த்திய போது EMI தொகையும் அதிகரித்து இருந்தது.

2018-ல் எஸ்.பி.ஐ வங்கியில் வீட்டுக் கடனுக்கான வட்டி 8.8% ஆக இருந்துள்ளது. வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் தற்போது குறைவு என்றாலும், காங்கிரஸ் ஆட்சியிலும் குறைந்து மீண்டும் உயர்ந்துள்ளது.

வரி செலுத்துவோரின் எண்ணிக்கை :

2014-ல் வரையில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 3.79 கோடியாக இருந்தது. 2017-2018 வரையில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 6.8 கோடியாக உயர்ந்து உள்ளது. இது உண்மை தான்.

எனினும், 2014-க்கு முன்பே வருமானவரி செலுத்துவோரின் சதவீதம் உயரத் துவங்கியது. 2013-14-ல் 14.24% ஆக உயர்ந்த எண்ணிக்கை 2016-ல் 6 சதவீதமாக குறைந்து மீண்டும் 2016-17-ல் 14.54% ஆக உயர்வைக் கண்டுள்ளது.

மேலும் படிக்க :  பிஜேபி ஆட்சியில் 2 லட்சம் கோடி எண்ணெய் ஒப்பந்த கடன் செலுத்தப்பட்டதா ?

விவசாயக்கடன் தொகை :

விவசாயக் கடன் காங்கிரஸ் ஆட்சியில் 6 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், மோடி ஆட்சியில் 2018-ல் 11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதில், பாதி உண்மை பாதி தவறான தகவலும் அடங்கும்.

2018-2019-க்கு இடைப்பட்ட நிதியாண்டில் விவசாயக் கடன் 11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்பது உண்மையான தகவல். ஆனால், ஆண்டிற்கு ஒரு லட்சம் கோடி என 2018-19-க்கு இடைப்பட்ட ஆண்டில் விவசாயக் கடன் 11 லட்சம் கோடி ஆக 40 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.

2013-2014 (7 லட்சம் கோடி) வரையிலான காலத்தில் விவசாயக் கடன் 100 சதவீதத்திற்கு அதிகமாகியுள்ளது. இதற்கு முந்தைய 2012-13 ஆண்டில் விவசாயக் கடன் 5.8 கோடியாக இருந்தது. அப்பொழுதே ஆண்டிற்கு விவசாயக் கடன்கள் உயர்வைக் காணத் துவங்கியது. மீம்யில் கூறியது போன்று 2014-ல் விவசாயக் கடன் 6 லட்சம் கோடி அல்ல.

அரிசி கோதுமைக்கான வரி:

அரிசி மற்றும் கோதுமைக்கான வரியை நீக்கியது மோடி அரசு எனக் கூறுவது முற்றிலும் தவறு. 2014-க்கு முன்பு வரை கோதுமை தவிர்த்து அரிசிக்கு சேவை வரி இருந்துள்ளது. 2014-15 பட்ஜெட் தாக்கலின் போது அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அரிசி மீதான சேவை வரியை நீக்குவதாக தெரிவித்தார்.

அரிசி மீதான சேவையை வரியை நீக்குவதற்கு மத்திய அரசிற்கு அழுத்தம் அளித்தது தமிழ்நாடு அரசு என்பதை அறிய வேண்டும். அப்போதைய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அரிசியின் மீதான வரியை நீக்குவது தொடர்பாக கோரிக்கையை முன்வைத்தார். ஆக, மோடி ஆட்சிக்கு முன்பே கோதுமை மற்றும் அரிசிக்கு வரிகள் நீக்கப்பட்டது.

கிராமத்தில் கழிப்பறை வசதிகள் :

2014-ல் வரையில் நாட்டில் கிராமப்புற கழிப்பறை வசதி 38% ஆகவும், 2018-ல் 90 சதவீதத்தை அடைந்து விட்டதாகக் கூறுகின்றனர். அது மிகைப்படுத்தப்பட்ட தகவல்.

2014 வரையில் இருந்த நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் இலக்காக வைக்கப்பட்ட 12.57 வீடுகளுக்கான தனி கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட இருந்தன. இதில், 2013 டிசம்பரில் 9.45 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டதாக annual report 2013-14-ல் இடம்பெற்றுள்ளது.

அதன் பின் பிஜேபி ஆட்சியில் தொடங்கப்பட்ட Swachh Bharat Mission மூலம் 8.87 கோடி வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கிராமப்புற வீடுகளில் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி தர அரசுகள் முயற்சித்தாலும் பல கிராமங்களில் கழிப்பறை வசதிகள் இல்லை என்பதே நிதர்சனம்.

Youturn துணை நிறுவனர் ஐயன் கார்த்திகேயன் இயக்கிய இருளர் ஆவணப் படத்தில் கழிப்பறை வசதிகள் இன்றி வாழுவதாக இடம்பெற்று இருக்கும்.

மின்சார வசதியில்லாத கிராமங்கள் :

கிராமப்புறங்களுக்கு மின்சார வசதி பற்றிய முரண்பட்ட தகவல்கள் அவ்வபோது ஆளும் அரசால் வழங்கப்படுவதுண்டு. Forbes பத்திரிகை வெளியிட்ட செய்தியில் இந்தியாவில் 31 மில்லியன் மக்கள் மின்சார வசதி இன்றி இருளில் வாழ்வதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 100% மின் இணைப்பு வழங்கப்பட்டது தவறான தகவல். அவ்வாறு மின் இணைப்பு வழங்கப்படும் கிராமங்களில் பொது இடங்கள், குறிப்பிட்ட வீடுகளுக்கு மட்டுமே மின் வசதி கிடைக்கிறது. மீதமுள்ளவர்கள் மின் இணைப்பு இன்றியே வாழ்கின்றனர்.

இந்தியாவில் நிதிப்பற்றாக்குறை :

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நிதிப்பற்றாக்குறை(Fiscal account deficit) அதிகம் என்பது உண்மையே. காங்கிரஸ் ஆட்சியில் 2014-ல் நிதிப்பற்றாக்குறை 4.1% ஆக இருந்துள்ளது. பிஜேபி ஆட்சியில் 2017-18-ல்  3.5% ஆக குறைந்துள்ளது. தற்போது இந்தியாவில் நிதிப்பற்றாக்குறை குறைகிறது.

10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் நிதிப்பற்றாக்குறை 3%-க்கு குறைவாகவும் சென்றுள்ளது, அதே ஆட்சியில் 6.5% தாண்டியும் சென்றுள்ளது. இவ்வாறு கடந்து 2014-15-ல் 4.1 % ஆக குறைந்து தற்போதும் குறைவாக உள்ளது.

பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவில் ஏற்படுத்திய சாதனைகள் எனக் கூறியவற்றின் உண்மை தன்மை இது தான்.

மேலும் பரவும் மீம் பற்றிய கட்டுரை : மோடி ஆட்சியில் இந்தியா வளர்ச்சி என்பது உண்மையா? உதாரா?

Income Tax Department

With 99.49 lakh new tax filers, income tax returns surge 26% in 2017-18 

Modi Announces ‘100% Village Electrification’, But 31 Million Indian Homes Are Still In The Dark

Annual report 2013-14

Swachh bharat mission

Budget 2018-2019

Budget 2013-2014

Brent Crude oil prices from 2014 to 2019 (in U.S. dollars per barrel)

Previous Price of Petrol/Gasoline

Rising petrol prices: What Narendra Modi said before 2014 and his govt did in 4 years 

Budget 2014: Rice exempted from service tax

Rice exempted from service tax 

UPA OR NDA: Who’s better for the economy? 

Home, car loan EMIs to get costlier as RBI hikes repo rate by 25 basis points

interest rate of home loans

Please complete the required fields.




Back to top button
loader