பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பணம் போடுவதாக போலிச் செய்தியை வெளியிட்ட கன்னட சேனல் !

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் பல குடும்பங்கள் நிதிச் சிக்கலில் மாட்டி தவித்து வருகின்றனர். பிரதமர் மோடி இறுதியாக வெளியிட்ட அறிவிப்பில் மக்களுக்கு நிதியுதவி குறித்த அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. அரசு தரப்பில் முயன்ற உதவிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், கன்னட மொழிச் சேனலான பப்ளிக் டிவி என்ற செய்தியில், ” நரேந்திர மோடி தலைமையிலான அரசு மக்களுக்கு ஏற்பட்டு இருக்கும் பொருளாதார பிரச்சனையைத் தீர்க்க ” ஹெலிகாப்டர் மணி” என்ற முயற்சியை கொண்டு வருகிறது. இது கடனும் இல்லை, வட்டியும் இல்லை. ஒவ்வொரு கிராமத்திலும் ஹெலிகாப்டர் மூலம் பண மழை பொழியும் ” எனக் கூறி  ஒளிபரப்பாகி இருந்தது.

இதைத் தொடர்ந்து, அத்தகவல் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. இதை உண்மை என நினைத்து கிராமங்களில் உள்ள மக்கள் வீட்டிற்கு வெளியே காத்திருத்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Twitter link | archive link

கன்னட சேனலில் வெளியான செய்தியை மறுத்துள்ளது மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம். மேலும், தவறானச் செய்தியை வெளியிட்ட பப்ளிக் டிவி நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. மக்கள் மத்தியில் குழப்பத்தையும், சமூக அமைதியையும் குலைக்கும் வகையில் இருக்கும் காரணத்தினால் டிவி சேனல் ஒளிபரப்பை ஏன் தடை செய்யக்கூடாது என்ற கேள்வி அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கு பதில் அளிக்க 10 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.

Twitter link | archive link 

மேலும் படிக்க : டிக்டாக் வீடியோவை உண்மை என நினைத்து வெளியிட்ட சன் நியூஸ் !

ஏற்கனவே கொரோனா வைரஸ் வந்ததில் இருந்து தவறான தகவல்கள், போலிச் செய்திகள் சமூக வலைதளங்களில் குவிந்து உள்ளன. இதற்கிடையில், செய்தி சேனல்களும், தவறான மற்றும் போலிச் செய்திகளை வெளியிட்டு வருவது ஏற்புடையது அல்ல.

Links :

Kannada channel served notice for programme on ‘helicopter money’

Notice against Kannada news channel for running fake news

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button