சட்டப்பிரிவு 370-க்கு எதிராக நரேந்திர மோடியின் தர்ணா புகைப்படம் | எப்பொழுது ?

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த சட்டப்பிரிவு 370-ஐ திரும்பப்பெறுவது தொடர்பான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் தாக்கல் செய்ததை பிஜேபி ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பாக சட்டப்பிரிவு 370-க்கு எதிராக நரேந்திர மோடி போராட்டம் நடத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்கின்றனர். முன்பு சட்டப்பிரிவு 370 நீக்க வேண்டும் என போராடினார், தற்பொழுது அவரின் ஆட்சியில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது என சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பாஜகவின் தலைவரான ராம் மாதவ் தன் ட்விட்டர் பக்கத்தில், மேடையில் மற்றவர்களுடன் மோடி அமர்ந்து இருக்கும் பழைய புகைப்படத்துடன் ” வாக்குறுதி நிறைவேறியது ” என ஆகஸ்ட் 5-ம் தேதி பதிவிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தில் மோடிக்கு பின்னால் இருக்கும் பேனரில் ” 370-ஐ நீக்கு, தீவிரவாத்திற்கு முடிவு, தேச பாதுகாப்பு ” (370 Hatao, Atankvad Mitao, Desh Bachao) என இடம்பெற்று உள்ளது.

Advertisement

நரேந்திர மோடி, சட்டப்பிரிவு 370-க்கு எதிராக தர்ணா நடத்திய பொழுது எடுக்கப்பட்டவை என வைரலாகும் புகைப்படம் எங்கு, எப்பொழுது எடுக்கப்பட்டது என்பது குறித்து ஆராய்ந்து பார்த்தோம். இணையத்தை ஆராய்ந்த பொழுது, 1991-92 வரையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பிஜேபி கட்சியினரால் நடத்தப்பட்ட ” Ekta Yatra ” நிகழ்வின் பொழுது எடுக்கப்பட்டவை என தெரிய வந்துள்ளது.

1991 டிசம்பர் 1-ம் தேதி Ekta Yatra ஆனது பிஜேபியின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த சமயத்தில், நரேந்திர மோடி யாத்திரையின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பிஜேபி கட்சியின் தேசிய தேர்தல் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். இந்த யாத்திரை 1992 ஜனவரி 26-ம் தேதி ஸ்ரீநகரில் உள்ள Lal chowk பகுதியில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி நிறைவடைந்தது.

வைரலாகும் புகைப்படத்தில் உள்ள பேனரில் ” சலோ காஷ்மீர் ” என எழுதப்பட்டு இருப்பதாகவும், அதே வாசகம் Ekta yatra போது மோடி மற்றும் முரளி மனோகர் ஜோஷி இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் உள்ள வாகனத்தில் இடம்பெற்று இருப்பதாக இந்தியா டுடே தளத்தில் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

மோடியின் வைரல் புகைப்படம் ஆனது உண்மையான புகைப்படம் என்பது உறுதியான தகவலே. எனினும், இப்புகைப்பமானது நாட்டின் எந்த பகுதியில், எந்த நாளில் எடுக்கப்பட்டது என சரியான விவரம் கிடைக்கவில்லை. கிடைத்த தகவல்களில் இருந்து வைரலாகும் பிரதமர் மோடியின் புகைப்படமானது Ekta yatra-வின் பொழுது எடுக்கப்பட்டவை என தெரிந்து கொள்ள முடிந்தது.

Links : 

Modi: 370 removes terrorism slogans against historic election picture / BJP rituals

‘Promise fulfilled’: Ram Madhav tweets PM Modi’s old photo of protest against Article 370

Truth behind Modi’s picture at dharna against Article 370

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Support with

Ask YouTurn

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close