நிலவில் சாய்பாபா முகம் எப்படி ?

சாய்பாபா உருவம் நிலவில் தெரிவதாக நேற்றிரவு ஒரு படத்துடன் செய்தி பரவியது. பல பேர் ரோட்டிலும் வீட்டு மாடியிலும் நின்று அண்ணாந்து நிலவை பார்த்தது மட்டும் இல்லாமல் தெரிந்தவர் அனைவருக்கும் கூப்பிட்டு ‘நிலால சாய்பாபா தெரியுறார் சீக்கிரம் பாருங்க ‘ என பகிர சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது. சிலர் அதை போட்டோஷாப் என்று தெரிந்து கலாய்த்து விட்டு சென்றாலும் பலர் உண்மையாகவே தெரிவதாக நம்பவும் செய்தனர்.

இது ஒன்றும் புதிதல்ல , இதற்கு முன்னர் கடந்த ஜூலை மாதம் பெங்குளூருவில் இதே வதந்தி பரவியது.  உண்மையில் புண்ணியம் செய்தவர்கள் கண்ணுக்கு மட்டும் தான் தெரியும் , யாருக்கு தெரியலையோ அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என செய்தி வேறு வடிவேலு காமெடியை நியாபகப்படுத்தியது.

இந்த வதந்தியில் பரப்பப்பட்ட படமானது போட்டோஷாப் மூலம் எடிட் செய்யப்பட்டது.  சரி இது எப்படி photoshop செய்ய முடியும் ? என்பதை கீழே காண்க .

உண்மையில் நிலவில் முகம் தெரியாது. சிலருக்கு தெரிவது போன்று தோன்றினாலும் அது வெறும் ஒளியியல் மாயை மட்டுமே . ஏதேனும் காட்சிகளை பார்க்கும் போது அதனை ஒற்றுமைப்படுத்தி மூளையானது உருவகத்தை வடிவமைத்து கொள்ள்கிறது. நிலவில் காதலியின் முகம் தெரிவதாக கூறுவதும் இது தான்.

நேற்றிரவு எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படம் கீழே :
அதெல்லாம் ஒன்றும் தெரியவில்லை , இது இப்போ எடுத்தது என்கிறார் வசந்தகுமார் .
நேற்று இரவு முகநூலில் வெளியிட்டுள்ளார் .

Photo Courtesy: N.Vasanthakumar

நாங்களும் நேற்று இரவு நிலவை பார்த்தபோது எங்களுக்கு தெரிந்தது இது தான் .

Please complete the required fields.
Back to top button